திண்ணை அட்டவணை 4

This entry is part [part not set] of 11 in the series 20000618_Issue


இந்தியாவின் பாதுகாப்புக்கான செலவு இந்த வருடம் அதிகமாகும் தொகை சதவீதம் : 28 %

ஐ. நா . அமைதிப் படையில் மிகுந்த எண்ணிக்கையில் படை வீரர்களை அனுப்பித்தந்த நாடு : பங்களா தேசம்.

அடுத்த படி அதிக எண்ணிக்கை : போலந்து.

உகாண்டாவின் கள்ளச் சந்தையில் ஏகே-47 துப்பாக்கியின் விலை: ஒரு கோழி

நியூ யார்க் ஸ்லோவன்-கெட்டரிங் மருத்துவ மனையில் ஒரு நாள் ‘சிறப்பு அறையின் ‘ வாடகை : 2800 டாலர் (ஒரு லட்சம் ரூபாய்)

மாசுப் பரவலால் சீனாவில் கோதுமை குறைந்த அளவு : (1994-1996-ல்) : 10000 டன்கள்.

அதே சமயம் சீனா இறக்குமதி செய்த கோதுமை : 10000 டன்கள்.

1969க்கும் 1998க்கும் இடையில் விமானக் கடத்தல் குறைந்த சதவீதம் : – 89 %

1997-1998-ல் உலகில் காலரா நோயால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமான சதவீதம் : 99% (கிட்டத்தட்ட இரண்டு மடங்கு)

அமெரிக்காவில் 100 வயதைத் தாண்டியவர்களின் எண்ணிக்கை (கிட்டத் தட்ட) : 62,000

1983-ல் அமெரிக்காவில் பாதியளவு மக்களைச் சென்றடைந்த ரேடியோ டெலிவிஷன் கம்பெனிகள் : 50

1999-ல் அமெரிக்காவில் பாதியளவு மக்களைச் சென்றடைந்த ரேடியோ டெலிவிஷன் கம்பெனிகள் : 6

சாஹாரா பாலைவன ஆப்பிரிக்கப் பகுதியில் எய்ட்ஸ் நோயால் சாகும் வயது சராசரி : 45

 

 

  Thinnai 2000 June 18

திண்ணை

Series Navigation