தமிழ்வலை சுற்றி…. 1 (நா கண்ணன், உதயா, அருணா ஸ்ரீநிவாஸன்)

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

இரா மதுவந்தி


அவள் மொட்டைப்பாட்டி. விதவை. இளமையில் விதவையானவள். வாழ்வு அவளிடமிருந்து பல நல்ல விஷயங்களைப் பறித்துவிட்டது. எனவே அவளுக்கு வாழ்வின் மீதான எதிர்ப்பைக்காட்ட இந்த உத்தி பயன்பட்டது. அவள் புடவை மட்டும் யார் மேலும் பட்டுவிடாமல் உசரத்தில் கட்டிய கம்பில் தொங்கும். அவள் ஒரு குச்சி வைத்துதான் புடவையை உலர்த்துவாள். நந்துவிற்கு ஒரே கடுப்பு. அம்மாவிடம் வந்து முறையிட்டான். அவனை அந்த அக்கிரஹாரத்தில் யாரும் தீட்டு என்று இதுவரை சொன்னதில்லை. இது முதல்முறை! ‘டேய், அவ கிடக்காடா! கவட்டை! நீ ஒண்ணும் அவ ஆத்துக்கு இனிமே போக வேண்டாம் ‘ என்று அம்மா சொல்லிவிட்டாள்.

நந்துவும் அப்படியே இருந்துவிட முடிவு செய்த போதுதான் அத்யானபட்டரின் பிள்ளை ஊட்டியிலிருந்து வேலை மாறி வந்திருந்தார் மூன்று பெண்களுடன். பெரியவள் ஆனந்தம் பார்க்க லட்சணமாக இருப்பாள். அவள் நந்துவைப் பார்த்து சிரித்துவிட்டுப் போகும் போது தன்னையறியாமலே நந்துவின் கால்கள் ‘கவட்டை ‘ வீட்டிற்குள் போய்விடும்!

அதுதான் ஊட்டி வரை உறவு!

http://people.freenet.de/bliss/vaigai_breeze.html

இங்கே ஒரு அட்டகாசமான நாவல் இருக்கிறது.

வைகைக்கறை காற்றே..

எழுதியவர் நா கண்ணன்


பேசுகின்ற பாஷையெல்லம்

செவிகளுக்குச் சொந்தம்

பேசாத மெளனம் மட்டும்

மனசுக்குச் சொந்தம்

கள்ளமின்மை கபடமின்மை

குழந்தைகட்குச் சொந்தம்

உள்ளம் மட்டும் வெள்ளையானால்

நாமும் அதன் சொந்தம்

உற்சாகம் வேகம் ரெண்டும்

இளமைக்குச் சொந்தம்

கற்பனைகள் கவிஞர்களின்

சொற்களுக்குச் சொந்தம்

மொழியெல்லம் புவி வாழும்

மாந்தர்க்குச் சொந்தம்

தமிழ் மட்டும் எந்தன்

உயிருக்குச் சொந்தம்

http://udhaya.rediffblogs.com/

சந்தக்கவிதைகள் மட்டும் எல்லா உயிருக்கும் சொந்தம்

உதயாவின் கவிதைகள் படிக்க

http://udhaya.rediffblogs.com/



அருணா ஸ்ரீநிவாஸனின் வலைப்பதிவுகள்

Monday, April 26, 2004

ஜோசியம் பாக்கலியோ, ஜோசியம்…. 🙂

காங்கிரஸ் கூட்டணி ஓகேதான். ஆனால் அதில் சோனியா பிரதமராக வருவது மட்டும் கொஞ்சம் இடிக்கிறதே என்று நினைப்பவர்களா நீங்கள் ? உங்களைப் போன்றவர்களுக்காகவே ஒரு ஜோசியம் – காங்கிரஸ் பலமாக ஆனாலும் ஆகலாம்; ஆனால் சோனியா பிரதமராக வரவே மாட்டாராம் ! ( எதிரணிக் கட்சியினர் போடுகிற எதிர்ப்பு சத்தத்தில் சோனியா பிரதமர் ஆவதற்கு ஆசைப்படுவாரா என்பதே என்னைப் பொறுத்தவரை ஒரு கேள்விக்குறிதான் – ஆனால் எதிர்கட்சியினர் எதிர்பார்ப்பும் அதுதானே ? எறும்பூர, கல்லும் தேயாதோ ? )

ராகுல் காந்தி பிரதமராவது இன்னும் பத்து ஆண்டுகள் கழித்துதானாம். ஆனால் அவரது உயிருக்கு அபாயம் இருக்கிறதாம். ( ?ும்…. அதென்ன சாபமோ தெரியலை…. காங்கிரஸில் யாராவது இளைஞர்கள் சற்று மக்களிடம் பிரபலமடைகிறார்போல் ஆனால் போதும், ஆபத்து வந்துவிடுகிறதே… ராஜீவ் காந்தியை விடுங்கள்… அப்புறம் கடந்த சில வருடங்களில் விபத்துக்களில் மறைந்த ராஜேஷ் பைலட், மாதவராவ் சிந்தியா, என்று சில உதாரணங்களும் இருக்கே ? )

சரி இந்த தேர்தல் ஜோசியத்தில் பிரியாங்கா ? ம் ?ும். அவரைப் பற்றி பேச்சே காணோம். பொதுவாக பல பெண்கள் செய்வதுபோல் குடும்பம் மற்றும் குழந்தைகள்தான் இப்போதைக்கு அவருக்கு முக்கியம் என்று தோன்றுகிறது. இருக்கட்டும். ஆர அமர அரசியலுக்கு வந்தால் போதும் – இப்போ என்ன அவசரம் ? !

வாஜ் பாய்தான் மறுபடி பிரதமர் என்கிறார்கள் இந்த ஜோசியர்கள். ஆனால் இரண்டு வருடங்களுக்குதானாம். – பாக்கி மூன்று வருடங்கள் ? ? ? அத்வானிஜியா ? ம்.. ?ும். அப்படியுமில்லையாம். ஒரு வேளை நடுவில் இடைக்கால தேர்தலும் வரலாமாம். ( சரியாப் போச்சு 🙁 மறுபடி பலகோடிகள் செலவா ? நம்மை ஆள்பவர்களைத் தேர்ந்தெடுத்தே நம்ம கஜானா காலியாகிவிடும் போலிருக்கே! )

சரி இந்த ஜோசியம் எல்லாம் நடக்கும் என்று என்ன நம்பிக்கை ? அட, நடக்கும் என்று யார் சொன்னார்கள் ? தேர்தல் சர்க்கஸில் இன்னும் ஓர் காட்சி – அவ்வளவுதான்.

# posted by Aruna @ 10:04 PM

http://www.aruna52.blogspot.com/

கன்னத்தில் நாக்குப் போட்டு பேசுவது அருணா ஸ்ரீநிவாஸனுக்கு எளிதாக வருகிறது.

http://www.aruna52.blogspot.com/


தொடராது


rmadhuvanthi@yahoo.com


Series Navigation

இரா மதுவந்தி

இரா மதுவந்தி