திண்ணை அட்டவணை- அக்டோபர் 13, 2002

This entry is part [part not set] of 35 in the series 20021022_Issue


அமெரிக்க துணை அதிபர் டிக் செய்னியின் ஹாலிபர்ட்டன் கம்பெனி ஈராக்கினால் பெற்ற வியாபார அளவு : 23.8 மில்லியன் டாலர்கள்

இந்த வியாபரம் நடந்த ஆண்டு : 1998-99

குர்து இனத்தவரின் மீது சதாம் உசேன் விஷவாயு செலுத்திய வருடம் : 1988

இராக்கிடம் உள்ள அணுகுண்டுகள் : 0 (பூஜ்யம்)

மத்திய கிழக்கு தேசங்களில் எண்ணெய் இருப்புகளில் ஈராக்கின் இடம் : 2

பத்து வருடப் பொருளாதாரத்தடையினால் ஈராக்கில் இறந்திருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை : ஐந்து லட்சம்

அமெரிக்க வர்த்தக மையங்களின் மீதான விமானத் தாக்குதலில் பங்கு பெற்ற ஈராக்கியர்கள் : 0

1978-1988-ல் ஈராக்கிற்கு ஏழு விதமான ஆந்த்ராக்ஸ் கிருமிகளை விற்ற நாடு : அமெரிக்கா

குவைத் ஈராக்கின் ஒரு பகுதி என்று ஈராக் அறிவித்த ஆண்டு :1930

அமெரிக்கா ஈராக் யுத்தத்திற்கு அமெரிக்கா நேரடியாய்ச் செலவு செய்யக் கூடிய தொகை: 23 பில்லியன் டாலர்கள்

குவைத் ஈராக்கின் ஒரு பகுதி என்று ஈராக் அறிவித்து போர் தொடுக்க முயன்ற ஆண்டு (1990-க்கு முன்னால்) : 1939.

1994-ல் வட கொரியா தென் கொரியா மீது போர் தொடுக்காமல் இருப்பதற்காக அமெரிக்கா-ஜப்பான் தரும் உதவித் தொகை – 4.6 பில்லியன் டாலர்கள்

இந்த உதவித் தொகையில் அமைக்கப் படவிருக்கும் அணுமின் உற்பத்தி நிலையங்கள் : 2

அணுகுண்டு தயாரிக்க முடியும் / தயாரிக்கிறோம் என்று வட கொரியா ஒப்புக் கொண்ட ஆண்டு : 2002

மேல்கரை என்ற இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் பகுதியைச் சுற்றி இஸ்ரேல் அமைக்கவிருக்கும் வேலிக்கு செலவு , உத்தேசமாக : இரண்டரை மில்லியன் டாலர்கள்

இஸ்ரேலில் நடக்கவிருக்கும் குடியேற்றத்தில் குடியுரிமை பெறப் போகும் யூதர்களின் எண்ணிக்கை : பத்து லட்சம்

அமெரிக்காவில் அணுக்கதிரியக்கப் பொருட்களை வைத்திருக்க அரசு அனுமதி பெற்ற கம்பெனிகளின் எண்ணிக்கை : 67,000

குடிநீர்ப் பிரசினையை எதிர்கொள்ளும் உலக மக்கள் ; ஐவரில் இருவர்.

2002 தேர்தலில் சதாம் உசேன் ஈராக்கின் ஜனாதிபதியாக இன்னும் ஏழு வருடங்கள் தொடர்வதற்கு வாக்களித்தவர்கள்: 100 சதவீதம்

சீனாவில் மரண தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்த கிருஸ்தவ பாதிர்யார்களின் எண்ணிக்கை : 37

உடனடியாக மீண்டும் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை : மூவருக்கு ஆயுள் தண்டனை

மீதமுள்ள நால்வருக்கு வழங்கப்பட்ட தண்டனை : கடும் உழைப்பு முகாம்.

உலக சுகாதார அமைப்பின் படி , யுத்தம், கொலை மற்றும் தற்கொலையினால் சாகும் உலக மக்களின் எண்ணிக்கை : 16 லட்சம்

நேபாளத்தில் கருக்கலைப்பு சட்டபூர்வமாய் ஆன ஆண்டு : 2002

Series Navigation