ஜெயபாரதன் அவர்களின் பொறுமையும் ஈடுபாடும்

This entry is part [part not set] of 35 in the series 20080904_Issue

தேவமைந்தன்


அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்.

சி. ஜெயபாரதன் ஐயா அவர்களின் மொழியாக்கமான ‘உன்னத மனிதன்’ என்ற பெர்னார்ட் ஷா அவர்களின் நாடகத்தைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

ஜெயபாரதன் அவர்களின் பொறுமையும் ஈடுபாடும் என்னை வியக்க வைக்கின்றன. ‘திண்ணை’யின் இன்னொரு பக்கம், மிக அண்மையில் வெளியாகும் அறிவியல் உண்மைகளைத் தாங்கிவரும் ‘பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள்’ தொடரையும் கிடைத்தற்கரிய படங்களுடன் படைக்கிறார்.

இத்தகைய அர்ப்பண உணர்வு, இன்றைய தலைமுறைக்கு இருந்தால் எவ்வளவோ சாதிக்கலாம்.[தலைமுறை என்பது 33 1/3 ஆண்டுகள். புகழ்மிக்க திரைக்கவிஞர் ஒருவர் தன்வரலாற்றில் இதைப் பத்து ஆண்டுகள் என்று ‘decade’-ஐ நினைத்துக் கொண்டு குறிப்பிடுகிறார்.]

“இந்தியாவைக் கைப்பற்ற ஆங்கிலேயருக்கு எப்படி எளிதாக முடிந்தது ? அதற்குக் காரணம் என்ன வென்றால், அவர்கள் தேசீய மனப்பான்மை கொண்டவர்கள்; ஆனால் நாம் அப்படி அல்லர். நமது உன்னத மனிதர் ஒருவர் இறந்தால், அடுத்தவர் உருவாக நாம் பல நூற்றாண்டுகள் காத்திருக்கிறோம் ! ஆனால் உன்னத மனிதர் இறந்ததும் அவர்கள் அடுத்தொருவரை வெகு விரைவாக உருவாக்க முடிகிறது ! காரணம் நமக்கு உயர் மனிதர் மிகச் சொற்பம். ஏன் அப்படி ? அவர்கள் தேர்ந்தெடுக்க பரந்த தளத்தைக் கொண்டவர்கள்” என்ற விவேகானந்தரின் மேற்கோள் இன்றைக்கும் நமக்குப் பொருந்துகிறது.

அன்புடன்,

தேவமைந்தன்

(அ.பசுபதி)


karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்