சேதி கேட்டோ..

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

குண்டலகேசி


முன்னாள் அமெரிக்க (ரிபப்லிகன்) ஜனாதிபதியாக இருந்த ரொனால்ட் ரீகன் காலமானார். அமெரிக்காவிற்கும் சோவியத்திற்கும் இடையே இருந்த பனிப்போர் முடிவடைந்ததற்கு இவர் தான் காரணம் என்று ஒரு புறம் தம்பட்டம் அடிக்கின்றனர். இதை விட பெரிய பொய் உலகத்தில் கிடையவே கிடையாது என்று வாதிடுபவர்களும் உண்டு. ஆனால் அவர் சிறந்த நகைச்சுவை உணர்வு உடையவராக இருந்தார் என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. அவர் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் ஆபரேசன் அறையில் இருந்த போது டாக்டர்களைப் பார்த்து ‘நீங்கள் ரிபப்லிகன் கட்சியை ஆதரிப்பவர்கள்தானே ‘ என்று கேட்டார்.

**

நாய்களுக்கு மொழியை புரிந்து கொள்ளும் அறிவு உண்டு என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். நாய்களுக்கு கிட்டதட்ட மூன்று வயது குழந்தைக்கு உள்ள அறிவுக்கு இணையான மொழியறிவு உண்டு. ஆகையால், இஈஇனி நாய்கள் இருக்கும் ஈஇடத்தில் பக்கம் பார்த்து பேசவும்.

**

மார்கன் ச்பர்லாக் என்பவர் காலை, மாலை, இரவு என்று மூன்று வேளையும் ‘மெக் டொனால்ட்ஸ் ‘ உணவையே சாப்பிட்டு வந்தார். இதனால் இவருடைய உடம்பில் கொழுப்பு சத்து ஏகத்துக்கும் ஏறி, லிவர் (ஏதோ ஒரு ஈரல்) கெட்டுப் போய், உடல் கனமாகி துன்பப்பட்டார். இதையே ‘Super Size Me ‘ என்ற துண்டு படமாக எடுக்க, அந்த படம் ஓஹோ என்று ஓட, ஆறரை கோடி டாலர்கள் இலாபம் ஈட்டியுள்ளார். பொதுவாக அமெரிக்கர்கள் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள விட்டுவிட்டு யோகா, காய்கறி உணவு, உடல் பயிற்சி என்று மாறி வருகின்றனர். இந்தியர்கள் அதற்கு நேர்மாறாக பிஸா, பர்கர் என்று மாறுகிறார்கள்.

**

நகைச்சுவை கேட்பவர் மூடைப் பொறுத்தது. ஜப்பானில் ஒரு சிறிய கம்பெனி ‘Buddha Booger ‘ ( புத்தர் மூக்கு சளி ) என்று ஒரு இனிப்பு வகையை விற்று வந்தது. சுற்றுலா பயணிகளிடம் ஈந்த ஈனிப்பு மிகவும் பிரபலம். இதை புத்தர் கோவில் எதிர்த்ததால் இவர்களுடைய ஈனிப்பு தயாரிகும் பேடென்ட் பிடுங்கப்பட்டது. இதை எழுதிய அடுத்த நாளே அமெரிக்க டிவியில் நான் ஒரு டி-ஷர்ட் வடிவமைப்பு போட்டியை கண்டு அதிர்ச்ிசி அடைந்தேன். அதில் ஒருவர் ‘Buddha Hogs ‘ என்ற வாசகம் எழுதிய டி-ஷர்ட்டுடன் ஒருவர் போஸ் கொடுத்தார். இந்த வாசகத்திற்கு கீழே புத்தர் படம். புத்தர் தலையின் இரு பக்கம் பன்றி காதுகள்.

மேலும் காணவும் http://www.wacky-jokes.com/gaggifts/awe_inspiring_dog_buddha.php

—-

kundalakesi_s@yahoo.com

Series Navigation

குண்டலகேசி

குண்டலகேசி