தந்தை இல்லா தலைமுறைகள்

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

Dr.இரா.சீனிவாசன்,Ph.D, தைவான்


தமிழகத்தில், குறிப்பாக கொங்கு நாட்டில் பொன்னர்-சங்கர் வரலாறு மிகவும் பிரசித்தம். பொன்னர்-சங்கரின் பெற்றோரான குன்றுடையாக் கவுண்டருக்கும் தாமரை பெரியநாச்சிக்கும் சுமார் 90 வயது வரை குழந்தை இல்லை. எனவே, குன்றுடையாக் கவுண்டரின் உடன்பிறந்த தம்பியான செல்லாத்தாக் கவுண்டர், தமையனின் சொத்தை அபகரிக்க திட்டம் போட்டார். செல்லாத்தாக் கவுண்டரின் சூழ்ச்சியிலிருந்து தங்கள் சொத்தினைப் பாதுகாக்கவும், தங்களுக்கு வாரிசு வேண்டியும் இறைவனிடம் முறையிட முடிவு செய்கின்றன ர், குன்றுடையாக் கவுண்டரும் தாமரை பெரியநாச்சியும். ஆனால் இந்த வயதில் எப்படி குழந்தை பிறக்கும் ? தாமரை பெரியநாச்சி, குன்றுடையாரைக் கல்லாக சமைத்துவிட்டு, இறைவனை நோக்கி கடுந்தவம் செய்கிறாள். மனமிறங்கிய ஈசன் குழந்தை வரம் கொடுத்தான் – ‘வயது பதினாறு வாலிபம் தொண்ணுீறு’’ என்று. அதாவது, பிறக்கின்ற குழந்தைகள் பதினாறு ஆண்டுகள்தான் உயிர் வாழ்வர்; ஆனால் இந்த பதினாறு வயதிற்குள், தொண்ணுீறு வயதிற்குரிய சாதனைகளைச் செய்வ ர். அவ் வாறே, பொன்னர்-சங்கர் திருச்சிக்கும் கரூருக்கும் இடையிலான பொன்னிவளநாட்டை ஆண்டனர்.

இது போன் ற ஒரு சில வரலாற்று கதைகளில்தான் , ஆண்கள் இல்லாமல் பெண்கள் கருவுற்றதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அது கூட, இறைவனின் வரத்தால்தான் (கதைப்படி)!!! மாறாக, அறிவியலைப் பயன்படுத்தி அகிலத்தையே அடக்கியாளும் மனிதனுக்கு, இன்றுவரை அது மட்டும் சாத்தியப்படவில்லை. ஆனால் ஒரு சில பூச்சிகளுக்கு, இவையெல்லாம் சாிவ சாதாரணம்!!

சரி, நம்ம கதைக்கு வருவோம்!!!

நான் முன்பே தேனீக்களில் குறிப்பிட்டது போல், பெண் தேனீக்களின் பிறப்பில் மட்டுமே விந்தணுக்களும் சினைமுட்டைகளும் சங்கமம் ஆகும்ி. மற்றபடி, ஆண்தேனீ பிறப்பளிதல்லாம் வெறும், கருவுறாத, தாயின் சினைமுட்டையில் இருந்து மட்டுமே!!! இது தேனீக்களுக்கு மட்டுமல்ல, தேனீயைப் போன் ற குளவிகளுக்கும் (Bees), மற்ற உண்மையான குளவிகளுக்கும் (Wasps) பொருந்தும். இவையெல்லாம் Hymenoptera என்ற வரிசையைச் சேர்ந்தவை. இவை ஆண்பூச்சியை உருவாக்கும்போது, கருவுறாத முட்டைகளையே பயன்படுத்தும். பொதுவாக, இந்த ஆண்கள் ஒற்றை குரோமோசோம் ஆண்கள் (Haploid males). எனவே இவர்களுக்குத் தந்தை கிடையாது; தாய்வழி பாட்டனார் மட்டுமே உண்டு.

அசுவினி (Aphids) பூச்சிகளைப் பார்த்திருக்கிறீர்களா ? நிச்சயமாக உங்கள் வீட்டுத் தோட்டத்தில், அவரையோ, வெண்டையோ, முட்டைகோசோ இருந்தால், இவரும் கண்டிப்பாக இருப்பார். குறிப்பாக, கோடை காலத்தில், செடிகளின் வளரும் நுனிகளில் கூட்டம் கூட்டமாக இருப்பர். தேன் போன் ற ஒரு திரவத்தை (Honeydew) வேறு சுரப்பதால், இவரை சுற்றி, எறும்புகள் எப்போதும் இருக்கும்.

இவரும் நாவாய் வகை பூச்சி ஆவார். Homoptera என்ற வரிசையைச் சேர்ந்தவர். அசுவினிகளில், உலகம் முழுதும் சுமார் 4000 சிற்றினங்கள் உள்ளன. இவருடைய இனப்பெருக்கம்தான் நமக்குக் கருப்பொருள்!!!!

இவர் சில சமயங்களில், முட்டை வைத்து, குஞ்சு பொரிப்பார் (Oviparous). அப்போதெல்லாம் இவருக்கு ஆண்துணை வேண்டும். அதாவது, ஆணுடன் சேர்ந்து கலவி புரிய வேண்டும். சில சமயங்களில், குட்டி போட்டு பால் கொடுக்கும், Viviparous முறையையும் பின்பற்றுவார். கலவியை முடித்தபின், பெண் அசுவினி பூச்சி, முன்பனி காலத்தில், முட்டை வைக்கும். பொதுவாக, இந்த காலகட்டத்தில், ஆண், பெண் எல்லோருக்குமே இறக்கை இருக்காது. பனிக்காலத்தில், கடுங்குளிரைத் தாங்க மாட்டாமல், அசுவினி பூச்சிகள் இறந்துவிடும். ஆனால் இந்த முட்டைகள் குளிரைச் சமாளித்துவிடும். வேனில் காலத்தில், முட்டைகள் வெடித்து இளம்குஞ்சுகள் வெளுக்கிளம்பும். ஒரே வாரம்தான் இவர் வயதுக்கு வர!!! உடனே இனப்பெருக்கத்திற்குத் தயார். பனிக்காலத்தில், இறந்துபோன தன் இனத்தொகையை ஈடுகட்ட வேண்டுமல்லவா ? மளமளவென இனப்பெருக்கத்தில் இறங்கிவிிடும். இந்த காலகட்டத்தில், ஆண் அசுவினி, கலவிக்கு வந்தால், ‘’போய்ய்ய்யா போ…. நேரங்கெட்ட நேரத்தில் வந்து பொழப்ப கெடுத்துக்கிட்டு’’ என் று ‘ஜெயம்’ பட சதா போல விரட்டிவிடும். அப்போதெல்லாம், ‘’நீயுமாச்சு உன் விந்தணுக்களுமாச்சு’’ என் று ஆண்துணை இல்லாமலே இனப்பெருக்கம் செய்யும். இந்த வேகத்தில் பெருகினால், தங்குமிடம், உணவுக்குப் பற்றாக்குறை வருமல்லவா ? எனவே முன்னெச்சரிக்கையாக, இந்த தலைமுறையை இறக்கையுடன் படைக்கும். ஆக, அப்பா இல்லாத அடுத்த தலைமுறை தயார்!!!

அது சரி, பூச்சிகள் பேசிக்கொள்ளுமா ? …. அடுத்த வாரம்!!

***

amrasca@yahoo.com

Series Navigation

இரா. சீனிவாசன்

இரா. சீனிவாசன்