குழந்தைகளின் உயிரோடு விளையாடும் பாலிவினைல்

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

மேனகா காந்தி


குழந்தைகள் விளையாடும் விளையாட்டுப் பொருட்கள் பிவிசி (polyvinyl chloride (PVC) பாலிவினைல் குளோரைடு-ஆல் தயாரிக்கப்படுகின்றன. பாட்டில் நிப்பிள், ரப்பர் வாத்துக்கள், பல் முளைக்கும் காலத்தில் கடிக்க கொடுக்கும் சிறு விளையாட்டுப் பொருட்கள் ஆகியவை இதனால் தயாரிக்கப்படுகின்றன. இதில் ப்தாளேட் பிளாஸ்டிசைசர் phthalate plasticiser என்ற பொருள் சேர்த்து இது வளையும் தன்மையுடையதாக ஆக்கப்படுகிறது. இப்படி வளையும் வினைல் பொருட்கள் பல வருடங்கள் உடையாமல் வண்ணம் மங்காமல் இருக்கக்கூடியவை. இவை எளிதில் கழுவக்கூடியவை. விலை குறைந்தவை.

வினைல் பொருட்களை வளையும் தன்மையுடையதாக ஆக்க அத்தோடு சில பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. phthalates ப்தாளேட் என்று சொல்லக்கூடிய சில பொருட்கள் இத்தோடு சேர்க்கப்படுகின்றன. வினைல் விளையாட்டுப் பொருளின் பாதி எடை இந்த ப்தாளேட் பொருட்களால் ஆனது. இந்த பொருள் பிவிசியுடன் வேதிமுறையில் இணைந்து இருக்கிறது. அதாவது, குழந்தைகள் இந்த பொருளை வாயில் போட்டு விளையாடினால், இதில் இருக்கும் ப்தாளேட் கசிந்து வாய்க்குள் செல்லும்.

இந்த பிளாஸ்டிசைசர்கள் ஒரு குழந்தையின் எச்சிலால் கரையக்கூடியது. இவை எண்ணெய் மற்றும் கொழுப்பில் கரையக்கூடியது. இந்த பிளாஸ்டிசைசர்கள் ரத்தம், நுரையீரல், லிவர் ஆகிய இடங்களிலும் கொழுப்பிலும் சேமிக்கக்கூடியது. சமீபத்திய ஆய்வுகள் இந்த வேதிப்பொருட்கள் கிட்னி மற்றும் லிவர் ஆகிய இடங்களில் புண்களையும், இனப்பெருக்க பிரச்னைகளையும், விந்து உருவாக்கத்தில் இடையூறு செய்வதையும், லிவர் கிட்னி ஆகிய இடங்களில் கேன்சரையும், மோனோநியூக்ளியர் செல் லுக்கேமியாவையும் உருவாக்குவதை தெரிவிக்கின்றன.

பல வருடங்களாக, விளையாட்டுப்பொருள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் வினைல் மற்றும் பிளாஸ்டிசைசர்களை உபயோகப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. இந்த தொழில் நிறுவனங்கள் இதனை ஒப்புக்கொள்ள மறுத்து வருகின்றன. சமீபத்தில் கிரீன் பீஸ், நேஷனல் என்விரோன்மண்டல் ரிசர்ச் ஆகியவை பொதுவாக கிடைக்கும் குழந்தைகள் விளையாட்டுப்பொருட்களில் 33 பொருட்களில் diisononyl phthalate டை ஐசோசோனைல் ப்தாளேட் அளவுக்கு மீறிய அளவில் இருப்பதை தெரிவித்திருக்கிறது. இதுவும் டை எத்தில் ஹெக்சில்ப்தாளேட் வேதிப்பொருளுமே மிக அதிகமாக உபயோகப்படுத்தப்படும் இரண்டு பிளாஸ்டிசைசர்கள். ஒரு அறிவியலாளர் diisononyl phthalate பொருளை வாங்கினால், அதன் மேல், ‘இது கேன்சரை உருவாக்கும்.சுவாசிக்க ஆபத்தானது. பாதுகாப்புக்கு கையுறை அணியவேண்டும் ‘ என்ற எச்சரிக்கை இருக்கும். ஆனால், இந்த வேதிப்பொருள் சுமார் 40 சதவீதம் இருக்கும் குழந்தை விளையாட்டு பொருளில் இப்படிப்பட்ட எச்சரிக்கை ஏதும் இருக்காது.

டிசம்பர் 1998இல், அமெரிக்க பயனீட்டாளர் பொருள் பாதுகாப்பு கமிஷன், தொழில் நிறுவனங்களை இந்த ப்தாளேட்டுகள் இல்லாமல் குழந்தை பொருட்களை உருவாக்கக் கேட்டுக்கொண்டது. ஜனவரி 1999இல் ஆஸ்திரியா ப்தாளேட்டுகளை குழந்தை பொருட்களில் போடக்கூடாது என்ற தடையுத்தரவை வெளியிட்டது. 1999 இறுதியில் ஐரோப்பிய சமூகம் முழுவதும் ப்தாளேட்டுகள் இல்லாமலேயே குழந்தை விளையாட்டுப்பொருட்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்ற அவசர சட்டத்தைப் பிறப்பித்தது.

அதன் பிறகு டென்மார்க், பின்லாந்து, நார்வே, ஸ்வீடன் , மெக்ஸிகோ அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த ப்தாளேட்டுகளை கட்டுப்படுத்தின. உலகத்தின் மிகப்பெரிய விளையாட்டுப்பொருள் தயாரிப்பாளரான மாட்டெல்Mattel இனி தாவர எண்ணெய்கள் மற்றும் தாவர மாவு ஆகியவற்றின் மூலமே உருவான பிளாஸ்டிக் பொருட்கள் மூலமே விளையாட்டுப்பொருட்களை செய்யபோவதாக அறிவித்திருக்கிறது. ஜப்பான் ஆகஸ்ட் 2003இல் மேற்கண்ட தடையை கொண்டுவந்தது. எல்லா வினைல் விளையாட்டுப்பொருட்கள் மீதும் பொதுவான தடையை கொண்டுவர ஐரோப்பிய சமூகம் தற்போது சிந்தித்துவருகிறது.

ஆனால், இந்தியாவில் உருவாக்கப்படும் விளையாட்டுப்பொருட்களை பரிசோதனை செய்யவும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களை பரிசோதனை செய்யவும் எந்த ஒரு அரசாங்க அமைப்பும் கிடையாது. இந்திய தர நிர்ணய நிறுவனம் பாதுகாப்பு தர நிர்ணயங்களை வெளியிட்டாலும் அவற்றை மேற்பார்வை பார்க்கவும், அது பற்றிய பொது அறிவும் எந்த தொழில் நிறுவனங்களிலும் இல்லை. இந்தியாவின் 1500 கோடி பெருமானமுள்ள விளையாட்டுப்பொருள் தொழில்துறை சிறிய தயாரிப்பாளர்களால் நிறைந்தது. இவற்றை கட்டுப்படுத்துவது எளிதல்ல.

விளையாட்டுப் பொருட்கள் செய்யும் உலகளாவிய தொழில் நிறுவனங்கள் இந்த தடைகளை தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. அமெரிக்க வியாபார அமைச்சகத்தின் துணையோடு ஐரோப்பிய தடைகளை எதிர்த்து வருகின்றன. அமெரிக்க தேசிய விஷ திட்டம் என்ற அமைப்பு மேற்கண்ட டிஈஹெச்பி வேதிப்பொருளை ஒரு மனித கான்சர் உற்பத்தி செய்யும் வேதிப்பொருள் என்றே வகைப்படுத்தியும், தொழில்நிறுவனங்கள் அமெரிக்க அமைச்சகத்தை இந்த போரில் உபயோகித்துக்கொள்ள தயங்கவில்லை.

ப்தாளேட்டுகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், எல்லா பிளாஸ்டிக்குகளிலும் மிகவும் விஷச்சுழல் கொண்ட பிளாஸ்டிக் வினைல் தான். வினைல் உற்பத்தி செய்யும் போது, டைஆக்ஸின் Dioxin என்ற விஷம் உருவாகிறது. இந்த பொருளை உபயோகப்படுத்தும்போது இதிலிருந்து விஷ சேர்க்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுகின்றன. இந்த பிளாஸ்டிக்கை எரிக்கும்போது மீண்டும் டைஆக்ஸின் என்ற விஷம் வருகிறது. வினைல் பிளாஸ்டிக்கின் 1 சதவீதமே மறு உபயோகம் செய்யப்படுகிறது.

விளையாட்டுப்பொருள் தொழில்துறை, வினைல் உடைவதில்லை என்றும், இது விஷமற்றது என்றும் வறுபுறுத்திச்சொல்லிவருகிறது. உண்மையில், இப்படி எதையும் அத்தோடு சேர்க்கவில்லை என்றால், அது மிகவும் நிலையற்ற பிளாஸ்டிக். இது உடைந்து விஷத்தை வெளியேற்றும். வினைல் திரைச்சீலைகள் சூரிய வெளிச்சத்தில் உடைந்து ஈய தூளை வெளியேற்றுகின்றன என்று பயனீட்டாளர் கழகங்கள் தெரிவித்திருக்கின்றன. மருத்துவ உபகரணங்களில் வினைல் உபயோகத்தை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க பொது சுகாதார சங்கம் வலியுறுத்திவருகிறது. மருத்துவ உபகரணங்களை எரிக்கும்போது அவற்றிலிருந்து டைஆக்ஸின் வெளியேறுவதே அதன் காரணம்.

மிகக்குறைவான விளையாட்டுப்பொருட்களே வினைலால் உற்பத்தி செய்யப்பட்டாலும், விளையாட்டு பொருட்கள் தொழில்துறை வினைலை தொடர்ந்து உபயோகித்துவருவதை வலியுறுத்துகிறது. வினைலுக்கு மாற்றாக ஏராளமான பொருட்கள் இருக்கின்றன. பாலிபுரோப்பிலீன், பாலி எத்திலீன், ஈபிஎம், ஈபிடிஎம், ஈவிஏ மற்றும் தாவர அடிப்படை கொண்ட பிளாஸ்டிக்குகள் ஆகியவை இருக்கின்றன். மேற்கண்ட பிளாஸ்டிக்குகள் வினைலுக்கு தேவைப்படும் ப்தாளேட்டுகளை தேவையின்றி ஆக்குகின்றன.குளோரினும் இதில் முக்கியமான பொருளாக இருப்பதில்லை.

**

Series Navigation

மேனகா காந்தி

மேனகா காந்தி