ஸ்ரீனி.
(தென் ஆப்பிாிக்காவும் ஆஸ்திரேலியாவும் சேர்ந்து ஒரு அணியை உருவாக்கி இந்தியாவுடன் மோத இந்தியா வருகின்றனர். அப்போது சென்னையில் நடக்கும் போட்டிக்கு கவுண்டமணியை ரெப்ாீயாக நியமிக்கிறார்கள்.. மேலே..)
கவுண்டமணி: ஓகே.. இப்போ நான் டாஸ் போடப் போறேன் .. (ஸ்டாவ் வா பாக்கெட்டில் கை விட்ட படி நிற்க..)
என்னையா ! நக்கலா … என்ன பாக்கட்க்குள்ள கை ? எட்றா கையை.. கட்டு கையை. … கட்டு..
வா : இல்லைங்க.. வந்து..
கவுண்டமணி: என்னடா வந்து .. போயி.. என்னடா சட்டை இது ? இவ்வளோ கசங்கி இருக்குது ? தோச்சி எத்தினி நாளாவுது ? ஒரு செண்ட் அடிச்சிட்டு வரக்கூடாது ?…
( கவுண்டமணி காயினை சுண்டுகிறார். அது தரையில் விழும் முன்னர் வா ாடெயில்ஸ்ா என்று கூற..)
ஒன்ன நான் இப்போ கேக்க சொன்னேனா ? …
வா : அப்போ எதுக்கு சுண்டுனீங்க ?…
கவுண்டமணி : என்னடா அதிகமா கேள்வி கேக்கற … உங்க குடும்பத்துக்கே ‘தடை ‘ விதிச்சுருவேன் .. சும்மா டாஸ் போடப் ப்ராக்டாஸ் பண்ணேன் .. அதுக்குள்ள என்னடா அவசரம்.. விருந்தாளிக்கு பொறந்த பயலே !
வா : இத பாருங்க .. நான் ஐ.சி.சி ல புகார் கொடுப்பேன் .. ஜாக்கிரதை !
கவுண்டமணி : என்னடா ? என்னையே மெரட்டப் பாக்குறியா ? ஐ.சி.சி தாண்டா நானு .. நான் தாண்டா ஐ.சி.சி…
கங்குலி : இன்னா சொல்லுது ..எதோ டப்பிங் பட டைட்டில் மாதுாி இர்க்குது ? ?
கவுண்டமணி : நக்மா அக்காவுக்கே தமிழ் தொியாது .. நீ வேற அதை கத்துகினு உயிரை வாங்காதே.. கம்முன்னு கட.. டேய் வா .. என்ன எதிர்த்து பேசின ஒன்ன இனிமே 10 மாட்ச்ல டாஸ்க்கு பான் பண்றேன் .. அடுத்த 10 மாட்ச்சுக்கு எதிர் டாம் காப்டன் தான் டாஸ் வின் ..
( கங்குலி நக்மா டான்ஸ் ஆடிய ாதுணியா . இது துணியா .. என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடிய படியே கவுண்டமணிக்கு சலாம் பொட்டபடி , டிரெஸ்ஸாங் ரூம் நோக்கி செல்கிறார்..)
வா : இது ரொம்ப அநியாயம்.. அக்கிரமம்..
கவுண்டமணி : ரொம்பப்பேசுன .. வாழ்க்கை பூரா உங்க டாமுக்கு டாஸ் போட முடியாம ஆயிடும் .. ஓடிப்போயிறு..
( வா முணுமுணுத்தபடி போக.. )
என்னடா முணுமுணுப்பு.. போயி போலிங் பொடுற ஏற்பாடை பாருடா.. இல்லை மக்ராத்தை பான் பண்ணிடுவேன்.
வா : அவன் என்ன செஞ்சான் ? ..
கவுண்டமணி : இதுக்கெல்லாம் தனி விளக்கம் தேவையா ? அவனுக்கு சொல்லி வை .. விக்கட் எடுத்தா பான் பண்ணிருவேன். ஒவ்வொரு விக்கட்டுக்கும் 2 மாட்ச் பான் சொல்லி வை..
(மாட்ச் துவங்குகிறது … மக்ராத் வழக்கம் போல .. ஓப்பனிங் பாட்ஸ்மனை அவுட் செய்கிறார் … கவுண்டமணி கொதிப்படைகிறார்.. பேட்ஸ்மன் போல்ட் ஆன போதும்.. திடாரென பச்சை விளக்கு எாிகிறது … எல்லோரும் குழப்பமடைகின்றனர்..
எல்லோரும் அம்பையாிடம் விளக்கம் கேட்க .. அம்பையர் வாக்கி – டாக்கி மூலம் பேச நினைக்கிறார். அவருக்கு அது முதல் மாட்ச் என்பதாலும், முதன் முறை வாக்கி-டாக்கி யூஸ் செய்வதாலும்.. முகத்தில் ஏக பூாிப்பு..)
அம்ப் 1 : ஹலோ !
கவுண்டமணி : யார்பா அது ! என்ன வேணும் ?
அம்ப் 1 : ஹலோ ! கவுண்டமணி சார்ங்களா ! சார் சவுக்கியங்களா ? வீட்ல அப்பா , அம்மா எல்லாம் நல்லா இருக்காங்களா ?
கவுண்டமணி : எல்லாரும் உங்க புண்ணியத்துல நல்லா இருக்காங்க .. அங்க அண்ணி, குழந்தைங்களெல்லாம் சவுக்கியமா ?
அம்ப் 1 : ரொம்ப சவுக்கியம் .. அப்புறம் என் பையன் உங்க பரம விசிாி … நீங்க கட்டாயம் என் வீட்டுக்கு வரணும்.
கவுண்டமணி : டிரை பண்றேன்..
அம்ப் 1 : அப்படி சொல்லக்கூடாது.. கண்டிப்பா வரணும்.. நீங்க போன மேட்சுல கோவம் வந்து ஜாம்பாப்வே ப்ளேயர் மேல ஆத்திரப்பட்டப்போ .. உங்களுக்கு கீழ கடந்த கல்ல பொறுக்கி தந்தது யாரு ? .. என் பையன் தான்.. ரொம்ப மதிக்கிறான் உங்களை.. உங்களை மாதிாி வரணும்ன்னு ஆசை அவனுக்கு..
கவுண்டமணி : அஹ்… ஒகே ! கண்டிப்பா வரேன்..
(இதற்க்குள் ‘வா ‘ பதட்டமாகி.. வாக்கி-டாக்கி யை பிடுங்க முயல்கிறார்.. அம்ப் 1 சுதாாித்து…)
அம்ப் 1: அண்ணே ! என் போனை புடுங்கிறாரு இவரு …
கவுண்டமணி : போனை அவன் கிட்ட குடு…
‘வா ‘ : (சிவாஜா போல்..) …யேஸ்
கவுண்டமணி : உனக்கு எவ்வளவு சொன்னேன் .. இன்னுமா புத்தி வரலை.. உள்ள வா உன்ன வச்சிகிறேன் …
‘வா ‘ : எதுக்கு ாபச்சைா வெளக்கை போட்டாங்க ? ?
கவுண்டமணி : அது என் இஷ்டம் டா ! தமிழ்நாட்டுல ாசிகப்புா விளக்கே இருக்கக்கூடாதுன்னு .. முத்துகருப்பன் சொல்லி இருக்காருடா !அப்புறம் நான் எப்புட்றா போடுவேன் … ஒழுங்கா கேமை கண்டினியூ பண்ணு ..
( ‘வா ‘ கடுப்படைந்தவராய் வாக்கி-டாக்கி யை அம்ப் 1 இடம் திருப்பித்தருகிறார் .. உணவு இடைவேளையும் முடிந்து ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில ‘வா ‘ போலிங் போட போலாக்கை அழைக்கிறார். அவர் வீசிய பந்து தாஸான் கால் காப்பில் பட்டு செல்கிறது. உடனே போலாக் மிக ஆவேசமாக அப்பீல் செய்கிறார். )
போலாக்: அவ்விசாட்…………………… அவ்விசாட் ………………… டேய் ….. என்னடா முழிக்கிற …. அவ்விசாட் …குடுக்கப்போறியா இல்லை கொலை பண்ணட்டுமா ….
(போலாக்கின் அப்பீலில் பயந்து போன அம்ப் 1 கையைத் தூக்க தாஸ் தலை ஆட்டியபடி வெளியே செல்கிறார்.. போலாக் 200 விக்கெட் இது எனக்கு என்று கூற அணி கொண்டாடுகிறது.. அப்போது தான் கவுண்டமணி சாப்பிட்டுவிட்டு வருகிறார்.. மறுபடியும் தொலைபேசி அடிக்க ..)
கவுண்டமணி : ஹலோ , யாரது ?
அம்ப் 1 : (அழுதுகொண்டே..) அண்ணே நான் தான் ..
கவுண்டமணி : என்னடா .. ஏன் அழுவுற ?
அம்ப் 1 : இந்த போலாக் திட்டிடாருன்னே.. அவுட் குடுக்க மாட்டேன்னு சொன்னா என்ன கொன்னுடுவேன்னு மெரட்றார்னே..
கவுண்டமணி : அப்படியா சொன்னான் .. அந்த அணில் தலையன்… அவன ஒரு வழி பண்றேன் இன்னைக்கு.. நீ மட்டும் அவுட் குடுக்காம இருந்தா நான் பேட்ஸ்மானை காப்பாத்திருப்பேன்.. பரவாயில்ல .. விடு..
(முதல் நாள் ஆட்டம் முடிந்து எல்லோரும் உள்ளே வருகின்றனர்.. கவுண்டமணி அவர்களை அழைக்கிறார்..)
வா : என்ன வேணும் இப்போ ?
கவுண்டமணி : என்னடா எகிர்ற ? எங்கடா அந்த அணில் தலையன் ?
(போலாக் புாியாமல் முழிக்க..)
உன்னத்தான் நாயே … இங்க வா நாயே !
போலாக் : இத பாருங்க .. இது நல்லாயில்லை. என் பேரு போலாக்..
கவுண்டமணி : அது என்னடா போலாக்கு .. லோலாக்குன்னுட்டு.. உங்க அப்பனுக்கு பேரே வெக்க தொியல… கருவா பயலே.. என்னமோ கொன்னுடுவேன்னு சொன்னியாமே …
போலாக் : நான் வெறும் அப்பீல் செஞ்சேன் .. அவரு அவுட் குடுத்திட்டாரு … அதுக்கு நான் என்ன செய்ய …
கவுண்டமணி: நீ ஒண்ணும் செய்ய வேணாம் .. நான் செய்யறேன். (பிரஸ்ஸை கூட்டுகிறார்..) மக்களே… இந்த அணில் தலையன் ..( போலாக் முறைக்க ..) மொறைக்காதடா .. போிக்கா மண்டையா… இந்த அணில் தலையன் 200 விக்கெட் எடுக்கறதுக்காக அம்பயரை மெரட்டினான் .. அதுனால இது வரைக்கும் இவன் எடுத்த 199 விக்கெட்டையும் பான் பண்றேன்..
ாிப்போர்ட்டர் : அண்ணே , விக்கெட்டை கேன்சல் பண்றேன்னு சொல்லுங்க .. அதை பான் பண்ணமுடியாது.. (அரங்கமே சிாிக்க..)
கவுண்டமணி : அது எனக்கு தொியாதா .. நீங்கெல்லாம் முழிச்சிக்கிட்டு இருகீங்களான்னு பார்த்தேன் ( என்று மைக்கில் கூறி .. தன் உதவியாளனிடம்.. இவனை தனியா கவனிக்கிறேன் .. அற்றஸ் வாங்கி வை.. என்கிறார்)
கவுண்டணி: அதோட மட்டுமில்லாம … இவனை போலிங் போட விட்டு வேடிக்கை பார்த்த ஸ்டாவ் வா வை 10 மாட்ச்சுக்கு பான் பண்றேன்.
(வா ஷாக்காகி நிற்க..)
அம்பயரை மிரட்டினதற்காக போலாக்குக்கு 20 மாட்ச் பான். அவன் ஓவர்ல பீல்டிங் செஞ்ச ஸ்லிப் பீல்டர்களுக்கு தலா ஆளுக்கு ஒரு மாட்ச் பான். (பாண்டிங், மார்க் வா முதலானோர் வாய் திறக்க போக ….) ஏதாவது பேசின 5 மாட்ச் பான் போட்ருவேன். போலாக்குக்கு தண்ணி கொண்டுவந்த 12த் மேனை 5 மாட்ச் பான் பண்றேன் .. அவன் குடுத்த தண்ணிய குடிச்சுட்டு தான் பய இந்த ஆட்டம் ஆடிற்கான். இதல்லாம் அடுத்த மாசத்துக்குள்ள அமலாகணும். இல்லை மேலும் பான் போடுவேன்..
(அப்போது ாிப்போர்ட்டர் குறுக்கிட்டு .. )
அடுத்த மாசத்துக்குள்ள இவங்களுக்கு மாட்ச்சே இல்லையே ..
கவுண்டமணி: அதெல்லாம் எனக்கு தொியாதுடா.. மாட்ச் ஆடணும்னா .. எவன் கிட்டயாவது போய் கெஞ்சுங்கடா.. ஆனா பான் மட்டும் உறுதி.. இதுக்கு மேல யாராவது கேள்வி கேட்டாங்க .. அவங்களையும் பான் பண்ணிருவேன்..
கவுண்டமணி கையை ஆட்டிக்கொண்டே இருக்க ‘பான் பண்ணிடுவேன் ‘ மட்டும் கேட்டுக்கொண்டே இருக்க.. சடார் என விழுந்தேன்.. கண்ணைத்திறந்தேன். எதிரே டி.வி ஓடிக்கொண்டிருந்தது.. எழுந்து அதை நிறுத்தி விட்டு மீண்டும் படுக்கையின் மேல் விழுந்தேன்.
- களு(ழு)த்துறை!
- மீன் பிடிக்க வாாீகளா ? குறுகு வெண்மீன்கள்(white dwarfs)
- அறிவியல் செய்திகள்
- இந்த மண் பயனுற வேண்டும்
- சாவாத நட்பு
- ஏன் அதை மட்டும் !
- முதுமை
- திறந்தவெளி…
- பொிய பொிய ஆசைகள்!
- என் தேசம் விழித்தெழுக !
- திருப்தி
- அமெரிக்க முஸ்லீம்களுக்கு ஒரு கடிதம்
- இந்த வாரம் இப்படி – நவம்பர் 24 2001 (கிருஷ்ணசாமி, பான் மசாலா, போக்குவரத்து ஊழியர், ஆஃப்கானிஸ்தான், நோம் சோம்ஸ்கி)
- பெரியாரியம் – தத்துவத்தை அடையாளப்படுத்துதலும், நடைபெற வேண்டிய விவாதமும் – ஆய்விற்கான முன் வரைவுகள் – 4
- அமெரிக்காவில் இந்தியர்
- நமக்கு காசே குறி
- சமீபத்தில் இந்திய கிாிகெட் அணிக்கு விதிக்கப்பட்ட தடைகளை, நகைச்சுவையாக கண்டிக்க ஒரு முயற்ச்சி.
- அத்தனை ஒளவையும் பாட்டிதான் – 4
- தண்ணீர்