சாப்பீஸ்
ஆர் சந்திரா
தேவையான பொருட்கள்:
சேனைக் கிழங்கு
தேங்காய்த் துருவல் : ஒரு கோப்பை
மிளகு : ஒரு தேக்கரண்டி
ஜீரகம் : ஒரு தேக்கரண்டி
சோம்பு : ஒரு தேக்கரண்டி
பட்டைக்கிராம்பு : சிறிது
பூண்டு : நான்கு பற்கள்
மிளகாய்த் தூள் ; கால் தேக்கரண்டி
மஞ்சள் பொடி : கால் தேக்கரண்டி
வெங்காயம் : ஒன்று
எண்ணெய் : நான்கு தேக்கரண்டி
செய்முறைகள் :
1. சேனைக்கிழங்கை ஒரு கன செண்டி மீட்டர் பரிமாணத்தில் வெட்டிக் கொள்ளவும். அதனை நீரில் வேக வைத்து வடிகட்டிக் கொள்ளவும்
2. தேங்காயுடன் மிளகு, ஜீரகம், சோம்பு, பட்டைகிராம்பு, பூண்டு, வெங்காயம், எல்லாவற்ரையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு சேனைக் கிழங்கைப் போட்டுச் சிறிது வதக்கவும்.
4. மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய்ப் பொடி மற்றும் அரைத்த தேங்காய் மசாலாவைச் சேர்த்துக் கிளறிக் கொதிக்க விடவும்.
5. சேனைக் கிழங்கும் மசாலாவும் நன்கு கலந்து ஒன்று சேர்ந்தவுடன், இறக்கவும்.
6. இதனை சாதத்திற்கும் அல்லது சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளச் சுவையாக இருக்கவும்.
திண்ணை
|