கர்னாடகா சமையல்
4 பேருக்கு
தேவையான பொருட்கள்
2 கோப்பை அரிசி
4 மேஜைக்கரண்டி வெண்ணெய்
மெதுவான மாவுபிசைய தேவையான அளவு பால்
உப்பு ருசிக்கேற்றபடி
ஆழ்ந்து பொறிக்க எண்ணெய்
செய்முறை
1) அரிசியைக் கழுவி ஒரு துணியில் பரப்பி காயவைக்கவும். நன்றாகக் காய்ந்ததும் அதனை மிக்ஸியில் மாவுபோல தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக்கொள்ளவும்.
2) அரிசி மாவையும், வெண்ணெயையும், உப்பையும் கலந்து பால் சிறிது சேர்த்து மெதுவாக சப்பாத்தி மாவு போல பிசையவும். நன்றாகப் பிசைந்து சிறிய சிறிய அளவு கையில் எடுத்து உள்ளங்கையால் தேய்த்து இரண்டு இஞ்ச் கயிறு போல ஆக்கி, நுனிகளை வளைத்து நன்றாக அழுத்தி ஒட்டி வளையல் போல ஆக்கவும். இதே போல எல்லா மாவையும் செய்து வைத்துக்கொள்ளவும்.
3) எண்ணெயைக் காயவைத்து புகை வரும் முன்னர் இந்த வளைகளை ஜாக்கிரதையாகப் போடவும். நெருப்பைக் குறைத்து மெதுவான தீயில் இந்த வளைகள் தங்கப்பழுப்பு நிறம் வரும் வரை வறுக்கவும். பிறகு ஒரு காகிதத்தில் இவற்றின் எண்ணெயை வடிகட்டி, ஆறவைக்கவும். இதே போல மீதமுள்ள வளைகளையும் வறுத்து எடுக்கவும். இந்த வளைகளை காற்றுப்புகாத பாத்திரத்தில் பத்திரப்படுத்தி ஒரு வாரம் வரை வைத்துச் சாப்பிடலாம்.
காபி தேநீர் போன்றவற்றுடன் உண்ணச் சிறந்தது
- இரவு வான்!
- பரிவும் பதற்றமும் (ந.பிச்சமூர்த்தியின் சிறுகதைகள் )
- கொரில்லாவின் பூர்வகுடி வரலாறு -நிகழ்வும் புனைவும் குறித்து
- நிப்பிட்டு (அரிசி, கருப்பு உளுந்தம்பருப்பு சிப்ஸ்)
- கோடுபலே (வறுத்த அரிசி வளை)
- காந்த குளிர்சாதனப் பெட்டி (Magnetic Refrigerator) உருவாக்கப்பட்டிருக்கிறது.
- பாரதத்தின் நண்பர் அணுஉலை விஞ்ஞான மேதை டாக்டர் W.B. லூயிஸ்
- கன்னிகைத் தைக்கோர் கண்ணூறு!
- பூமியெல்லாம் பூ
- அடிமை விடியல்
- காற்றின் அனுமதி
- தைமகளே! காக்க வருக,வருகவே!
- இந்த வாரம் இப்படி -டிசம்பர் 14 – 2002 (ஐந்தாம் வகுப்பு, முஷரஃப், போப், கமல்-ரஜினி ரசிகர் சண்டை, மூன்றாமணி)
- உரையாடல் : பின்னணியும் எதிர்பார்ப்பும்
- மொழிச்சிலை அமைப்பு! மொழித்தாய் வாழ்த்து!- போலித் தமிழர்கள்
- கயிற்றில் நடக்கும் பாகிஸ்தானிய விமர்சகர்கள்
- மதத்தின் வழிதவறிய ஏவுகணைகள்
- மெக்காவில் துருக்கிய கோட்டை இடிக்கப்பட்டதற்கு துருக்கிய அரசு பலத்த கண்டனம் தெரிவித்திருக்கிறது.
- விநோத உணர்வுகள்