சித்ரா சிவகுமார்
இரவில் யாரையேனும் சந்தித்தால் இந்த வார்த்தையைச் சொல்லி பேச்சை ஆரம்பிக்கலாம். இதை இரவு வணக்கமாகவும் கொள்ளலாம்.
ஜப்பானில் இரவு நேரம் என்பது மக்கள் தங்கள் வேலை முடிந்து வீடு திரும்பும் நேரம். ஜப்பானியர்கள் எப்போதும் வேலைப் பிரியர்கள். நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்ய வல்லவர்கள். சில சமயங்களில் பல நாட்கள் சேர்ந்தார் போல் வேலை செய்யவும் சளைக்காதவர்கள். இதை நான் கண்கூடாகவே கண்டு ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.
வேலை நேரம் முடிந்த பின்பு வீடு திரும்பும் முன்னர்இ தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து உண்ணச் செல்வது சூதாடச் செல்வது என்றும் நேரத்தைக் கழிக்க வல்லவர்கள்.
தற்போது ஜப்பானில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஐம்பது சதவீததிற்கும் மேலாக இருக்கின்றனர். ஆதனால் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம். அவர்கள் பல வகைகளில் தங்கள் பொழுதைக் கழிக்க முயற்சி செய்கிறார்கள். உடற்பயிற்சி செய்வதுஇ நீச்சல் அடிப்பதுஇ பறவைகளை கண்டு ரசிப்பதுஇ பல இடங்களுக்குச் சென்று வருவது என்று பொழுதை இனிய வழிகளில் செலவழிப்பவர்கள் பலர். சூதாடிஇ குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களும் பலர்.
மன அமைதி காண விரும்புபவர்கள் மதங்களைப் பின்பற்றி அமைதி பெறுகின்றனர். ஜப்பானின் முக்கிய மதங்கள் ஷின்டோ மதமும்இ புத்த மதமும் ஆகும். மக்கள் தாங்கள் எந்த மதத்தையும் பின்பற்றவில்லை என்றே கூறுவர். இருந்தாலும் ஷின்டோ மதம் மற்றும் புத்த மதச் சடங்குகள் அவர்கள் வாழ்க்கையில் ஒன்றாகி விட்ட ஒன்று.
ஷின்டோ என்றால் ‘கடவுளர்களின் வழி” என்பது பொருள். இம்மதம் ஜப்பானில் மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறது. ஜப்பானில் பல இடங்களில் ஷின்டோ ஆலயங்கள் உள்ளன. அதன் நுழைவாயிலில் இருக்கும் ‘தோரி” என்ற கதவு மிகவும் வித்தியாசமானது. ஷின்டோ மதம்இ இயற்கையைப் புனிதமாகக் கருதும் மதம். இந்த மதத்தினர்இ கடவுள் எங்கும் இருப்பார் என்று நம்புகின்றனர். தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இந்து மதத்தினர் நம்புவதைப் போன்று அவர்கள் கடவுள் கல்இ மரம்இ மலைஇ ஆறு எங்கும் இருப்பதாக நம்புகின்றனர்.
கடவுளும் பூத கணங்களும் இயற்கையோடு ஒன்றி இருப்பதாக ஆரம்ப கால ஜப்பானியர்கள் நம்பினர். அந்த ஆவிகளை வணங்கிஇ இயற்கையோடு ஒன்றி வாழ முயன்றனர். அவர்கள் தங்கள் மூதாதயர்களையும் தேசியத் தலைவர்களையும் மதத்தின் பெயரால் எப்போதும் போற்றி வந்தனர்.
ஷின்டோ ஆலயங்கள் ஒவ்வொரு ஊரிலும் நகரின் பல்வேறு பகுதிகளிலும் உண்டு. சுத்தம் என்பது ஷின்டோ மதத்தினரின் முக்கியக் கொள்கைகளில் ஒன்று. அதனால் எப்போதும் ஆலயம் உள்ளே செல்லும் போது கைகளையும் வாயையும் கழுவி விட்டே செல்ல வேண்டும்.
புது வருடத்தின் போதும் வாழ்க்கையில் ஏதேனும் சங்கடமான சூழல் ஏற்படும் போதும் மக்கள் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவர். ஷின்டோ மதத்தினரும் நம் இந்து மதத்தவர்கள் போல் பிறப்பின் போதும் திருமணத்தின் போதும் பல்வேறு சடங்குகளைச் செய்து மகிழ்கின்றனர்.
மக்கள் தங்கள் வீடுகளிலேயே மாடங்களை அமைத்து வழிபடுகின்றனர். கையை உயர்த்தி அமர்ந்து இருக்கும் பூனை குடும்பத்திற்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்று அவர்கள் நம்புகின்றனர். இது வீட்டிற்குச் செல்வச் செழிப்பைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையும் உண்டு.
அடுத்த முக்கிய மதம் புத்த மதம். இம்மதம் ஜப்பானிய அரசவையில் கி.பி. 552 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அது பதிமூன்றாம் நூற்றாண்டில் மக்கள் மத்தியில் விரும்பி ஏற்கப்பட்டலும் இஷின்டோ மதத்தோடு புத்த மதத்தையும் மக்கள் பின்பற்ற ஆரம்பித்தனர். இம்மதத்தினர் மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டவர்கள். அதனால் ஜப்பானியர்களின் வாழ்க்கை முறையும் பல வகைகளில் அதையொட்டியே இருக்கிறது.
பெரும்பாலும் ஜப்பானியர்கள் புனித ஸ்நானமும் திருமணமும் ஷின்டோ ஆலயங்களில் செய்து கொண்டாலும்இ இறந்த பின்பு புத்த மத வழியிலேயே அடக்கம் செய்யப்படுகின்றனர். புத்தர் இறக்கும் தருவாயில் இருப்பவர்களையும்இ இறந்தவர்களையும் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உண்டு. புத்த மதப் பாசுரங்கள் பாடப்பட்டுஇ உடல் தகனம் செய்யப்படும். ஈமச் சடங்குகளுக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட 40 இலட்சம் யென்; வரை ஆகும். இறந்தவரின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில் ஈமச் சடங்குக்கு வருபவர்கள் 5000 யென்; முதல் 30000 யென் வரை செலவுக்கென்று தருவது வழக்கம்.
ஜப்பானின் மிகப் பழமையான நகரத்தில் ஒன்றான கியோதோவில் மட்டும் ஆயிரக்கணக்கான ஷின்டோ ஆலயங்களும் புத்த மத ஆலயங்களும் உண்டு.
ஆலயங்களுக்குச் செல்வோர் அங்கு ஊதுபத்திகளை ஏற்றி வணங்குவர். ஊதுபத்திப் புகை அவர்களைச் சுத்தப்படுத்துவதாக நம்புகின்றனர். அது நல்ல உடல் நலத்தையும் கொடுக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.
பல புத்த ஆலயங்களில் ‘ஒமிகுஜி” என்ற சாதனம் உண்டு. இது ஒருவரது வருங்காலம் பற்றிய குறிப்புகளைத் தரும். நம் ஊர் சோதிடக் குறிப்புகளைப் போன்றது அது. முப்பது யென் போட்டால் பழங்கால எழுத்துக்கள் கொண்ட ஒரு சிறிய காகிதத்தில் எழுதப்பட்டு இருக்கும். அட்டை ஒன்று மூங்கில் குச்சியில் கட்டப்பட்டு வெளியே வரும். அதைப் படித்துப் பார்த்து வருங்காலத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
‘மிசுகேஜிசோ” என்ற சிலைகள் சில ஆலயங்களில் உண்டு. ‘ஜிசோ” குழந்தைகளையும் சிறுவர் சிறுமியர்களையும் காக்கும் தன்மை படைத்தவர் என்று நம்பப்படுவதால் அத்தகைய சிலைகளுக்குத் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காகவும் நோய்வாய் பட்ட குழந்தைகளுக்காகவும் கழுத்தில் துணி கட்டி விடுவர்.
இந்தியர்களின் வீட்டில் பூஜை மாடம் அல்லது அறை இருப்பதைப் போன்றே பெரும்பாலான ஜப்பானியர் வீட்டில் ஒரு அறையில் சிறிய மாடம் வணங்குவதற்கென்று அமைக்கப்பட்டு இருக்கும். அங்கு அவர்கள் தங்கள் மூதாதயர்களை வணங்கி மரியாதை செலுத்துகிறார்கள். பழங்களையும் பூக்களையும் மூதாதயர்களுக்குப் பிடித்த பொருட்களையும் மாடங்களில் வைத்து பூஜிக்கிறார்கள்.
ஜப்பானில் பதினோறாம் நூற்றாண்டில் கிறிஸ்துவ மதம் அறிமுகமானது. ‘தேசியத் தனிமை”யின் போது கிறிஸ்துவ மதம் பகிஷ்கரிக்கப்பட்டது. கிறிஸ்துவ மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். அதனால் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுபவர்கள் மிகவும் குறைவு.
ஜப்பானியர்கள்; இந்தியர்கள் அளவிற்கு மதக் கொள்கையில் தீவிரமாக இல்லாவிட்டாலும் சடங்குகளைத் தவறாமல் பின்பற்றுபவர்களே.
- மனிதர்கள் இல்லாத பொழுதுகள்
- கருணாகரன் கவிதைகள்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின ? (கட்டுரை: 7)
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 11 -விண்ணை எட்ட மண்ணைப் புண்படுத்துபவர்கள்
- 2006-ம் ஆண்டு “விளக்கு விருது” தேவதேவனுக்கு வழங்கப் படுகிறது
- The Mighty Heart :இது இது தான் சினிமா:
- அடுத்த தலைமுறைக்குத் தமிழைப் பாதுகாக்க வேண்டும்
- கானல் காடு சந்திப்பு – அக்டோபர் 6, 7
- வசந்தங்களைத் தொலைத்த வலிகளின் ஆவணம் _ “மை” பெண் படைப்பாளிகளின் கவிதைத் தொகுப்பு
- நினைவுகளின் தடத்தில் – (3)
- ‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 3 சுஜாதா
- லா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி
- ஈழத்துப்பூராடனாரின் கன்னங்குடா உழுதொழிற் பள்ளு
- ஆட்டோகிராப்
- லா.ச.ரா.வின் பாற்கடலும் போர்க்களமும்
- எச்.முஜீப் ரஹ்மானின் தேவதூதர்களின் கவிதைகள் (ஒரு பின்னை நாவல்)
- மனம் மொழி மெய்
- பாற்கடலைக் கடைந்த விதம்
- லா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக..
- உயிர்மையின் ஏழு நாவல்கள் வெளியீட்டு விழா
- கோவிந்த் கடிதம் பற்றி
- பாரதி தமிழ்ச்சங்கம் – ஒரு அதிகாரபூர்வ விளக்கம்
- பேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களின் ஒப்பாரிப்பாடல்கள் குறித்த கட்டுரை
- இலங்கைக்கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்
- மாத்தா ஹரி – அத்தியாயம் 40
- ஜெகத் ஜால ஜப்பான் – 4. கொம்பான்வா
- பொண்ணுங்க மாறிட்டாங்க!
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 2
- தைவான் நாடோடிக் கதைகள் 4
- வெள்ளிக் கரண்டி
- ஹிந்து என்னும் அடையாளம் மிகவும் அவசியம்
- படித்ததும் புரிந்ததும் – 14- உறைந்த நினைவுகளும், உருகிய மனிதர்களும்
- குறிப்பேட்டுப் பதிவுகள் -4!
- டபுள் இஞ்ஜின்
- இட்டிலி மாவில் ஒரு புதுப் பலகாரம்
- முப்பெருவெளியின் சங்கமம்
- தாகூரின் கீதங்கள் – 7 பாதையைத் தேடி !
- அக்கினிப் பூக்கள் -4
- நின்னைத் துதித்தேன்
- பாரதி இன்றிருந்தால்..?
- பாரதிக்கு அஞ்சலி!
- எனக்கென்று ஒரு கை