பொருளா நீ ?
சிற்பி
செதுக்காத
பொற்சிலையே!
கற்காலம் முதல்
தற்காலம் வரை
உன்னைத்
தங்கக் குடமாய்
வைரத் தோடாய்
பணயம் வைத்து
ந்ினது
தாய், தந்தையர்
தரகன்,
தங்கக் கணவன்,
மாமன்,
மாமியார்,
திருமணச் சந்தையில்
ஏலம் போட்டு
மாலையிட
‘விலைப் பொருளாய் ‘
விற்று வருகிறார்!
வெள்ளித்
திரையில்
முத்தமிழ்
மூவேந்தர்கள்,
பாரதி ராஜா
பாக்கிய ராஜா
மற்றும்
இளைய ராஜா
ஒன்று கூடி
உனக்கு
ஊர்வசி
வேஷம் போட்டு
பூங்காவில் ஆடவிட்டு
பொன்னருவியில்
நனைய விட்டு
பின்னிசைக்
குயிலைப்
பாட விட்டு
உன்னைக்
‘கலைப் பொருளாய் ‘
விற்று வருகிறார்!
பெண்ணே!
நீ ஒரு பொன்னா ?
பொருளா ?
அன்றி
தலையாட்டிப்
பொம்மையா ?
உன்னை
என்று
ஆண் ஜாதி
அறிந்துகொள்ளும் ?
மாதர் குலம்
புரிந்துகொள்ளும் ?
மனித குலம்
என்று
மதிக்கும் ?
நீ
குடத்தினுள்
கிடக்கும்
ஒரு
கடலென்று!
எங்கள் இடம் எது ?
கார்நிற்க வீடுண்டு! கற்சிலைக்கும் கோயிலுண்டு!
பார்மீதில் நாய்படுக்கப் பள்ளியுண்டு! – தார்வீசும்
கல்வீதி மேடைக் கடும்பனியில் நோகின்றோம்!
இல்லையோ எங்கட் கிடம் ?
திண்ணை
|