சுந்தர் காளியின் “திருமுகமும்,சுயமுகமும்” – பண்பாட்டாய்வுக் கட்டுரைகள் புத்தகம்

This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue

அறிவிப்பு


திருமுகமும்,சுயமுகமும் – பண்பாட்டாய்வுக் கட்டுரைகள்
சுந்தர் காளி- 96 பக்கங்கள்- முதல் பதிப்பு(2005)- ரூ 40

அணிந்துரை (முனைவர் இ.முத்தையா, தலைவர், நாட்டுப்புறவியல் துறை, மதுரை காமராசர்
பல்கலைகழகம்)
முன்னுரை
1,ஒன்றிப்பில்லா சமூகங்கள்:
சடங்கும், அடையாளமும் பற்றிய சில குறிப்புகள்
2,உலா: குறிகளும்,முரண்களும்
3,அன்னங்கறி இன்னதிது
சடங்கார்த்த உணவும், சமூகமும் பற்றிய சில குறிப்புகள்
4,தொண்டரும், அம்மையும்: கதை இணைவின் தர்க்கம்
5,இரணிய நாடகத்தில் வெளி
6,திருமுகமும்,சுயமுகமும் : முகமூடிகள் பற்றியொரு சிறு குறிப்பு

பின்னிணைப்பு :
1, சிறுத்தொண்ட நாயனார் சரித்திர கீர்த்தனையுடன் இணைந்த
சீலவதி சரித்திர கீர்த்தனை
2,சிறுத்தொண்ட பத்தன் கதையுடன் இணைந்த காரைக்காட்டமை கதை
புகைப்படங்கள்

வெளியீடு : காரோன் – நீரோன் பதிப்பகம்
2 ஜவகர் சாலை, சொக்கிகுளம்,மதுரை 625002

விற்பனையுரிமை, மற்றும் பிரதிகளுக்கு

யாதுமாகி பதிப்பகம்
37/17 ராமசாமி கோயில் சந்நிதி தெரு
பாளையங்கோட்டை 627 002
திருநெல்வேலி மாவட்டம்

நூலாசிரியர் பற்றிய குறிப்பு: சுந்தர் காளி மதுரை காமராசர் பல்கலைகழகத்தில்
முனைவர் பட்டம் பெற்றவர். நாட்டுப்புறவியல், நிகழ் கலைகள், வெகுஜனக் கலச்சாரம்,
திரைப்படம், நாடகம் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர். நடிகர், இயக்குனர்,
விமர்சகர். தற்போது காந்திகிராமம் நிகர் நிலை பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக
பணியாற்றுகிறார்.அமெரிக்கன் கல்லூரி, விஸ்கான்ஸின் பல்கலைகழகத்தில் கற்பித்திருக்கிறார்.

ஆங்கிலத்தில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.தமிழ்ச் சூழலை விட இவர் அகில இந்திய /சர்வதேச
ரீதியாக அதிகம் அறியப்படுபவர் என்றால் அது மிகையில்லை. இந்தியாவின் தலை சிறந்த சமூக அறிவியலாளர்களாக கருதப்படும் அஷிஸ் நந்தி,பார்த்தா சாட்டர்ஜி பதிப்பித்துள்ள/தொகுத்துள்ள நூல்களில் இவர் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. Subaltern Studies Vol 10 ல் இவரது கட்டுரை இடம் பெற்றுள்ளது.
தமிழ் சினிமா குறித்து இவர் எழுதியுள்ள கட்டுரைகள் The Secret Politics of Our
Desires (Ed) Ashis Nandy, Making Meaning of Indian Cinema (Ed) Ravi Vasudevan
ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளன.British Film Institute வெளியிடவிருக்கும் நூலில் இவர்
எழுதிய கட்டுரைகள் இடம் பெறுகின்றன. டேவிட் ஷ¤ல்மனை பதிப்பாசிரியாகக் கொண்டு
வெளியாக உள்ள நூலில் இவர் முகமூடிகள் குறித்து எழுதியுள்ள கட்டுரை உள்ளது. குணா
திரைப்படம் குறித்து Deep Focus ல் இவர் எழுதிய கட்டுரை பரவலான கவனத்தினைப்
பெற்றது. இவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டால்
அது வரலாறு,பண்பாட்டாய்வில் புதிய வெளிச்சத்தினைத் தரும், புதிய தடங்களைக் காட்டும்.

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு