திண்ணையில், எச். ஜி. ரசூல் மதங்கள் குறித்து

This entry is part [part not set] of 34 in the series 20070419_Issue

பிரகாஷ் தேவராஜு


April 12 திண்ணையில், எச். ஜி. ரசூல் மதங்கள் குறித்த கருத்துக்களை மிகவும் அழகாகத் தொகுத்துள்ளார். வரலாற்றுப் பின்னணியில் நோக்கினால், அனைத்து மதங்களும் வலியுறுத்த நினைப்பது ஒன்றே என்பது தெற்றென புரியும்படி விளக்கியுள்ளார். இருப்பினும், சைவம் உயர்ந்த நிலையை எட்டியதற்து, அது அஹிம்சாவாத பாதையென்பது மிக முக்கிய காரணமென்று நினைக்கின்றேன். நான் சைவத்தை சார்ந்தவன் இல்லையெனினும், சைவம் பிறவுயிர்களை கொல்வது தவறென்று கூறுவதால் ஏதோ ஒரு வகையில் மேம்பட்டதெனத் தோன்றுகிறது. விலங்குகளின் உயிரினை பலியிடுதலுக்கு வரலாறு சாட்சியாகயிருக்கலாம். ஆனால் அது சரியா தவறா என்ற கேள்விக்கு என்னால் விடையளிக்க முடியவில்லை. இது குறித்து சிந்தனையாளர்கள் திண்ணையில் விவாதிக்க வேண்டுமென்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.


Series Navigation

பிரகாஷ் தேவராஜு

பிரகாஷ் தேவராஜு