புஹாரி, கனடா
நம்ம ஊரு நயாகராவே…!
பட்டுப் பட்டென்று
தலையில்
கொட்டிக் கொட்டி
உள்ளத்தில்
கெட்டிமேளம் அடிப்பது
உன் தண்ணீர்க் கரங்களா… ?
கைகள் கட்டிக்கொள்ள
கால்கள் ஒட்டிக்கொள்ள
தரிகிடதோம் ஆடவைப்பது
உன்
சிலீர்ச் சந்தங்களா… ?
யார் நீ… ?
அதோ அந்த
நிலாவிலிருந்து கசிந்துவரும்
வெள்ளிச் சரமா… ?
அல்லது…
வானவில்லிலிருந்து
நழுவி விழும்
ஒற்றை வர்ணமா… ?
O
அப்பப்பா…
இத்தனை பேரையும்
மொத்தமாய் முத்தமிட
உனக்கே சாத்தியம்…
O
நீ
கொட்டுவதோ கோபமாய்…
ஆனால்
இத்தனைக் குளிர்ச்சியாய்
ஒரு கோபத்தை நான்
வேறெங்கு காண….
என் காதலியின் ஊடலிலா… ?
————————————-
buhari2000@hotmail.com
- வலி
- இட்லியின் அருமை இங்கிலாந்தில் தொியும்
- அம்மா வந்தாள் ! பாவண்ணனின் விமரிசனத்திற்கு பதில்
- ந. பிச்சமூர்த்தியின் ‘தாய் ‘ – சுரக்கும் அன்பும் சுரக்காத பாலும்
- நிலவியல் பிரச்சினைகள் நிறைந்த நெல்லை மாவட்டமும் கூடங்குளம் அணுமின்நிலையமும்
- இந்தோனேஷியக் காடுகள் வெகு வேகமாக அழிந்து வருகின்றன
- குபுக் குபுக் குற்றாலம்!
- படைப்பின் உதயம் !
- புரிந்து கொள்..
- தொலைந்து போனவை
- உன் காதல் புதிய நோய்!
- கல்யாணம் யாருக்கு ?
- ஒப்புமை
- நிலவியல் பிரச்சினைகள் நிறைந்த நெல்லை மாவட்டமும் கூடங்குளம் அணுமின்நிலையமும்
- இந்தியாவின் தாமஸ் பெயின்: பெரியாரின் அறிவியக்கம்
- தெய்வநிந்தனை குற்றத்துக்காக பாகிஸ்தான் சிறையின் தூக்குமர நிழலிலிருந்து ஒரு கடிதம்
- அடுப்பிலிருந்து வாணலிக்கும் , திரும்பவும்
- மழையும் வெயிலும்.
- உயிர் விளையாட்டு
- ஒப்புமை
- சீதாக்கா