சை.பீர்முகம்மது

This entry is part [part not set] of 33 in the series 20090212_Issue

பாண்டித்துரை



மலேசியத் தமிழ் இலக்கியத்தை உலகப் பார்வைக்குக் கொண்டு போக வேண்டுமென்ற பரந்த நோக்கில் அயராது இயங்கி வருபவர் சை.பீர்முகம்மது. 1942-ம் ண்டு கோலாலம்பூரில் பிறந்த இவர், 1959 முதல் சிறுகதை, கவிதை, நாவல், பயணக்கட்டுரை என்று பலதளங்களிலும் பயணித்து வருகிறார்.

1984 -‘வெண்மணல்’ சிறுகதைகள், 1997-‘பெண்குதிரை’ நாவல், 1997-‘கைதிகள் கண்ட கண்டம்’ பயணக்கட்டுரை, 1998-‘மண்ணும், மனிதர்களும்’ வரலாற்றுப் பயணக் கட்டுரை, 2006-‘திசைகள் நோக்கிய பயணம்’ கட்டுரைகள் – இவை படைப்பிலக்கியத்திற்கு இவர் இதுவரை அளித்துள்ள பங்களிப்பு. தற்போது ‘அக்கினி வளையங்கள்’ என்ற நாவல் அச்சில் உள்ளது.

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் ஐம்பதாண்டுகாலச் சிறுகதைகளை ‘வேரும் வாழ்வும்’ என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளாகத் தொகுத்துள்ளார். அது மலேசிய எழுத்துக்களுக்கு பரவலான உலகப் பார்வையைப் பெற்றுத் தந்தது. ‘மலேசியத் தமிழர்களின் வாழ்வும் இலக்கியமும்’ என்ற கட்டுரைத் தொகுப்பும் இவரால் வெளியிடப்பட்டது.

மலேசியா மட்டுமல்லாது, சிங்கப்பூர் உட்பட அயலகத் தமிழ்த் இலக்கியங்களை தொடர்ந்து தமிழகத்தில் அறிமுகப்படுத்துவதில் முனைப்போடு செயல்படுவதன் மூலம், இந்த வட்டாரத்தில் அவரது பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

வரும் பிப்ரவரி 22, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணிக்கு, விக்டோரியா ஸ்டிரீட்டில் அமைந்துள்ள சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் சை.பீர்முகம்மதின் புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் அறிமுக விழா நடைபெறுகிறது. ‘பயாஸ்கோப்காரனும், வான்கோழிகளும்’ என்ற இந்த நூலை ஜோதி.மாணிக்கவாசகம் அறிமுகம் செய்கிறார்.

எழுத்தாளர் சை.பீர்முகம்மதோடு வாசகர்கள் கலந்துரையாடும் அங்கத்தை முனைவர் இரத்தின வேங்கடேசன் வழிநடத்துகிறார். ‘வாசிக்க, நேசிக்கத் தமிழ்’ என்ற தலைப்பில் மலேசிய வார இதழ் தென்றலின் சிரியர் வித்யாசாகரின் சிறப்புரை இடம் பெறுகிறது. பிரபல மலேசிய எழுத்தாளர்கள் கோ.புண்ணியவான், கே.பாலமுருகன் உட்பட கலந்து கொள்ளும் இந்த நிகழ்வு தங்கமீன் பதிப்பகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

சை.பீர்முகம்மதின் இலக்கியப்பயணம்

சை.பீர்முகம்மதுவின் நேர்காணல்கள் வெளியாகி உள்ள தமிழக பத்திரிக்கைகள்

உயிரெழுத்து

தாமரை

துக்ளக்

குமுதம்

காலச்சுவடு

சை.பீர்முகம்மதுவின் நேர்காணல்கள் வெளியாகி உள்ள இலங்கை பத்திரிக்கைகள்

வீரகேசரி

தினகரன்

சை.பீர்முகம்மதுவின் நேர்காணல்கள் வெளியாகி உள்ள ஸ்திரேலியப் பத்திரிக்கைகள்

கலப்பை

அக்கினிக்குஞ்சு

சை.பீர்முகம்மதுவின் நேர்காணல்கள் வெளியாகி உள்ள மலேசியப் பத்திரிக்கைகள்

காதல்

நயனம்

சை.பீர்முகம்மதுவின் நேர்காணல்கள் வெளியாகி உள்ள சிங்கப்பூர் பத்திரிக்கை

சிங்கப்பூர் தமிழ்முரசு

சை.பீர்முகம்மதுவின் நேர்காணல்கள் ஒளிபரப்பான இந்தியத் தொலைக்காட்சிகள்

தூர்தர்ஷன்

சன் டி.வி (வணக்கம் தமிழகம்)

ஜெயா டி.வி

சை.பீர்முகம்மதுவின் நேர்காணல்கள் ஒளிபரப்பான மலேசியத் தொலைக்காட்சிகள்

RTM 2ல் – மூன்றுமுறை இவரது பேட்டி நேரடியாக ஒளிபரப்பாகியுள்ளது.

மலேசியத் தொலைக்காட்சிக்காக ஜெயகாந்தனை இவர் எடுத்த பேட்டி, மலாயா பல்கலைக்கழகத்தின் மொழியியல் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது

சை.பீர்முகம்மதுவின் நேர்காணல்கள் ஒலிபரப்பாகியுள்ள வானொலிகள்

ரேடியோ மலேசியா

சிங்கப்பூர்

இலங்கை

ஸ்திரேலியா ( சிட்னி பிராட்காஸ்டிங்)

தற்போது மலேசியாவின் மின்னல் FM-l அயலக இலக்கியம் என்ற தலைப்பில் 20 வாரங்களாக இவரது உரை ஒலிபரப்பாகி வருகிறது

Series Navigation

பாண்டித்துரை

பாண்டித்துரை