ஹெச்.ஜி.ரசூல்
1. தர்காக்கள் பற்றிய சமகால இஸ்லாமிய அணுகுமுறை முற்றிலும் மார்க்க அடிப்படையில் திருக்குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களின் மீதான விவாதங்களாக நடைபெற்று வருகின்றன. கபரு சியாரக் கூடுமா கூடாதா, பெண்கள் தர்கா செல்வதற்கு அனுமதியுண்டா இல்லையா, தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் மெய்ஞானிகளை தரிசித்தல் இணைவைத்தலுக்கு ஒப்பாகுமா என்பதாக இக்கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறுகின்றன. திருக்குர்ஆனின் வசனங்களை வெவ்வேறு விதமாக அர்த்தப்படுத்துதல், ஹதீது, ஆதாரங்களின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பி தங்களுக்கு சாதகமாக்கி விவாதித்தல் என சுன்னத்துல் ஜமாத், வகாபிகள், ஷியாக்கள், காதியானிகள் அஹலே குர்ஆனிகள் என பல்வித குழுக்களும் ஈடுபடுகின்றனர்.
இந்லையில் தர்கா வழிபாடு பற்றிய பிற பரிமாணங்களை சற்று நாம் கவனித்தாக வேண்டிய நிலையில் உள்ளோம். மனித குலம் அனுபவங்களாலும் அறிவாலும் கற்றுத் தந்திருக்கும் ஒவ்வொரு சொல்லும் செயலும் ஒற்றைத் தன்மை கொண்ட அர்த்தத்தை மட்டும் பேசுவதில்லை. இஸ்லாமிய அடிப்படைச் சொல்லாடலான லாயிலாஹா இல்லல்லாஹு கலிமா வாக்கியத்தை எடுத்துக் கொள்ளலாம். ‘இறைவன் இல்லை அல்லாவைத் தவிர ‘ – இதில் அல்லா ஒருவனே வணக்கத்திற்குரியவன் என்பதான மேற்தள அர்த்தம் நேரடியாகவும், அந்த காலகட்டமான ஏழாம் நூற்றாண்டின் அராபிய மண்ன் மக்காமாநகரில் பதூயின்கள், குறைஷிகள், ஸிமிட்டிக் உள்ளிட்ட இனமக்கள் வணங்கிய ஹோபல், மனாத், அல்லாட், அல்-உஜ்ஜா உள்ளிட்ட தெய்வங்கள் வணக்கத்திற்குரியவை அல்ல என்கிற வரலாறு சார்ந்த உள்ள அர்த்தம் மறைமுகமாகவும் உணர்த்தப்படுகிறது.
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான தொழுகையை நிறைவேற்றுதல் என்பது இறைவனை வணங்குதல் என்பதான அர்த்தத்தையும், இனத்தால், குலத்தால், செல்வத்தால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் யாரும் இல்லை, இறைவனின் முன் அனைவரும் சமம் என்பதான சமத்துவ அர்த்தத்தை இன்னொரு தளத்திலும் பேசுகிறது.
அல்லாஹு அக்பர் – அல்லா மிகப்பெரியவன் என்னும் வாசகம் அக்காலத்தில் அரேபியாவை சுற்றி அதிகாரம் செய்து கொண்டிருந்த ஏமனின் யூத ஆட்சியாளாகள், ரோமின் கிறிஸ்தவ ஆட்சியாளர்களை உள்ளிட்ட எவரும் பெரியவனில்லை எனவும், ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் உயர்ந்தவனில்லை என்பதான அர்த்தமாகவும் விரிவடைகிறது.
இவ்வாறாக இவ்வார்த்தைகளின் அடிப்படைகளில் இறைஅம்சம், சமூக அம்சம் என்கிற இருவிதப் பரிமாணங்கள் பின்னிப் பிணைந்திருப்பதைப் பார்க்கலாம். இந்த அடிப்படையில் தர்காக்களைப் பற்றியும் நாம் மறுவாசிப்பு செய்ய வேண்டியுள்ளது.
2. தர்காக்களை மிக எளிமையான சூத்திரமாக ‘இறந்தவர்களின் புதைகுழிகள் மீது எழுப்பப்படும் கட்டடம் அல்லது இறந்த இடமாய் கற்பனை செய்து கட்டப்பட்ட கட்டடம் ‘ என்று வகாபிகள் கூறிவிடுகின்றனர். வெறும் கட்டடம் என்பதான இத்தகைய எளிமைப்படுத்துதலை எதிர்தர்க்கவாதம் செய்பவர்கள் பள்ளிவாசல்களுக்கும், கஃபாவிற்கும் கூட நீட்சி செய்து பார்த்தால் சிந்தனாரீதியில் பேராபத்து ஏற்பட்டு விடும்.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தமட்டில் தர்காக்களுக்கென ஒரு வரலாற்று ரீதியான பாத்திரம் உள்ளது. கி.பி.ஏழாம் நூற்றாண்டிற்குபின் இஸ்லாமியர்கள் அரேபிய மண்லிருந்து கடல்வழி வகக்குழுக்களாக, இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரக் குழுக்களாக தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும் பிற இடங்களிலும் இக்குழு மக்களில் பெரும்பாலோர் மற்ற சமய மக்களோடு ஒன்றிணைந்து குடியிருப்புகளை ஏற்படுத்தி வாழ்ந்தும் திருமண உறவுகள் புரிந்தும் புதிய கலாச்சார உருவாக்கங்களை நிகழ்த்துகின்றனர். பாரம்பரிய அரபு வணிக மற்றும் பிரச்சாரகர்கள் மட்டுமல்லாமல், சேர, சோழ பாண்டிய மண்டலப்பகுதிகளில் வாழ்ந்திருந்த இந்து சமய சாதிகளிலிருந்து, ஜாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களும், சைவர்கள் கொடுத்த தாக்குதலை தாங்க சமணர்களும் சமத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தில் இடம்பெயர்கிறார்கள். நாடுகளின் எல்லைகடந்து, குடும்பம், சுற்றம், உறவுகள், துறந்து பல பகுதிகளிலும் இன்னல்பட்டு, இஸ்லாம் பற்றிய சிந்தனைகளை அடித்தட்டு மக்கள் மத்தியில் பரப்பிய, மெய்ஞானிகளின் வரலாறாக இதுமாறுகிறது. இஸ்லாமிய சிந்தனைகள் பற்றிய பிரச்சாரத்தை அடித்தட்டு மக்கள் மத்தியில் அக்காலப்பகுதியில் பேச்சாலும். எழுத்திலும். செயலாலும் செய்தவர்கள்தான் இறைநேச செல்வர்களாக மெய்ஞானிகளாக சூபிக்கவிஞர்களாக – வலியுல்லாக்களாக பலப்பெயர்களில் அழைக்கப் படுகின்றனர். இவர்களது உறைவிடங்கள், னைவிடங்கள்தான் பெரும்ப
ாலும் தர்காக்களாக அமையப்பெற்றுள்ளன. இதுபோன்ற தர்காக்களில் அல்லது கபறுஸ்தானங்களில் மெய்ஞானிகள் தவிர இஸ்லாமியர்களுக்கான உரிமைப்போரில் ஷஹீதான உயிர்நீத்த வீரர்களும், படைத்தலைவர்களும் அடங்கப்பட்டிருப்பதையும் பார்க்கலாம்.
தர்காக்களில் அமைவிடங்களைப் பொறுத்தமட்டில் இரண்டுவிதமாக இவை அமையப்பெற்றுள்ளன. சமஸ்தான மன்னர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் குறிப்பாக சூபிஞானிகளுக்குமான தொடர்பின் காரணமாக இம்மன்னர்கள் நிலங்களை இலவசமாக மெய்ஞானிகளுக்கு வழங்கியுள்ள வரலாறும் தெரியவருகிறது. மறுபுறம், சில குறிப்பிட்ட பகுதிகளில் வாழ்ந்த பிற சமயமக்கள் மொத்தமாக இஸ்லாமிய பிரச்சாரத்தின்பால் ஈர்க்கப்பட்டபோது வணக்கஸ்தலங்கள், தர்காக்களாகவும் மாறியுள்ளன. பெரும்பாலான ஞானிகள் சரகலையில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், சித்த மருத்துவத்தில் ஆழ்ந்த அறிவுள்ளவர்களாகவும் இருந்தார்கள் என்பதற்கான தரவுகள் உண்டு. எனவே இம்மெய்ஞானிகளின் உறைவிடங்களை பாதுகாத்தல் மரியாதை செய்தல் என்பது நம் வரலாற்றுக் கடமையாகும். இதுவே தமிழ் இஸ்லாமிய பண்பாட்டின் அடையாளங்களை பாதுகாப்பதுமாகும். எனவே தர்காக்களை முற்றிலுமாக நிராகரிப்பது என்பது தமிழகத்திலும், இந்தியாவிலும் இஸ்லாம் வளர்ந்த வரலாற்றுச் சுவடுகளையே நிராகரிப்பதாக அமைந்து விடும்.
3. கந்தூரி உரூஸ் விழாக்கள் வீணான பொருள் விரயத்தை ஏற்படுத்துகின்றன என்பதான குற்றச்சாட்டும் இன்று தொடுக்கப்படுகிறது. இதனை வெறும் பொருளாதாரவாதமாக மட்டும்பார்ப்பது அபத்தமாகும். இது கூட்டு உணர்ச்சியோடு சம்பந்தப்பட்டதாகும்.
பொருளியல் அம்சத்தையும் மீறி உரூஸ்விழாக்கள் சில பண்பாட்டு மதிப்புகளை உருவாக்குகின்றன. உரூஸ் விழாக்களின் கொடிக்கட்டு, மெளலிது ஓதுதல் (நபிகள் நாயகம் பிறப்பு மற்றும் சிறப்பு பற்றிய அரபு பாமாலை பாடுதல்) மார்க்கப்பேருரை நிகழ்த்துதல் சந்தனக் கூடு ஊர்வலம் என்பதான நிகழ்ச்சிகளினூடே இஸ்லாமிய கலாச்சார ஆன்மீகப் பண்புகள் பாதுகாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்படுகிறது. உரூஸ்விழாக்களின் žர வழங்குதல் அல்லது நேர்ச்சை வழங்குதல் என்பது மிக முக்கியமான அம்சமாகும். இது இஸ்லாம் பேசும் பூர்வீகப் பண்பான பகிர்ந்துண்ணுதலை, அடிப்படையாகக் கொண்டது. பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மஞ்சசோறு நேர்ச்சை வழங்குதல் என்பது பசித்துன்பத்தை தற்காலிகமாகவேனும் நிறுத்தும் குணம் கொண்டது. பிரிந்து, சிதறிக்கிடக்கும் சமுதாய மக்களை ஒரே சமூகமாக, ஒரே சக்தியாக ஒற்றுமைப்படுத்தும் கூட்டுணர்வு பண்பைக் பாதுகாத்து இவ்விழாக்கள் வளர்த்தெடுக்கின்றன. விழாக்கால மகிழ்ச்சி அல்லது கொண்டாட்ட குதூகலத்தின் மூலம், தற்காலிகமாகவேனும், உளவியல்ரீதியான சோர்வை நீக்கி புத்துணர்ச்சி ரீதியான அகப்பண்புகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் இத்தகைய பொருண்மைசாராத மனித நுண்மனப்பண்புகளில் ஏற்படும் மாற்றங்களை எவராலும் எந்த மில்லி மீட்டர் கணக்காலும் அளந்துவிடமுடியாது.
4. தர்காக்கள் பற்றிய மதிப்பீட்டில் மிகமுக்கியமாக சகோதர சமயத்தவர்களை பண்பாட்டுக் களத்தில் ஒன்றிணைக்கும் பண்பினைக் கூறலாம். ஏறத்தாழ புறவாழ்க்கைத் தளங்களில் பல்வேறு மத இனமக்களின் கூட்டான உழைப்பு, உற்பத்தி, இவற்றின் உருவாக்கத்தில்தான் இஸ்லாமியர் வாழ்க்கை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய வாழ்வின் கட்டமைப்பே ஆன்மீகரீதியாக, தர்காக்களில் பிறசமய மக்களின் உறவுகளோடு தொடர்பு கொண்டிருக்கிறது. சாதாரண அடித்தட்டு பிறசமயமக்கள் தர்காக்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. தர்கா தொடர்புடைய விழா கழ்வுகளில் பிற சமயத்தவர்களின் பங்களிப்பாக பால்வழங்குதல், நேர்ச்சை வைத்தல் காக்கை வழங்குதல் போன்ற பல்வேறு நல்லிணக்க இழைகள் அறுபடாமல் இருப்பதைப் பார்க்கலாம். இது இருவேறு சமயத்தார்களிடம் சமாதான பேணுதலை மேற்கொள்ளுவதற்காக விட்டுக் கொடுத்தலையும், புரிதலையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகளாகும். ஹிஜ்ரி 6-ம் நூற்றாண்டில் மக்காகுறைஷிகளுக்கும், மதினா முஸ்லிம்களுக்கும் இடையே உறவுலைகளை சரிப்படுத்தவும் ஹஜ் புனித கடமையை வருங்காலங்களில் றைவேற்றவும் நபிகள் நாயகத்திற்கும், ‘உர்வா ‘ விற்கும் இடையில் போடப்பட்ட ஹுதைபியா ஒப்பந்தம் அரசியல்ரீதியாகவும், சமயரீதியாகவும் இத்தகைய ஒருங்கிணைத்தலுக்கும் சமரச வாழ்வுக்கும் வழிகாட்டுவதை பார்க்கலாம்.
5. பெண்கள் தர்காக்களுக்கு செல்லுவதா கூடாதா என்பது குறித்த விவாதமும் இன்று முன்வைக்கப்படுகிறது. சமூகவியல் நோக்கில் இப்பிரச்சனையின் இன்னொருதளத்தை நாம் உணர முற்பட வேண்டும். பொதுவாக வாரநாட்களில் ஞாயிறு சென்று திங்கள் இரவிலோ, வியாழன் சென்று வெள்ளி இரவிலோ தர்காக்களுக்கு பெண்கள் அதிகமாகச் செல்வதையும் காணலாம். அதிகாலை துவங்கி வீடு பெருக்குவது, சமையல் செய்வது, குழந்தை பராமரிப்பது, கணவனுக்கு பவிடை செய்வது என்பதான குடும்ப ஒடுக்குமுறையின் வீட்டுச் வேலைச் சுழற்சியில் இஸ்லாமியப் பெண் கட்டமைக்கப்பட்டிருக்கிறாள். சமூக அளவில் பெறப்படும் குறைந்தபட்ச கல்விக்குப்பிறகு ‘வீடு ‘ என்கிற நிறுவனத்திற்குள் அன்றாடம் கட்டுண்டு கிடக்கும் இஸ்லாமியப் பெண்ணுக்கு தர்காக்கள் சமூகஅளவில் வரையறுக்கப்பட்ட விடுதலையை உருவாக்கும் கேந்திரமாகச் செயல்படுகின்றன. இறைவனுக்காக கடமையை நிறைவேற்றுதல் என்பதான இறை அம்சம் தொழுகைப் பள்ளிகளின் சாராம்சமாக சொல்லித்தரப்பட்ட நிலையில் இங்கே விடுதலை என்பது இடம் (Space) சார்ந்த நகர்தலாகவும், சுதந்திரமாய் சுயமாய் யோசிக்கிற உரிமையை அளிக்கிற தன்மையதாகவும், ஒரே தெருவில், ஜமாஅத்தில், ஊரில், குடும்பங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிற பிற இஸ்லாமியப் பெண்களோடு தொடர்பு கொள்ளுதலும், உறவாடுதலுக்குமான வாய்ப்புமாக உருவாக்கப்படுகிறது. தர்காவினுள் இறைபக்தியை வெளிப்படுத்தும் முறையியலாக யான்சூரா, பாத்திஹா ஓதுவதைத் தொடாந்து மேற்சொன்ன நிகழ்வுகளும் இதனுட
ன் ஒன்றுபடுகிறது. இது மத நம்பிக்கைகளையும், வாழ்க்கை நம்பிக்கைகளையும் ஒன்றிணைத்து செயல்படுகிறது.
6. தர்கா வழிபாட்டில் உள்ள அறியாமைகள் என்று சில செயல்கள் முன்னிறுத்தப்படுகின்றன.
கறுப்புகயிற்றில் ஓதி ஊதி சகல நோய்களுக்கும் நிவாரணம் எனக்கூறுதல், மந்திரித்தல், தாயத்துக்கட்டுதல், என்பதாக இவை முன்வைக்கப்படுகிறது. ஓதிப்பார்த்தல், தாயத்துகட்டுதல் உட்பட்ட நடவடிக்கைகளின் சாராம்சத்தை அதில் உட்பொதிந்து கிடக்கும் இஸ்லாமிய நாட்டார் சமயக் கூறுகளின் அம்சங்களை, அச்செயல்கள் எளிய மக்களிடம் உருவாக்கும் மனோவியல் நம்பிக்கையை குறைத்து மதிப்பிட முடியாது. ஏனெனில் ‘ஓதிஊதுதல் ‘ என்கிற நிகழ்வில் ‘ஓதுதல் ‘ என்பதே திருமறை வசனங்களை ஓதி ஊதுவதின் மூலமாக நோய் தீர்ந்துவிடும் என்பதான தீவிர மனோவியல் நம்பிக்கையும், தாயத்தில் உள்ள தகட்டில் திருமறை வசனங்கள் சிலவற்றை எழுதுவதின் மூலமாக இந்நோய் தீர்ந்துவிடும் என்பதான நம்பிக்கையும், இதை சாயாக ஓதவோ, எழுதவோ புரிந்து கொள்ளவோ முடியாத லையில் உள்ள மக்கள் ஆலிமை நாடிச் செல்வதும் கழ்கிறது. இங்கே இறைவனின் மீதான நம்பிக்கைகள் இறைவசனங்களின் மீதான நம்பிக்கையாக வடிவ மாற்றம் பெறுகிறது.
இதுவாழ்வில் ஏற்படும் இடர்பாடுகளை தீர்த்துக் கொள்ள முயல்வதையும் இயலாமைக்கு வடிகாலாக, அமைவதையும், அடிப்படையாக கொண்டுள்ளது. வறுமை, துன்பம், மருத்துவத்தால் தீராத நோய், சித்தபிரமை உள்ளிட்ட மனித இடர்பாடுகளை தீர்க்க, இயலாமையிலிருந்து விடுபட முயல்கிறது. நடைமுறை சாத்தியமுள்ள, மனோவியல் நம்பிக்கையை அளிக்கும் புதிய மாற்றுகளை ஆன்மீகத்தளத்தில் எவராவது சுட்டிக்காட்டி சொல்லித் தரமுடியுமா ? பிறகெந்த அளவுகோலால் ஊதுதலையும் தாயத்து கட்டுதலையும் நாம் மதிப்பீடு செய்வது. இத்தகு வாழ்வியல் கழ்வுகளை நாம் நாட்டார் இஸ்லாம் (Folk Islam) என்பதாக அடையாளப்படுத்தலாம். மரபு வழி இஸ்லாமிய சடங்குகளிலும் அரேபிய நாட்டார் மரபுகளின் பண்பாடு ஒன்று கலந்திருக்கின்றன. அல்லாஹ் என்ற சூட்சமத்தோடு பிரம்மமயமாக்கப்பட்ட பருண்மைபடுத்தப்படாத சக்தியின்பால் நெருங்கிச் செல்வதில் சிக்கல்கள் இருக்கிறது. எனவேதான் தங்கள் வட்டாரத்தில் உயிருடன் வாழ்ந்து மக்கள் ப செய்து மறைந்த இறைநேசர்களோடு அடித்தளமக்கள் மானசீகத்தோடு நெருக்கமான உறவினை வைத்துள்ளார்கள். ஐந்துவேளையும் தொழாமலிருந்தால் மறுமையில் நரக நெருப்பில் வீசப்படுவாய் என எச்சரிக்கப்பட்டு, அல்லாஹ்வை பயங்கரத்தன்மை கொண் டவனாக மரபு வழி இஸ்லாம் சொல்லித்தரும்பபோது அதே அல்லாஹ்வை சூபிகள் காதலியாக உருவகப்படுத்துவதின் உள்ளார்ந்த அர்த்தத்தை வகாபிகள் இப்போதேனும் புரிந்து கொண்டால் சரி.
7. அரபுமொழிவழக்கில் சந்திரன் ஆண்பாலாகவும், சூரியன் – ஷம்ஸ் பெண்பாலாகவும் கருதப்படுகிறது. பழங்குடி அரபுகள் மக்காவின் கஃபத்துல்லா ஆலயத்தில் லாத், உஜ்ஜா, மனாத் உள்ளிட்ட பல பெண் கடவுள்களுக்கு மத்தியில் அல்லா என்ற சந்திரக் கடவுளை உயர்ந்த வகைப்பட்ட தந்தைக்கடவுளாக வணங்கி இருந்தனர். இப்பெண் தெய்வங்கள் அல்லாவின் மகள்களாகவும் கருதப்பட்டனர். திருக்குர்ஆனின் வசனகுறிப்பிலும் (53:19-20) இஸ்லாமிய அறிஞா யூசுப் அலியின் விளக்கவுரையிலும் இது குறித்த தடயங்களை கண்டுகொள்ள முடியும்.
அல்-இலா சொல் முறையிலிருந்து அல்லா என்ற சொல் உருவாகியுள்ளது. கி.பி.ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாத்திற்கு முன்பாகவும் அல்லா என்ற சொல்ல நடைமுறையில் இருந்துள்ளது. முகமது நபிகளின் தந்தையின் பெயர் அப்துல்லா என்பதிலிருந்தே இதனை அறிந்து கொள்ளலாம்.
இஸ்லாமியர் அல்லாத அரபு மொழிபேசும் யூதர்கள், கிறிஸ்தவர்கள் சாபியீன்கள், பகாயிகள் உள்ளிட்டோர் நடைமுறை வாழ்வில் சந்தோசத்தின் வெளிப்பாடாகவோ, துயரத்தின் குறியீடாகவோ யாஅல்லாஹ் என்ற சொல்லாக்கத்தை பயன்படுத்தினர். இந்லையில் நபிகள் நாயகம் இஸ்லாமிய ஏகத்துவ ஓரிறைவாத சொல்லாடலாக உருவமற்ற அர்த்த லையில் அல்லாஹ்வை உள்வாங்கியதை ஆய்வு நிலையில் கவனத்தில் கெள்ள வேண்டும்.
இவ்வகையில் இந்திய, தமிழகச் சூழலில் இஸ்லாமியர்களின் சமூக ஆன்மீக வாழ்வில் முக்கியமாக இடம்பெற்றுள்ள தர்காக்களை கபருகளை வரலாற்றுரீதியாகவும், பண்பாட்டியல், உளவியல், மானுடவியல் நோக்கிலும் பன்முகப்பண்பு கொண்டு நோக்க வேண்டியுள்ளது.
இஸ்லாமிய மக்களின் வாழ்வோடும் உணர்வோடும் தர்காக்கள் ஒன்று கலந்துள்ளன. எனவேதான் அடிப்படை தெரியாமல் எழப்பப்படுகின்ற தர்காக்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் அதன் பண்பாட்டியல் இருப்பினை அசைத்துப் பார்க்க முடியவில்லை. இதுவே அந்தந்த நாடுகளின், பகுதிகளின், வட்டாரப் பண்புகளை உள்வாங்கி றுவனச் சமய எல்லைகள் தாண்டி வெகுஜன மக்கள் மார்க்கமாக (Popular Islam) இஸ்லாம் வளர்வதற்கான மிக முக்கிய காரணமாகும்.
—-
mylanchirazool@yahoo.co.in
- பெரியபுராணம் – 76 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- நேசிப்பாளர்கள் தினம் (VALENTINE ‘S DAY )
- கடிதம்: மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 2
- கடிதம்- ஆங்கிலம்
- ஹெச்.ஜி.ரசூல் அவர்கலின் “வஹாபிசம்—- ‘ கட்டுரை மற்றும் விளக்கம் குறித்து
- நீங்க எப்படிங்க ? கொஞ்சம் சொல்லுங்க
- புதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா – கருத்தரங்கு
- Looking for Comedy in the Muslim World – திரைப்படம்
- தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள்
- மெட்டாபிக்சனின் ஆழ அகலங்கள்
- நான் கண்ட சிஷெல்ஸ் – 10. சேவை அமைப்புகள்
- விண்வெளி ஊர்திகள் கண்கண்ட செவ்வாய்க் கோளின் தளங்கள் [Rover Explorations on Planet Mars-2 (2006)]
- கவிதைகள்
- இப்போதாவது புரிகிறதா
- முற்றும் இழத்தல்
- கீதாஞ்சலி (61) ஏழையின் வரவேற்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம் – பகுதி இரண்டு)
- மனிதம்
- அய்யா வைகுண்டரும் அரவிந்தன் நீலகண்டரும்
- சொல்ல மறந்த கதைகள் – கோல்வல்கர் பற்றி…
- மண்டைக்காடும் இந்து எழுச்சியும்
- பாலாற்றில் இனி கானல் நீர்தானா ?
- இளந்தலைமுறைக்குத் தலை வணக்கம்
- குருஜி கோல்வல்கர்: சில தகவல்கள்
- தர்கா பண்பாட்டு அரசியல்
- எல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றறியேன் பராபரமே…
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் இரண்டு: நல்லூரும் யாழ்ப்பாணமும்!
- ப்ரியமுள்ள வாலண்டைனிடமிருந்து….!
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 8
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-9) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- விடுமுறையின் முதல் நாள்
- ப லா த் கா ர ம் ( வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் )