ஜயலலிதாவின் குவாலிஃபிகேஷன்: சு.ராவுடனான கலந்துரையாடலையொட்டிக் கொஞ்சமாய்ச் சில பழங்கதைகள்

This entry is part [part not set] of 23 in the series 20051111_Issue

மலர் மன்னன்


சுந்தர ராமசாமியுடனான உரையாடலில் எம்ஜிஆர் ஜயலலிதா பற்றிய சு.ரா. மற்றும் சிலரின் கருத்துகளைப் படித்தேன். இது தொடர்பாக எனக்குத் தெரிந்த விவரங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது உபயோகமாயிருக்கக் கூடும்.

நான் ஜயலலிதாவின் ஆதரவாளன் அல்ல என்பதையும் அவரை இதுவரை சந்தித்ததேயில்லை என்பதையும் முதலிலேயே தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன். மேலும், அவர் ஒரு வேண்டாத சக்தி என்றும் அவரை ஊக்குவிக்கக் கூடாது என்றும் எம்ஜிஆரிடமே மிகவும் துணிவுடன் கூறி அவரது கடும் சினத்திற்கும் ஆளானவன் நான். ஆனால் அவரே பின்னர் அதனை உணர்ந்து, கட்சியில் எவரும் ஜயலலிதாவுடன் எவ்விதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று தமது இறுதிக் காலத்தில் அனைவரிடமும் வலியுறுத்தினார். ஜயலலிதாவை அவர் தமது இறுதிக் காலத்தில் ஒதுக்கியே வைத்திருந்தார்.

நான் தி.மு.க. பிளவு பட்ட சமயத்தில் எம்ஜிஆருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றவன். அந்த நாட்களில் தினமுமே அவருடன் இருந்து நள்ளிரவில் அவரது ஏற்பாட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தவன். அவரிடம் எதையும் எதிர்பார்க்காமல் நாட்டு நலனை முன்னிட்டு தி.மு.க. பலவீனப்பட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவருடன் இருந்தவன். கே ஏ கிருஷ்ணசாமியையும் மதியழகனையும் ஊக்குவித்து

அதிமுக ரசிகர் மன்றமாக அல்லாமல் அரசியல் கட்சியாக ஸ்திரப்படப் பாடுபட்டவன்.

1971 தேர்தல் முடிவுகளால் காமராஜர் மிகவும் மனம் சோர்ந்து போயிருந்தார். திமுக என்ற அரக்கனை அப்புறப்படுத்த அதற்குள்ளேயிருந்தே இன்னொரு அரக்கன்தான் வந்தாக வேண்டும் போலிருக்கிறது என்று கூறலானார். அதற்கான தருணத்தையும் சாத்தியக்கூறுகளையும் எதிர்பார்த்திருந்தோம். கருணாநிதியின் போதாத காலம், அவரே அதற்கு வழியமைத்துக் கொடுத்தார். எம்ஜிஆருக்கு கட்சியிலும் மக்கல் மத்தியிலும் உள்ள செல்வாக்கை அப்போது தம்மிடமிருந்த முதல்வர் பதவி பலத்தைக் கொண்டு அழித்துவிட முடியுமென்று நம்பி அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலானார். போயும் போயும் தன் மகன் மு க முத்துவை எம்ஜி ஆருக்கு எதிரான காயாக அவர் நகர்த்த முற்பட்டதுதான் பதவி போதையின் உச்சம்! எம்ஜிஆருக்கு சினிமாதான் ப்ரதான ஆயுதமாதலால் அவர் உடனே ஆக்ரோஷத்துடன் பதிலடி கொடுக்க ஆயத்தமானார். அதன்பின் நடந்தவை சரித்திரம்.

தமக்குப் பிறகு கருணாநிதியை எதிர்கொள்கிற தெம்பு தம் கட்சியில் எவருக்குமே இல்லை என்பதைப் புரிந்துகொண்டதால்தான் அவர் ஜயலலிதாவை அரசியலுக்கு இழுத்தாரேயன்றி ஜயலலிதா மீது அவருக்கு இருந்த பலவீனத்தால் அல்ல என்பதை மிகத் தெளிவாகவே அறிவேன்.

ஜயலலிதாவுடன் எனக்கு நேரடியான பரிச்சயம் இல்லை என்றாலும், எதையும் சட்டென்று புரிந்துகொண்டு அதற்கு ஏற்பத் தம்மைத் தயார் படுத்திக்கொள்ளத் தெரிந்தவர் என்பதை எம்ஜிஆர் மூலமாகவே கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருமுறை அவர் என்னிடம் ஜயலலிதாவின் புத்திக் கூர்மைபற்றி மிகவும் சிலாகித்துப் பேசியபோது ‘அப்படியானால் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக அல்லவா இருக்க வேண்டும் ‘ என்று சொல்லி அவரது விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டேன்.

எம்ஜிஆர் மறைந்த செய்தி கேட்டவுடன் ஜயலலிதாவிடமிருந்து பீறிட்டு வந்த இயற்கையான வெளிப்பாடு என்ன தெரியுமா ? ‘ஒரு மூச்சுத் திணறலிலிருந்து விடுதலை பெற்றதாக உணர்கிறேன் ‘ என்பதுதான். இதனை அவர் தமக்குச் சவுகரியமான ஆங்கிலத்தில் கூறினார்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜயலலிதா நிர்கதியாக வீட்டில் முடங்கிப் போனார். திருநாவுக்கரசு போன்றவர்கள்தான் அவரை உசுப்பிவிட்டு வெளியே கொண்டுவந்தார்கள். காரணம் அவர்களுக்கு ஒரு பீடம் வேண்டுமே, நின்றுகொள்ள!

எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அவர் எதிர் பார்த்ததுபோலவே ஜானகியை முன் வைத்து அதிகாரம் செலுத்த முற்பட்ட ராம. வீரப்பன் பின்னால் நின்றவர்கள் கருணாநிதியைச் சரணடைந்தனர். அவரும் இந்திரா பாணியில் ராம. வீரப்பனின் கழுத்தை அறுத்தார்.

அடுத்து வந்த தேர்தலில் இரண்டாகப் பிளவுபட்ட அதிமுக வில் ராம வீரப்பன் பிரிவு படு தோம்ல்வியடைந்தது. பி.எச். பாண்டியன் மட்டுமே தன் சொந்த செல்வாக்கில் ஜயித்தார். ஜயலலிதா பிரிவில் அவரும் மேலும் 26 பேரும் வெற்றி பெற்றனர். ராம வீரப்பன் ஜயலலிதாவைவிட அனுபவம் உள்ளவர் ஆதலால் அவரது அணி அதிக இடங்களைப் பெறும் என்றுதான் நான் கூடக் கணக்குப் போட்டேன். கே ஏ கே போன்றவர்களை அவர் பக்கமே இருக்கச் சொல்லி அவர்களின் தோல்விக்கும் காரணமானேன். அன்றே ஜயலலிதா அரசியலில் தன் குவாலிஃபிகேஷனை நிரூபணம் செய்துவிட்டார். மேலும், கட்சி முழுவதையுமே தன்கீழ் வசப்படுத்தி தன் குவாலிஃபிகேஷனை மேம்படுத்திக்கொண்டார்.

ஜயலலிதா சென்னை சர்ச் பார்க் கான்வெண்ட்டில் படித்து முடித்ததற்குமேல் கல்வியைத் தொடராமல் மில்ஸ் அன் பூன் நாவல்களைப் படித்துக் கொண்டிருந்தவர்தான். ஆனால் அரசியலுக்கு வந்தபின் அவர் வெகு விரைவாகவே எல்லா நெளிவு சுளிவுகளையும் கற்றுத் தேர்ந்து விட்டார். இன்று தமிழ் நாட்டு அரசியலில் கருணாநிதிக்கு எதிராக உள்ள ஒரே எதிர்ப்பு சக்தியாக அவர்தான் உள்ளார். தன்னந்தனியாக நின்று கருணாநிதியின் பாணியிலேயே அவரை வீழ்த்தக் கூடிய சக்தியாக அவரைத்தான் வாக்காளர்கள் அடையாளம் காண்கிறார்கள். இதுதான் அவருக்குள்ள குவாலிஃபிகேஷன். இதனை எம்ஜிஆர் அன்றே அறிந்திருந்தார்.

ஜயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் உள்ள பொதுவான அம்சம் பதவியைச் சிறிதும் தயக்கமின்றிச் சுயநலனுக்குப் பயன்படுத்திக் கொள்வது. ஆனால் ஜயலலிதா பதவியில் இருந்தால் தேச விரோத சக்திகள் சிறிது கட்டுப்பாட்டில் இருக்கும். எனவே ஜயலலிதாவுக்கே இன்றைய சூழ்நிலையில் ஆட்சியில் நீடிப்பதற்கான குவாலிஃபிகேஷனும் இருப்பதாகப் பொதுவாக ஓர் எண்ணம் தேசிய நலனைப் பற்றிக் கவலைப்படுவோரிடையே இருந்துவருகிறது.

சுந்தர ராமசாமியும் நானும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தது உண்டு. பல சமயங்களில் ஒத்து போனதும் உண்டு. நான் 1/4 ஆய்வு இதழின் முதல் இதழை வெளியிட முனைந்த சந்தர்ப்பத்தில் சுந்தர ராமசாமியின் படைப்பு அதில் இடம் பெற வேண்டும் என்று விரும்பினேன். தற்போது ஜே ஜே சில குறிப்புகள் என்ற நாவலை எழுதி வருவதால் சிறு கதையோ கட்டுரையோ எழுதும் மனநிலை இல்லை என்றும் பிறகு வரும் இதழ்களில் எழுதுவதாகவும் சொன்னார். நான் ஜே ஜே சில குறிப்புகளின் தொடக்க அத்தியாயங்களையே அனுப்புமாறும் அவற்றை வெளியிடுவது நாவலுக்கு ஒரு முன்னறிவிப்பு மாதிரி இருக்கும் என்றும் சொன்னேன். அவரும் அனுப்பி வைத்தார். 1/4 முதல் இதழில் அதன் தொடக்கப் பகுதி வெளியாகி, முழு நாவலும் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை வெகு பரவலாகத் தூண்டிவிட்டது. அது பற்றிய விசாரணைக் கடிதங்கள் ஏராளமாக வந்தன.

அடுத்த இதழில் ‘குதணஞீச்ணூச் கீச்ட்ச்ண்ச்ட்டி டச்ண் ண்tணிடூ ?ண tட ? tடதணஞீ ?ணூ ‘ என்று எனது தலையங்கத்தில் குறிப்பிட்டதோடு, விசாரிப்புக் கடிதங்களையும் அவருக்கு அனுப்பிவைத்தேன். நாவலை விரைந்து எழுதி முடிப்பதற்கான உற்சாகத்தைத் தாம் பெறமுடிந்ததாக எனக்கு அவர் நன்றி கூறினார். ஏ ? தீச்ண் ?துtணூ ?ட் ?டூதூ டச்ணீணீதூ ?ணிணூ ட்தூ ணூ ?ட்ச்ணூடு tடச்t ட ? டச்ஞீ ண்tணிடூ ?ண tட ? tடதணஞீ ?ணூ.

எதற்கு இதைக் குறிப்பிடுகிறேன் என்றால் சு.ராவும் நானும் பல்வேறு விஷயங்களை விவாதித்த போதிலும் தமிழ் நாட்டு அரசியலை, குறிப்பாக கருணாநிதிஜயலலிதா அடிப்படையில் விவாதித்ததில்லை. அப்படி விவாதித்திருந்தால் ஜயலலிதாவின் குவாலி ஃபிகேஷனை அவருக்கு எடுத்துக் காட்டியிருப்பேன். அவர் இதைப் படிப்பதற்கு இப்போது இல்லையென்றாலும், அவருடனான அன்றைய கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் தெரிந்துகொள்வதற்காக இவ்வளவும் சொல்லலானேன்.

ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் காமராஜர் உள்ளிட்ட பலருடன் பழகும் வாய்ப்பு எனக்கு இருந்தது. 1971 பாராளுமன்றத் தேர்தலையொட்டி சட்ட மன்றத் தேர்தலுக்கும் கருணாநிதி வழிசெய்தபோது ஸ்தாபன காங்கிரஸ் தமிழ் நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என்று காமராஜர் உறுதியாக நம்பினார். அப்போது தலைமைச் செயலாளராக இருந்த ராயப்பா, ஐ ஜி அருள் வேறு அவரைச் சந்தித்து அந்த நம்பிக்கைக்கு வலுவேற்றினார்கள். ஆனால் தேர்தல் முடிவு நேர் எதிராக அமைந்தது. காமராஜர் சோர்ந்து போய் ‘ஒரு ராட்சசனை அடிக்க அந்த ராட்சசக் கும்பல்லேர்ந்தே இன்னோரு ராட்சசன் வந்தாத்தான் முடியும் போலிருக்கேப்பா ‘ என்று எங்களிடம் சலித்துக் கொண்டார்.

அ தி மு க தோன்றியபின் தி மு க, அ திமு க இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்ற அவரது விமர்சனம் ஜகப் பிரசித்தமேயல்லவா ?

அதனால்தான் அவர் இந்திராவைப் பரம விரோதியாகக் கருதியபோதிலும் கோவையில் லோக் சபைக்கு இடைத் தேர்தலும் பாண்டிச்சேரியில் சட்டமன்றத் தேர்தலும் வந்தபோது தமது சுய கவுரவத்தையும் விட்டுக் கொடுத்து இந்திரா காங்கிரசுடன் கூட்டு வைத்தார். அப்படியும் எம்ஜிஆர் அலையின் வேகத்தில் ஸ்தாபன மற்றும் இந்திரா காங்கிரஸ் இரண்டுமே அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

முற்றும்

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்