புதுவை ஞானம்
Let us now move on to the mathematical significance of my subemissions. I have already mentioned some of the units of measurement and their fractional value. Here are some extracts of their application.
அண்ட கோளப்பிரமாணம் (இயல்பு)
பாரவண்டத்தோடு கணங்கோடியு மேற்
பொன்பதியுங் கோடியாகும்
சேருமங்கியுருத்திரம் மேற் கனற் சுவாலை
பதின்கோடி செப்புந்தூம
மேருமைந்து கோடியின் மேனிரைய முப்பான்
கோடியுடனிரண்டிலக்க
மாருமதன் மேல் வெளி மூவயுத மேற்
கூர்மாண்டத்தளவு சொல்லும்.
(அண்டகோள விலாசம் P.3)
முத்து வெங்கட சுப்புராயன்
வேம்பத்தூர்.
பெரிதாய் இருக்கின்ற அண்டத்தினுடைய கனம் கோடி அதன்மேற் சுவர்னபூமி உன்னதம் கோடி. அதிதுளி உதிரா நின்ற காலாக்னி ருத்திரனென்று ஏகத்திலிருந்து எழும்பிய அக்கினி பிழம்பு பத்துகோடி அதன் மேற்புகை ஐம்பதுகோடி. அதன்மேல் இராச நிரையம் உட்பட முப்பது கோடியே இரண்டிலக்கம். அதன் மேல் வெளி முப்பதினாயிரம்.
கூர்மாண்டந்தளவு
—-
கோடிக்கோர் குறையிலக்க மேல் வெளியொன்
பாணிலக்கம் கூறு மேலே
சாடதல …. யென்பலக்கத்
தொழுவதாஞ்சகத்திர
மாடகனார் புரமுபொன் பாலிலக்க
மரிதாங்கு(ம்) அவனி கோடி
யோடுமைம் பான் கோடியுமேல் புவர்லோகஞ்
சுவர் லோக மொன்றாங்கோடி
முன் சொன்ன கூர்மாண்டத்தினுடைய அளவு தொன்னூற்றொன்பது இலக்கம். அதன்மேல் ஆதி சேடனால் தாங்கப்பட்ட பூமி கோடி. கனமான அண்டத்தினுடைய கீழத்தோடு முதல் பூமி வரைக்கும். ஐம்பது கோடி. அதன்மேல் புவர் லோகம் சுவர் லோகம் கோடியாம், என்றவாறு.
எண்ணு மகரலோக மிருகோடியின் மேற்
கனலோகம் பன்னிருகோடி
யயனுலகு பதினாறாகும்.
கண்ணணுரை லோக மிரு நாற்கோடி
கந்தபுரங் கவுரி பாக
வண்ணல்புர மறுகோடியண்ட
முகடுவரை சதமாங்கோடி.
மகரலோகம் இரண்டுகோடி. அதன்மேற் கனலோகம் எட்டுக்கோடி. அதன்மேற் தபோலோகம் பன்னிருகோடி. அதன்மேற் சத்தியலோகம் 16 கோடி அதன்மேல் விஷ்ணுலோகம் நான்கு கோடி. அதன் மேற் கந்தபுரம் இரண்டு கோடி. அதன்மேற் கவுரிபுரம் இரண்டு கோடி, அதன்மேற் சிவலோகம் இரண்டு கோடி. அதன்மேற் அண்டமுகடு வரையில் ஐம்பது கோடி. ஆக அண்டம் நூறுகோடி யுன்னதமாகும்.
குக்குடக் குடம்பை போலக் கூறுவாங் கீழ்மேலாக
நிற்குமே நூறுகோடி நிகழ்ந்திடுங் கீழ் மேற்றீர்க்கந்
தக்கது நூறுகோடி சாற்றுதென் வடல் விசால
மிக்கது நூறுகோடி விளிம்பும் யோசனையைச் சொல்வாம்.
கோழிமுட்டை வடிவமாய் இருக்கின்ற அண்டத்தினுடைய உன்னதம் நூறுகோடி. கீழ் மேலுன்னதம் நூறுகோடி தென்வடல் நூறுகோடியாச் சொல்லும் யோசனைப் பிரமாணமாம்.
பானுவின் கதிர்தூள் பரமாணுவா
மான தூளிரண்டோரணு வவ்வணுத்
தானே மும்மடி சாற்றுந் திரேணுவா
மான மிரண்டுங் கொண்டாலோர் மயிர்நுணி.
சாளரத்தில் கிரணம் போமளவில் எழுந்தூள் பரமாணுவாம். அந்தப் பரமானு இரண்டு கொண்டது திரேணு. திரேணு இரண்டு கொண்டது மயிர்நுணி.
சேரும் ரோம நுணியெட்டுச் சேர்ந்தது
பாரமான விலாகை பகர்ந்திடுஞ்
சேருமாமவ் விலாகை யெண் சேர்ந்தது
ஊரும் பேன்ந்தப் பேனெட்டோர் நெல்லதாம்.
முன் சொன்ன மயிர்நுணியெட்டுக் கொண்டது பெரிதான விலாகை எட்டுக் கொண்டது ஊரா நின்ற பேன் அந்தப் பேன் எட்டுக் கொண்டது நெல்லாம்.
பார நெல்லெண் பரப்புமோரங்குலம்
ஆறு மங்குல மாறு நான்சோர் முழம்
ஒரு மம்முடி நான்கொரு வில்லதாய்
நேரு மவ்விலிரண்டோர் நெடுந்தண்டே
பெரிதான நெல்லெட்டுக் கொண்டது ஒரு அங்குலம். அங்குலம் இருபத்து நான்கு கொண்டது (6X4) ஒரு முழம். முழம் நான்கு கொண்டது விற்கிடை. விற்கிடையிரண்டு கொண்டது ஒரு தாண்டாம்.
சோருந் தண்டிருவாயிரம் கொண்டதே
சாருமே வொருக் குரோசமக் குரோசமே
சேரு நான்மடங் குற்றதைச் செப்பிடற்
பாரின் மேலொரு யோசனைப் பண்பிதே.
எடாநின்ற தண்டு இரண்டாயிரம் கொண்டது குரோசம். குரோசம் நானூறு கொண்டது பூமியில் ஒரு யோசனை பாகம்.
சாளரத்தில் கிரணம் போமளவில் எழுந்தூள் பரமாணு என்பதையும் அப்படிப்பட்ட பரமாணு இரண்டு கொண்டது திரேணு எனவும் திரேணு இரண்டு கொண்டது மயிர்நுணி எனவும் கண்டோம். [2x2x2 = 8] பரமாணு என்பது நேர்த்துகள் எனவும் வழங்கும்.
பரமாணு 8 கொண்டது ரதரேணு. நேர்த்துகள் தமிழி எனப்படும் பிராமி எனவும் கிரந்த லிபி எனவும் வழங்கப்படும் தொல்தமிழ் எழுத்தில் உள்ளதை தமிழில் மொழி பெயர்த்ததாக இதன் உரையாசிரியரான சேஷ்-சம்-ஸ்உரம்ஹன்ய சாஸ்திரி மயமதத்தின் முன்னுரையில் குறிப்பிடுவது தமிழறிஞர்களை சவாலுக்கு இழுப்பதாகும். தமிழில் உள்ளதை மணிப்பிரவாளத்துக்கு மொழியாக்கம் செய்திருக்கிறார் சாஸ்திரியார் ‘ தமிழர் அனைவரும் முடியாவிட்டாலும் தமிழறிஞர்கள் இந்த வட்டெழுத்து விவகாரத்துக்கு சீக்கிரம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இந்த நூற்றாண்டிலாவது.
பரமாணு 8 கொண்டது ரதவேணுவாகும்
ரதவேணு 8 கொண்டது வாலாக்ரமெனப்படும்
வாலாக்ரம் 8 கொண்டது லிஷை எனப்படும்
லிஷை 8 கொண்டது யூகை எனப்படும்
யூகை 8 கொண்டது யவை எனப்படும்
யவை 8 கொண்டது அங்குலம் எனப்படும்.
அங்குலமானது மாத்திரம் எனப்படும். 12 அங்குலம் கொண்டது விதஸ்தி எனப்படும். விதஸ்தி 2 கொண்டது ஹஸ்தம் என்றும் கிஷ்கு என்றும் கூறப்படும்.
25 அங்குலம் கொண்டது பிரநாபத்யம் எனப்படும்.
26 அங்குலம் கொண்டது தநுர்முஷ்டி எனப்படும்
27 அங்குலம் கொண்டது தநுர் கிரஹம் எனப்படும்
யாநம் (வாஹனம்) சயநம் (படுக்கை) இவைகளை ஹஸ்தத்தினாலே அளவிட வேண்டும்.
பிரஜாபத்தியத்தினாலே விமானத்தை அளவிட வேண்டும்.
வாஸ்துக்களை தநுர் முஷ்டியினாலே அளக்க வேண்டும்.
கிராமாதிகளை தநுர் கிரஹத்தினாலே அளக்க வேண்டும்.
அல்லது வாஸ்துக்கள் எல்லாவற்றையும் ஹஸ்தத்தினாலேயும் அளவிடலாகும்.
ரத்நி – அரந்தி – புஜம் – பாஹ்உ – கரம் இவைகள் ஹஸ்தத்தின் பிரியாய பதங்களாகும்.
4 தநுர் கொண்டது தண்டமாகும். தண்டமானது யஷ்டி என்றும் கூறப்படும்.
8 தண்டம் கொண்டது ரஜ்ஜ்உ எனப்படும். கிராமம் – பத்தநம் – நகரம் – நிகமம் – கேடம் – வேச்ம முதலியவைகளை தண்டத்தினாலே அளவிட வேண்டும்.
‘இனி கிராமதிகளின் மானத்தையும் (மானம் – அளவு) அவைகளின் விந்யாசத்தையும் (விந்யாசம் – அமைக்கும் முறை) முறைப்படி கூறுகிறேன்.
ஐநூறு கோல் நீளத்துக்கு குரோசம் என்று பெயர். அதைப்போல் இரண்டு மடங்குக்கு 1000 கோல் நீளத்துக்கு அர்த பாதி கவ்யூதி என்று பெயர். அந்த கவ்யூதியின் இருமடங்கு 2000 கோல் நீளத்துக்கு கவ்யூதி என்று பெயர்.
எண்ணாயிரம் கவ்யூதி கொண்டது ஒரு போஜனம் ஆகும் (160000 கோல்) 2000 X 8000
எட்டு தநுஸ் சச்சதுரமான இடத்துக்கு காணிகை என்று பெயர்.
காணியைப் போல் நான்கு மடங்கு சச்சதுரமான இடத்துக்கு மாஷம் என்று பெயர்.
மாஷத்தை போல் நான்கு மடங்கு சச்சதுரமான இடத்துக்கு வர்தகைம் என்று பெயர்.
வர்தகைத்தைப் போல் ஐந்து மடங்கு விஸ்தாரமான இடத்துக்கு சிறந்த கிராம குடும்பாவனி என்று பெயர்.
இவ்விதமான பூமியின் மானமானது (அளவு) கூறப்பட்டிருக்கிறது.
இனி அவைகளின் அளவைத் தண்டமானத்தினால் (கோலின் அளவினால்) கூறுகிறேன்.
கிராமத்திற்கு லஷம் கோல்களினால் பாய்ந்த மானம் கூறப்பட்டிருக்கிறது. (கிராமத்தின் எல்லைக்கோடிகள் வரையில் லஷம் கோலளவு கூறப்பட்டிருக்கிறது. இது அகலம் நீளம் இவ்விரண்டுகளின் அளவுகளுமாகும்.)
இருபதினாயிரம் தண்டம் முதல் முறையே 20,000 தண்டம் வீதமாக கூட்டிவர கிராமங்களின் மானமானது ஐந்து விதமாகும்.
கிராம மானத்தில் 20 1பாகம் குடும்ப பூமியாகும். (ஜனங்கள் வசிக்குமிடம் 20-ல் ஒரு பங்காகும் என்பது கருத்து)
குடும்ப பூமியானது ஐநூறு தண்ட பிரமானம் கூறப்பட்டிருப்பதால் அது கிராமத்தின் (சிறிய கிராமத்தின்) அளவாகும். ‘
‘அந்த அளவிலிருந்து ஐநூறு கோல் விதமாக இருபதினாயிரம் கோல்வரை பெருக்கிவர கிராமமானது 40 விதமாகும்.
நகரத்தின் விஸ்தாரமானது இரண்டாயிரம் கோல் ஆயிரத்தைந்நூறு கோல், ஆயிரம் கோல், தொள்ளாயிரம் கோல், எழுநூறு கோல், ஐநூறு கோல், முந்நூறு கோல் என ஏழுவிதமாகும்.
நகர விஸ்தாரமானது ஆயிரம் தண்டம் முதல் இரண்டாயிரம் தண்டம் வரையில் இருப்பதுமாகும்.
நகரத்தின் பர்யந்த (எல்லைக் கோடியின்) அளவானது எண்ணாயிரம் கோல் ஆகும். 8000 த்திலிருந்து இரண்டாயிரம் கோல்வீதமாகக் குறைத்து இரண்டாயிரம் கோல் வரை அளக்க நகர எல்லையின் அளவானது நான்கு விதமாகும்.
ஜனங்கள் வசிக்குமிடமானது 1)கிராமம் 2)கேடம், 3)கர்படம், 4)துர்கம், 5)நகரம் என்று ஐந்து விதமாகும்.
இப்படியாக (Town Planning) நகர நிர்மாணம், கோட்டைகள், கோபுரங்கள் கட்டுவது என பலவாறாக இந்த அளவைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. விரிக்கிற் பெருகும். குறைந்த பட்சம் தமிழ்ப் பேராசிரியர்களும், பொறியியற் பேராசிரியற்களும் இந்த மயமதம் என்றும் சிற்பசாத்திர நூலை ஆய்வு செய்ய வேண்டும்.
மொழி என்பது இலக்கியத்தில் மட்டும் வாழ்வதில்லை. தொழில் நுட்ப நூல்களிலும் தான் உயிர்ப்போடு வாழுகிறது. சென்னைப் பழ்கலைக்கழகம் வெளியிட்ட LEXICON ஏழு தொகுதிகளையும் படித்தாலும் பல தொழில் நுட்பம் சார்ந்த சொற்களைக் காண முடியவில்லை. அவர்கள் சொல்லாய்வு செய்த நூற்பட்டியலில் (BIBILIOGRAPHY ல் மேற்கோள்கள் எடுத்த பட்டியலைப் பார்த்தால்) பல கலை-தொழில் பற்றிய நூல்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. அவை அச்சேறாமலும் இருக்கலாம்…. ஓலைச்சுவடியாகவே இருக்கலாம். பேராசிரியர்கள் அருள் கூர்ந்து கவனம் செலுத்துவார்களா ?
இதுவரை பார்த்த நுண்அளவுகளில் சாரம் என்ற 1/7290543432605368360000 அலகு சோதிடத்தில் பயன்படுத்தப்படுவதை நரளவு சோதிடம் தெரிந்தவர்கள் அறிவார்கள். எந்த நவீன சாதனங்களும் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் அவதிஞானம் எனும் யூக முறையால் அத்தனை கிரகங்களையும் நுணுகி ஆய்வு செய்து அவற்றின் தாரத்தையும் கதியையும் (வேகத்தையும்) துல்லியமாக கணக்கிட்டு 12 இராசி மண்டலங்கள் எனப்படும் 360 வாகைக்குள் அடக்கி எப்போது உலகில் எங்கு எங்கு தினமும் சூரியன் உதிக்கும், எப்போது கிரகணங்கள் ஏற்படும் என்பது பற்றியெல்லாம் 5000 ஆண்டுகளாக கணித்துவரும் நமது கணிதத்தின் உன்னதத்தை மூட நம்பிக்கையென்று சில மூடர்கள் சொல்வதை நாம் ஏற்கத்தான் வேண்டுமா ?
பதார்த்த காரம் என்ற நூல் PREBIOTIC EVOLUTION எனப்படும் உயிர்தோன்றுவதற்கு முன்பான பரிணாம வளர்ச்சி பற்றிப் பேசுகின்றதையும் அதுபற்றி நவீன அறிவியல் இன்னும் ஆய்ந்து கொண்டு இருப்பதையும் அவர்கள் அறிவார்களா ? குறைந்தபட்சம் அறிவியல் தமிழ் பற்றிய ஒரு விழிப்புணர்பு நம்மிடையே ஏற்படுமா ?
puduvai_gnanam@rediffmail.com
- கடிதம் நவம்பர் 25,2004 – சங்கரமடத்தை பிடித்தாட்டும் ர(ா)கு காலம்
- மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள்
- பாரதப் பெண்களுக்கு “ஐஸ்” வைக்கிறார் குருமூர்த்தி!
- தமிழின் மறுமலர்ச்சி – 7
- வாரபலன் நவம்பர் 25, 2004(ஜெயேந்திரர் சோதனை, சர்தார்ஜி சாதனை, குஞ்ஞாலிக்குட்டி வேதனை, திருமேனி ரோதனை)
- வையாபுரிப்பிள்ளை குறித்து
- நன்றி நவில ஓர் நாள்.
- கவனிக்கவும்!
- தமிழ் அளவைகள் – 1
- மெய்மையின் மயக்கம்-27
- தமிழ் அளவைகள் -2
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 11 கட்டிலவதானம் கதை
- கடிதம் நவம்பர் 25,2004 – பரிணாம கோட்பாடு: புதிய தகவல்கள்!
- கடிதம் நவம்பர் 25,2004
- தமிழ் அரசியல்
- லீனா மணிமேகலையின் நான்கு ஆவணப்படங்களும் கலந்துரையாடலும்
- விமல் குழந்தைவேலின் வெள்ளாவி நாவல் நூல் வெளியீடும் விமர்சனக்கூட்டமும்
- கடிதம் நவம்பர் 25,2004 : இஸ்லாமிய சகோதரர்களுக்கு, நேர்மையின் பாலபாடம் குறித்து,அன்புடன் ஒரு காஃபீர்
- அபத்தங்களும், மழுப்பல்களும்! (சூரியாவின் பார்வைக்கு)
- கடிதம் நவம்பர் 25,2004 – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் பதிப்பாசிரியர் பத்ரி சேஷாத்ரிக்கு
- பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி காவ்யா அறக்கட்டளை சென்னை இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவரங்கம்
- கடிதம் – சுந்தர ராமசாமியின் அறிக்கை பற்றி
- சேதுசமுத்திரம் திட்டம் தொடர்பாக
- ஜோதிர்லதா கிரிஜாவின் எழுச்சி!
- தைரியலட்சுமியின் பக்தர் – ஃபோட்டோ செய்தி – ஒரு விளக்கம்
- 2006 நவம்பர் 22 ராம்தாஸைப் பாராட்டிய ரஜனி
- Trouble with Islam புத்தகத்தின் அரபி மொழிப் பதிப்பு – இடதுசாரிகளுக்கு ஒரு வேண்டுகோள்
- பழைய சைக்கிள் டயர்
- நீ வருவாயென..
- இது என்னுடைய வெள்ளிக்கிழமை
- பர்ஸாத்
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் -47
- அறிவியல் புனைகதை வரிசை.2- இங்கே, இங்கேயே…
- அலமாரி
- அறிவு
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 4. நாம் யார் ?
- குழந்தையிடம் ஒரு வேண்டுகோள்
- SMS கவிதைகள்
- ஆண்மையை எப்போது
- சொல்லத்தான் நினைகின்றேன்
- தொலைந்து போன காட்சிகள்
- தீண்டத் தகாதவர்கள் யாருமற்ற உலகம்
- ஆகாயப்பறவை.
- சிதிலம்
- சொட்டாங்கல்
- இந்த ஆண்டின் நாயகன்
- நரகல் வாக்கு
- இலையுதிர்காலம்….
- அன்பு நண்பா !
- கீதாஞ்சலி (5) இசைப் பாடகன்
- பெரிய புராணம் – 19 ( திருநீலகண்ட நாயனார் புராணம் )
- மின்சாரத்திற்கு மாற்று வழியிருக்கு; மாட்டுவண்டி தேவையில்லை!
- திண்ணையும் மரத்தடியும் நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15, 2005