பத்ரிநாத்
வாசந்தியின் கட்டுரையும் அதைத் தொடர்ந்த பெரியசாமியின் பதில் கட்டுரையும் இந்தப் பிரச்சனையின் இன்னுமொரு பரிமாணத்தைப் பற்றிப் பேசவில்லை. ஏன் இந்த
வேஷம் ? இதன் தொடக்கப் புள்ளி எங்கிருந்து வந்தது என்றவுடன் உடனடியாக ஜஸ்டிஸ் பார்ட்டி, திராவிட இயக்கம் என்று சிலர் சொல்லிவிடலாம். ஆனால் அதுதான் உண்மையா.. ? உவேசாவையோ, மகாகவியையோ திராவிட தேசம் பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். அவர்கள் கூறும் குற்றச்சாட்டோ, இவர்கள் வள்ளுவனையோ, இளங்கோவடிகளையோ கம்பனைப் போல கொண்டாடுகிறார்களா என்பதுதான்… கம்பனைப் போற்றக் காரணம் அவர் ராமகாதை- ஆரியக் கடவுளைப் பற்றி எழுதியதால் பார்ப்பனர்கள் தலையில் தூக்கி வத்துக் கொண்டு ஆடினார்கள் என்கிறார்களே. இதற்கு என்ன பதில்..
ஆக ஒன்று தெரிகிறது. இரு புறமும் கூரான கத்தியைப் போல உள்ள வேஷம் (அறிஞர் அண்ணா பாணியில்)… காலங்காலமாய் வளர்ந்து செழித்து விருட்சமான வேஷம். சாதியில் தாழ்ந்தவன் படித்தால் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொன்ன காலத்தில் இருந்து வளர்ந்து வந்த வேஷம். தலைமுறைகள் கடந்து வந்த இந்த வேஷம், வரும் தலைமுறையிலாவது மறையும் அல்லது குறைந்த பட்சம் குறையும் என்று நம்புவோம்.
–பத்ரிநாத்
prabhabadri@yahoo.com
- பெரியபுராணம் – 44 ( திருக்குறிப்புத்தொண்டர் புராணம் தொடர்ச்சி )
- அஞ்சலி -பிரபல எழுத்தாளரும் மருத்துவத்துறை பேராசிரியருமான அமரர் செல்லத்துரை சிவஞானசுந்தரம் (நந்தி)
- தலைமுறைகள் கடந்த வேஷம்
- பெண்கள் சந்திப்பு மலர் விமர்சனக் கூட்டம் ஜூன் மாதம் 26ம் திகதி ஸ்காபுரோ சிவிக் சென்றர் அறிவித்தல்.
- புலம் பெயர்ந்த கடவுளர்கள்
- மலேசிய இலக்கியங்களின் சுய அடையாளம்.
- பிரதிக்கு எதிரான கலகம்
- தமிழ் சினிமாவில் ‘படித்தவர்கள் ‘
- அனைத்துலக தமிழிலக்கிய அடையாளத்தை முன் வைத்து தமிழவனின் மலேசிய, சிங்கப்பூர் குறித்த கருத்துக்கள்
- ஜப்பானிய யந்திர மனித உடை மனித சக்தியை அதிகரிக்கிறது
- ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) வான ஊர்திக்கு முன்னோடிச் சோதனைகள் (பாகம்-3)
- ஊக்கும் பின்னும்
- கீதாஞ்சலி (27) கதவு திறந்திருக்கிறது! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- யாமறிந்த மொழிகளிலே…
- 2 மதியழகன் சுப்பையா கவிதைகள்
- கேட்டாளே ஒரு கேள்வி
- நிழல்களின் எதிர்காலம்
- மனஹரன் கவிதைகள்
- அவுஸ்திரேலியாவில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள்
- ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பற்றி ப.ஜீவானந்தம்
- நூல் அறிமுகம் – தொல்காப்பியத் தமிழர் – சாமி சிதம்பரனார்
- புலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-3)
- திருவண்டம் – 4
- ஆண்டச்சி சபதம்
- செருப்பு
- அமானுஷ சாட்சியங்கள்..
- ஒரு சாண் மனிதன்
- குடும்பப் புகைப்படம்
- கண்மணியே! நிலாப்பெண்ணே!