சிகாகோவில்…. அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் சங்கத்தின் 6வது மாநாடு

This entry is part [part not set] of 35 in the series 20100801_Issue

ஆல்ப‌ர்ட்,அமெரிக்கா.


சிகாகோவில்…. அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் சங்கத்தின் 6வது மாநாடு
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கிராமப்புறப் பெண்களின்
சுகாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும்

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள கிராமப்புறப் பெண்களின் சுகாதாரத்தைப் பேணிக்காக்கும் பொருட்டு அமெரிக்கா முழுவதுமாக உள்ள தமிழ் வம்சாவளி இனத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், புளூமிங்டேல் நகரில் ஒன்று கூட உள்ளனர். இந்த‌ மாநாடு குறித்து அட்லாண்டாவிலுள்ள‌ எமோரி ம‌ருத்துவ‌ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் ஆய்வுத் திட்ட‌ மேலாள‌ராக‌ ப‌ணியாற்றும் ம‌ருத்துவ‌ர் ந‌சீரா தாவூத் ம‌ற்றும் ம‌ருத்துவ‌ர் பிரியா ர‌மேஷ் ஆகியோர் இந்த‌ மாநாடு குறித்து தெரிவித்த‌தாவ‌து:-

அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் சங்கத்தின் 6வது மாநாடு, 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 12லிருந்து 15ம் தேதி வரை ஹில்டன் / சிகாகோ- இந்திய நீர்த்தேக்க உல்லாசத் தலத்தில் நடைபெறும். நமது தாய்நாடான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள ஏழைப் பெண்கள் மற்றும் வசதியற்றவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்த அர்ப்பண உணர்வு கொண்ட இந்த பெரும் சமூக ஒன்று கூடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு சங்கத் தலைவர் டாக்டர் சித்தியன் நெடுஞ்செழியனும் மாநாட்டுத் தலைவர் டாக்டர் எஃப்.சேவியர் ரோச்சும் தமிழ் வம்சாவளியின மருத்துவர்களையும் மருத்துவத்துறை தொடர்புடைய தொழிலர்களையும் கேட்டுக்கொண்டுள்ளனர். புகழ்பெற்ற அறிவியலாளர்/ மருத்துவர் டாக்டர் கே.டபிள்யு.ராம்மோகன் மாநாட்டில் முக்கிய உரையாற்றுகிறார். இவர் ஒகையோ மாநில பல்கலைக்கழகத்தில் ஓய்வுபெற்ற துறைசார் பேராசிரியராவார்.

கலாசார, சமூக, தொழிலர் பண்புகளை வளப்படுத்தவும், மாந்தர் நலனை மேம்படுத்தவும், இணக்கமான, வெளிப்படையான அரங்காக, சட்டப்பிரிவு 501(சி) 3 அமைப்பு என்ற முறையில் சங்கம் 2005-ல் நிறுவப்பட்டது. தனது தொடக்ககால கட்டத்தில் இன்னும் இருந்தாலும், ஒவ்வொரு நாளும் புதிய உறுப்பினர்களின் சேர்க்கையுடன் சங்கம் துரிதமாக வளர்ச்சி கண்டு வருகிறது. சங்கத்தின் அறநலநிதி உதவியுடன் மேலும் அதிகமான அறநலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ் நாட்டிலும் அமெரிக்காவிலும் பதின்மூன்று அறநலத்திட்டங்களுக்கு சங்கம் $250,000க்கும் மேலாக செலவும் செய்து ஆதரவு அளித்துள்ளது. இதற்கான நற்பெயர் தமிழ் நாட்டில் உள்ள ஏழைகளின் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்தத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ள சங்கத்தின் தலைமைத்துவக் குழுவையும் உறுப்பினர்களையுமே சாரும்.

மாநாட்டில் கலந்துகொள்வதற்கான பதிவுக் கழிவுக் கட்டணச் சலுகை 2010, ஜூலை 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் உறுப்பினராக ஆகுவதற்கும் மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு பதிவு செய்துகொள்ளவும் http://atmaus.org/ATMA/mem_info.aspx. எனும் இணைய முகவரிக்கு வருகையளியுங்கள்.

தொடர் மருத்துவக் கல்வி

ஆகஸ்ட் 13 வெள்ளிக்கிழமையும், ஆகஸ்ட் 14 சனிக்கிழமையும், பல்வேறு வகையான மருத்துவத் தலைப்புகளை அடக்கிய தொடர் மருத்துவக் கல்வி நிகழ்வுகள் (சிஎம்இ) இடம்பெற உள்ளன. பெண்களின் சுகாதாரத்தில் கவனம் செலுத்தும் தலைப்புகளின் எடுத்துக்காட்டாக, மூளையின் பாலியியல் வேறுபாடுகள், இதயச் சுவர், தமனி சார்ந்த நோய் – நோயின் தீவிரப் பரவலின்போது ஏற்படும் பாலியல், கருவளப் பாதுகாப்பு போன்றவற்றைக் குறிப்பிடலாம். பிரபலமான பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த, திறமையுள்ள தமிழ் அமெரிக்க மருத்துவர்கள், நினைவில் நிற்கத்தக்க தொடர் மருத்துவக் கல்வி நிகழ்வு பேச்சாளர்களாக இடம்பெறுவர்.

பட்டிமன்றம்

மாநாட்டிற்குத் தலைமையேற்று வழிநடத்தும் டாக்டர் நெடுஞ்செழியன், டாக்டர் எஃப் சேவியர் ரோச் அடங்கிய குழுவினர், உறுப்பினர்களிடையே தோழமை உணர்வைக் கொண்டு வரவும், பல்வேறு வகையான மகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவும் அயராது உழைத்து வருகின்றனர். பட்டிமன்றத்திற்கான தலைப்பு, அமெரிக்காவில் வந்து குடியேறிய நமக்குச் சிறந்த உணவு: இட்லி, தோசையா அல்லது – PIZZA, PASTA -வா?” என அமைந்திருக்கும்.
“நாம் சிகாகோவில் கூடி நமது ஆண்டுக்கொருமுறையிலான நமது தொடர் மருத்துவக் கல்வி நிகழ்வை, சமூக நடவடிக்கைகளை, மகிழ்வூட்டுநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தும்போது, சங்கத்தின் பொதுக்கூட்டம், தலைமைத்துவக்கூட்டம் ஆகியவற்றை நடத்தும்போது, புதுத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, நாம் சிகாகோவில் ஏன் கூடியுள்ளோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள நோயுற்றோரை தொட்டில் முதல் சுடுகாடு வரை உள்ள நோய்களுக்கு உட்பட்டோரையும் சேர்த்து, ஏழைகள், திக்கற்றோர் ஆகியோரைக் குணப்படுத்த உதவுவது நமது இறுதி குறிக்கோள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்” என்று சங்கத்தின் தலைவர் டாக்டர் நெடுஞ்செழியன் கூறுகிறார்.

பெண்களின் சுகாதாரம்

இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள் பெண்களின் சுகாதாரம் / என்பதால் தாய் நலம் காக்க தன்னலமற்ற மருத்துவ சமுதாயத்தினரே, திரண்டு வாருங்கள். இந்த மாநாட்டில் தொகை தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புறப் பெண்களின் சுகாதார மேம்பட்டிற்காக அர்பணிக்கப்படும். இந்த ஆண்டு திரட்டப்படும் தொகை, 1.சிகாகோவில் உள்ள Jane Addams Hull House, 2. திக்கற்ற பெண்களுக்காக சென்னையில் உள்ள Banyan center, 3. திண்டுக்கல் அருகே இருக்கும் காந்திகிராம காஸ்தூரி பாய் மருத்துவமனையின் மகப்பேறுக்குப்பிந்திய பராமரிப்புக் குழு (ACT), 4. திருச்சியில் உள்ள அன்னை ஆசிரமம், 5 சென்னையில் உள்ள பல்லாவரம் சிறுவர் மருத்துவ நிலையம் மற்றும் பிஆர்சி அங்கீகரித்த சங்கத்தின் திட்டங்கள் ஆகியவற்றுக்குச் செலவிடப்படும்.

மாநாட்டுத் தலைவர்

சிகாகோ/மூன்றுமாநில அமைப்பின் (IL,IN & WI) ஆளுநரும், மாநாட்டுத் தலைவருமான டாக்டர் எஃப் சேவியர் ரோச் இவ்வாறு கூறுகிறார், “இந்த மாநாட்டின் நோக்கம் இந்த மாபெரும் அமைப்பைக்கட்டிக்காத்து வளர்ப்பது, உதவி தேவைப்படுவோருக்குச் சேவையாற்ற உறுப்பினர்களை ஊக்குவித்தல் ஆகும். கற்றலுக்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் ஒருரை ஒருவர் அறிந்து பழகித் தொடர்புபடுத்திக்கொள்ளவும் இந்த மாநாடு ஈடுஇணையற்றவகையில் வாய்ப்பளிக்கும் என நான் நம்புவதுடன் உறுதியும் அளிக்கிறேன்.”
மாநாடு குறித்து மேலும் தகவல் அறிய, பதிவு செய்து கொள்ள பின்வரும் இணையத் தளத்திற்குச் செல்லுங்கள்t:- http://www.atmachicagotristate.org/ATMA/chapterchicago/tristateconv.aspx

சங்கம் குறித்து மேலும்தகவல் அறிந்துகொள்ள www.atmaus.org எனும் இணையத்தளத்திற்கு வாருங்கள்.
சங்கத்தில் மாநாட்டில் விளம்பரம் செய்யவும் புரவலராக இருக்கவும் விரும்பினால் atmaus@yahoo.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது 404-583-7138 எண்ணில் அழைக்கலாம் என்று மருத்துவர் நசீரா தாவூத் தெரிவிக்கிறார்.
செய்தி,த‌க‌வ‌ல் ப‌ட‌ங்க‌ள்:ஆல்ப‌ர்ட்,அமெரிக்கா.

Series Navigation