குந்தர் க்ராஸ் எழுதிய புதிய புத்தகம் Ein Weites Feld

This entry is part [part not set] of 8 in the series 20001217_Issue

ஆலன் ரைடிங்

(மொழிபெயர்ப்பாளர் குறிப்பு -குந்தர் கிராஸ் என்ற ஜெர்மன் எழுத்தாளர் எழுதிய சமீபத்திய நாவல் பற்றிய கட்டுரை இது. ஜெர்மனியைப் பிரித்திருந்த சுவர் வீழ்ந்த போது, அனைவரும் மிக ஆரவாரமாக அதனை வரவேற்றார்கள். அதை எதிர்த்த மிகச் சிலரில் இவரும் ஒருவர். அந்த எதிர்ப்பிற்காக அவரை எல்லோரும் கண்டனம் செய்தார்கள். தேசப் பற்று அற்றவர் என்றார்கள். இந்தியாவிலும் தனியார் மயமாக்கல் என்ற பெயரில் நாம் செய்யவிருக்கும் காரியங்கள் எப்படிப் பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்பது பற்றி மட்டுமல்லாமல், வெறும் மொழி அடிப்படையை மட்டும் வைத்துக் கட்டப் படும் தேசீய உணர்வு நியாயமான ஆட்சியையோ, வன்முறையற்ற சமத்துவத்தையோ அளித்து விடாது என்பதற்கும் இந்த ஜெர்மனி இணைப்பு உதாரணமாய் இருக்க வேண்டும். இவர் இந்தியாவில் சில காலம் இருந்தவர். ‘ நாக்கை நீட்டு ‘ என்று ஒரு நாவலும், இந்திய அனுபவங்களை அடிப்படையாய் வைத்து எழுதியிருக்கிறார். ‘நாம் முட்டைக்குள் வசிக்கிறோம் ‘ என்ற அவர் கவிதை புகழ் பெற்றது.)

பின்னிலையுதிர்காலத்தின் சூரியன், குந்தர் கிராஸ் வசிக்கும் வீட்டின் மேலே உள்ள சிவப்பு ஓடுகளைச் சூடுபடுத்திக்கொண்டிருக்கிறது. வடக்கில் ஜெர்மனி அதிகத் தொலைவில் இல்லை போல் தோன்றுகிறது. தெற்கு போர்சுக்கலில் ஒரு தனிமைப்பட்ட மூலையில் வசிக்கிறார் குந்தர் கிராஸ். ஒவ்வொரு வருடமும் இங்கே கோடைக்கால விடுமுறைக்கு தன் பேரப்பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வந்து வசிக்கிறார். நீர்வண்ண ஓவியங்களை வரைவதும் பிள்ளைகளோடு விளையாடுவதுமாக போர்ச்சுக்கலில் வசித்தாலும் அவர் ஜெர்மனியை விட்டு உண்மையில் போவதில்லை . ‘ திணறும் தாய்நாடு ‘ என்று அவர் அழைக்கும் ஜெர்மனியே அவரது இலக்கியத்தின் முக்கியமான கரு. அது அவரது நிரந்தர பேச்சுத் தலைப்பு. அவர் அடிக்கடி கோபப்படும் விஷயமும் அதுவே.

ஜெர்மனியைத் துரத்திப் பின் தொடர்வதை கிராஸ் நிறுத்தவேயில்லை.. ‘தகர டப்பா ‘ என்று 1959இல் அவர் வெளியிட்ட நாவல் அவரை 32 வயதில் புகழ் பெற்றவராக ஆக்கியது. அவரும் அதிகப்பிரசங்கித்தனமாகவே தன் சக ஜெர்மன் மக்களை அவர்களது பழைய , புதிய தவறுகளுக்காக நிரந்தரமாக திட்டிக்கொண்டிருக்கிறார். அவரது நாவல்களிலும், அவரது கட்டுரைகளிலும் அவரது சொற்பொழிவுகளிலும் செய்தித்தாள் விவரணைகளிலும் இவ்வாறு செய்து வந்திருக்கிறார். மக்கள் கேட்க விரும்பாத விஷயங்களையே பெரும்பாலும் அவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

Ein Weites Feld என்ற அவரது சமீபத்திய நாவல் 1995இல் பிரசுரிக்கப்பட்டது. இந்த நாவலில், 1990இல் நடந்த ஜெர்மானிய ஒருங்கிணைப்பு உண்மையில், மேற்கு ஜெர்மனி கிழக்கு ஜெர்மனியை ஆக்கிரமித்ததுதான் என்று எழுதி ஒரு புதுப் பிரச்னையை கிளப்பினார். அப்படி எழுதியதற்காக எல்லோரும் அவரை திட்டினார்கள். கிராஸ் அதற்காக வருத்தப்படவில்லை. Der Spiegel என்ற செய்திப்பத்திரிக்கையில், புகழ் பெற்ற ஒரு இலக்கிய விமர்சகர் அந்த புத்தகத்தை கிழிப்பதாக படம் போட்டார்கள். அதனால் இன்னும் அந்த புத்தகத்தின் விற்பனை 350000 என்று அதிகரித்தது.

அது இப்போது கிருஷ்ணா வின்ஸ்டன் மொழிபெயர்த்து, Too Far Afield என்ற தலைப்பில் அமெரிக்காவில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘உண்மை, நான் சொன்னதைவிட, இன்னும் இருண்ட பரிமாணம் கொண்டது ‘ 73 வயதாகும் க்ராஸ் தன்னுடைய புகையிலைக் குழாயில் புகைத்தபடி சொன்னார். ‘சுவர் போய்விட்டது. ஆனால் ஜெர்மனி இன்னும் பிளவுண்டுதான் இருக்கிறது. 1989இல் கிழக்கு ஜெர்மனி மக்கள், சுவர் உடைந்தபோது சந்தோஷப்பட்டார்கள். ஆனால் மேற்கு ஜெர்மானியர்கள் ஒரு காலனியாதிக்கக்காரர்கள் போல உள்ளே வந்தார்கள். கிழக்கு ஜெர்மானியர்களின் வரலாறும், ஹிட்லரிடமிருந்து ஸ்டாலினுக்குப் போன அவர்களது ஜனநாயக அனுபவங்களும் வேறானவை என்று இவர்கள் புரிந்து கொள்ளவேயில்லை ‘

‘கிழக்கு ஜெர்மானியர்கள் அவர்கள் வாழ்க்கையை அவர்களே வாழ வேண்டும் ‘ மேலும் சொல்கிறார் கிராஸ். ‘ஆனால் மேற்கு ஜெர்மானியர்கள் சொன்னார்கள்: ‘இதுவரை நடந்த உங்கள் வாழ்க்கையை மறந்துவிடுங்கள். அது ஒரு பெரும் தவறு. இப்போது நாங்கள் மேற்கு ஜெர்மனியில் எப்படி இருக்கிறோமோ அது போல வாழுங்கள். நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள் ‘ நமக்கு ஒருவரை ஒருவர் தெரியாது. இன்னுமும் தெரியவில்லை. ஆனால் மேற்கு ஜெர்மனியில் உள்ள அறியாமை , இந்தப் புரிந்து கொள்ளலை இன்னும் கடினமாக்குகிறது. இன்னும் சொல்லப்போனால், மேற்கு ஜெர்மனி கிழக்கு ஜெர்மனியை ஆளுகிறது. இது ஒரு மோசமான காலனியாதிக்கம். இது இன்னும் தொடரும்.. ஆகவே என்னுடைய நாவலில் இந்த குற்றங்கள் நிறைந்த ஆரம்பத்தை, இது எப்படி ஆரம்பித்தது என்பதை நான் சொல்ல முயல்கிறேன் ‘

658 பக்கமுள்ள இந்த புத்தகத்தின் எதிரி Treuhand என்னும் மேற்கு ஜெர்மானிய அரசாங்க நிறுவனம். இந்த நிறுவனமே கிழக்கு ஜெர்மானிய கம்பெனிகளை மூடவும் அவைகளை விற்கவும் அல்லது அவைகதை¢ தனியார் மயப்படுத்தவும் நியமிக்கப்பட்ட நிறுவனம். இது ஆங்கில மொழிபெயர்ப்பில் Handover Trust என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம், முதலாளித்துவத்தின் இதயமற்ற கருவியாகவும், கிழக்கு ஜெர்மானியர்களை வேலையிலிருந்து துரத்தவும், கம்யூனிச மிச்ச மீதாரிகளை மேற்கு ஜெர்மானிய பேராசை முதலீட்டாளர்களுக்கு தாரை வார்க்கவும் உருவாக்கப்பட்ட நிறுவனமாகச் சித்தரிக்கப் படுகிறது.

‘இந்த நிறுவனம் ஒரு ஜனநாயக கட்டுப்பாடுக்குள்ளும் வராமல் 4 வருடங்கள் வேலை செய்தது ‘ என்கிறார் கிராஸ்.

இந்த நாவலின் இலக்கிய தளம் இன்னும் பரந்தது. ஒரு தளத்தில் அது, இரண்டு கிழக்கு ஜெர்மானிய வேலையாட்களின் பார்வையிலிருந்து பார்க்கிறது. Theo Wuttke தியோ வுட்கே என்னும் வேலையாள், கனவு காண்பவனாக, மெத்தப் படித்தவனாய், வித்தியாசமானவனாய் இருப்பவன். கலாசார யூனியனில் வழிகாட்டியாகவும், விரிவுரையாளனாகவும் பணி புரிகிறான். லுட்விக் ஹஃடாலர் , உட்கேயின் ‘நிழல் ‘. ஒற்றனாய் வேலை பார்த்தவன். இருவருக்கும் இப்போது வயது 70. வினியோக ட்ரஸ்டில் இருவருக்கும் வேலை கிடைக்கிறது.

இந்த நாவல் மற்ற தளங்களிலும் விரிகிறது. வுட்கே 19-ம் நூற்றாண்டு வரலாற்றாசிரியன் , நாவலாசிரியன் தியோடர் ஃபோண்டேன் பற்றி நன்கறிந்த விற்பன்னன். இவனையே ஃபோண்டி என்று நண்பர்கள் கூப்பிடும் அளவிற்கு ஃபோண்டேனாகவே மாறிப் போனவன். அவனுடை வாழ்க்கையை மீண்டும் வாழ்பவன். ஹொஃடாலர் , 19ம் நூற்றாண்டு ஒற்றன் டால்ஹோவர் என்பவனின் வாழ்க்கையுடன் இணைந்தவன்.

ஃபோண்டென்-வுட்கே, டால்ஹோவர்-ஹஃடலர் மூலமாக, அவர்களின் கூட்டு நினைவு வழியாக, ஜெர்மனியின் முதல் இிணைப்பு 1871-ல் நடந்தது தாண்டி இரண்டாவது இணைப்பாக 1990-ல் நடந்தது வரையில், பேசுகிறார். இதற்கு பழைய கிழக்கு ஜெர்மனியில் உள்ள ‘வினியோக ட்ரஸ்ட் ‘ தலைமையகம் குறியீடாய் நிற்கிறது. நாஜிகளின் விமானப் படைக்காகக் கட்டப் பட்ட இந்தக் கட்டடம், கம்யூனிசத்தின் கீழ் , இது அமைச்சகங்களின் இருப்பிடமாய் இருந்தது. ‘வினியோகம் ‘ முடிந்த உடன் இந்தக் கட்டடம் நாட்டின் புதிய நிதி அமைச்சகமாய் ஆயிற்று.

‘வெகுதூர மைதானத் ‘தை நியூ யார்க டைம்ஸ் புக் ரிவ்யூவில் ,நவம்பர் 5-ல் ,மதிப்புரை செய்த ஜேம்ஸ் ஜே ஷீஹன் அந்த நூலை, ‘அமைதியான, நளினமான ‘ ஒன்றாய்க் குறிப்பிட்டார். ‘தகர டப்பா-வைக் காட்டிலும் எளிதில் அணுகக் கூடிய புத்தகம் ‘ என்றார். ஒரு தேர்ந்த கலைஞனின் ஆக்கம் என்றார். ‘தான் என்ன செய்ய வேண்டும் என்ற மிகத் தெளிவுடனும், தம் ஆற்றலைக் கட்டுப்பாடுடனும் வெளிப் படுத்தியுள்ளார். ‘

புத்தகத்தின் மைய இடமாய் பெர்லின் திகழ்கிறது – 35 வருடங்கள் கிராஸ் வசித்த ஊர். இப்போது 1995-லிரிந்து வடக்கில் லுபெக் என்ற ஊரில் வசிக்கிறார். மேற்கு பெர்லினில் அவர் இருந்த போது அரிதாகவே அவர் கிழக்கு ஜெர்மனிக்குச் சென்றிருக்கிறார். 1956-ல் நடந்த தொழிலாளர் கிளர்ச்சியை மையமாய் வைத்து, அவர் 1966-ல் வெளியிட்ட ‘ப்ளெபியன்கள் எழுச்சியை ஒத்திகை பார்க்கிறார்கள் ‘ என்ற நாடகம் காரணமாய் , கிழக்கு ஜெர்மனி அவர் வரத் தடை விதித்திருந்தது. சுவர் உடைந்த உடனேயே அவர் கிழக்கு ஜெர்மனியில் பயணம் செய்யத் தொடங்கினார்.

‘இணைப்பில் நான் எப்போதுமே நம்பிக்கை வைத்திருந்தேன், ஆனால் முதலிலிருந்தே நாம் மெதுவாக, ஜாக்கிரதையாய்க் கையாள வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். ‘ என்று பழைய தன் வார்த்தைகளை நினைவு கூர்கிறார். ‘ ஆனால் ஹெல்மட் கோல் 1990 தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் குறியாக இருந்தார். போரின் இழப்பினால், கிழக்கு ஜெர்மனிக்குத் தான் மேற்கு ஜெர்மனியை விட இழப்புகள் அதிகம். நமக்கு (மேற்கு ஜெர்மனிக்கு ) மார்ஷல் திட்டம் ( அமெரிக்க ஆதரவுடன் நடந்த புனரமைப்பு – மொழிபெயர்ப்பாளர்), சுதந்திரம், கூடவே ஒரு வித மெலிதான ஆக்கிரமிப்பு இருந்தது . அவர்களுக்கு ( கிழக்கு ஜெர்மனிக்கு) சோவியத் யூனியன் இருந்தது. நாம் சுமைகளைப் பகிர்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், வரியை ஏற்றப் பயந்தார் கோல். அதனால், நாம் கிழக்கு ஜெர்மனியின் பொருளாதாரத்தை நாம் நாசப் படுத்தி விட்டோம். ‘

அவர் புகலுடம் தேடி வந்தவர்களை விரட்டியடித்ததற்காக ஜெர்மனியைக் கண்டனம் செய்கிறார். மைய நீரோட்டத்தில் உள்ள அரசியல் வாதிகள் வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறிவர்களைத் திட்டுவதன் மூலம், தீவிர வலது சாரிகளை ஊக்குவிக்கிறார்கள் என்கிறார். இளம் ஜெர்மன் எழுத்தாளர்கள் இது பற்றிக் குரல் கொடுக்காதது பற்றிக் கவலைப் படுகிறார்.

‘அரசியலைத் தொடக் கூடாது என்பது இளம் எழுத்தாளர்களின் போக்காக இருக்கிறது. ‘ என்கிறார். ‘ உன் கதையை மட்டும் சொன்னால் போதும் (என்பது அவர்கள் போக்கு). பல இளம் எழுத்தாளர்கள் – சிறந்த எழுத்தாளர்கள் என்று சொல்ல முடியாத -அமெரிக்க எழுத்தாளர்களால் பாதிக்கப் பட்டவர்கள். அரசியல் பிரசினைகளைத் தொட அஞ்சுகிறார்கள். திடாரென்று பார்த்தால் அவர்கள் அரசியாலால் பாதிக்கப் படும் போது ஆச்சரியப் படுகிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மிக மிக முக்கியமான யதார்த்தம். அதை கண்டுகொள்ளாமல் இருப்பதும், ஒரு அரசியல் செயல்பாடு தான். ‘

இந்த இளம் எழுத்தாளர்களைப் போலல்லாமல், கிராஸ்-இன் வாழ்க்கை அரசியலால் உருவாக்கப் பட்டது – அல்லது சிதைக்கப் பட்டது. 1927-ல் டான்ஸிக் (அப்போது அது போலந்தில் டன்ஸ்க் என்ற பெயரில் இருந்தது _, -கில் அவர் பிறந்தார். அவருக்கு 12 வயதாகும் போது, அந்த நகரம், ஹிட்லரின் ‘பேரரசில் ‘ இணைக்கப் பட்டது. மற்ற குழந்தைகளைப் போலவே அவரும் ஹிட்லரின் இளைஞர் படையில் உறுப்பினர். 16 வயதில் படையில் சேர்ந்தார். 1945-ல் சிறை பிடிக்கப் பட்டு ஒரு வருடம்ன் சிறையில் கழித்தார். பிறகு அவர் விடுதலையான போது ஜெர்மனி நாடு சின்னா பின்னமாகியிருந்தது.

அவருடைய கனவு சிற்பியாக வேண்டுமென்பது. டஸல்டார்ஃபில் அவர் கலைக் கல்லூரியில் சேர முயன்ற போது, ஒரு பேராசிரிய நண்பர் ஓரிரு ஆண்டுகள் கழித்துத் திரும்ப வரச் சொன்னார். ‘ கல்லூரியில் வெப்பம் ஊட்ட நிலக்கரி இல்லை. அதனால், அவர் கல் கொத்தனாராக வேலை பார்க்கும் படி கூறினார். ‘ கிராஸ் நினைவு கூர்கிறார். ‘ அது நல்ல அறிவுரை தான். கலையைக் கற்கும் முன்பு கல்லறைக் கற்களை அலங்கரிக்கிற வேலை. அந்தக் கலைக்குத் தேவை எப்போதுமே இருந்தது. விவசாயிகள் கல்லறைக் கற்களுக்கு பாதி பன்றி அல்லது உருளைக் கிழங்கு விலையாய்க் கொடுப்பார்கள். ஆக உணவு கிடைத்தது. ‘:

கடைசியில் அவர் கலை பயில முடிந்தது. முதலில் டஸல்டார்ஃப் பிறகு பெர்லின். குழு-47 என்ற நவீன கலைக் குழு ஒன்றில் அவர் இணைந்தார். பெர்லினில் தான் முதலில் அவர் கவிதை எழுத முயன்றார். ‘குழு-47ல் இருந்த ஒரு வயதான எழுத்தாளர் என்னிடம் சொன்னார்: ‘ கலைஞன் என் பாவனை செய்வதற்கு முன் , கொஞ்சம் முயற்சி செய்து உண்மையாய் நீ எதைப் பற்றி எழுத வேண்டும் என்று முடிவு செய் ‘. நான் அவரிடம் என் டான்ஸிக் பின்னணி பற்றித் தெரிவித்தேன். ‘ அதைப் பற்றி எழுதேன் என்றார். ‘ ஒரு நாவல் எழுதலாம் என்று யோசித்தேன். என் முதலும் கடைசியுமான நாவலாய் அது இருக்கும் என்று என் ஊகம். ‘

‘தகர டப்பா ‘ உருவாயிற்று. துண்டு துண்டுக் கதைக்ளின் கோர்வை போன்ற நாவல். பிறகு ‘எலியும் பூனையும் ‘ வெளிவந்தது. பிறகு வெளிவந்த ‘நாய்ப் பிழைப்பு வருடங்கள் ‘ நாவலுடன் சேர்ந்து இவை டான்ஸிக் முப்படைப்புகளாய் அறியப் பட்டன. அவருடைய தலைமுறையின் முன்னணி எழுத்தாளராய் கிராஸ் அறியப் பட்டார். ஜெர்மனி மறக்க விரும்பிய நாஜி வருடங்களை , தன் பாத்திரம் ஆஸ்கார் மட்ஜெரா – மூன்று வயதைத் தாண்டி வளர முடியாத ஒருவன் மூலமாக அவர் நினைவு படுத்திக் கொண்டேயிருந்தார். அதில் தொடங்கி அவருடை நீண்ட யுத்தம் ‘அரசியல் மறதி ‘க்கு எதிராக நடந்தவாறே உள்ளது, தன் குற்ற உணர்வையும் அவர் ஒப்புக் கொள்கிறார். ( ‘நான் ஹிட்லர் இளைஞர் படையில் இருந்தேன். யுத்தம் முடியும் வரை அதன் லட்சியங்களையும் நம்பினேன். ‘) இன்றைய தலைமுறையிடம் இதைக் கொண்டு செல்லும் போது எழும் பிரசினை பற்றியும் அறிந்திருக்கிறார். ‘என் மகன், பேரன் பேத்திகளிடமும் இதைக் காண்கிறேன். நான் அவர்களுக்குச் சொல்வது இது தான் : ‘ நீங்கள் ஒன்றும் குற்றம் செய்யவில்லை. ஆனால் அந்த்க் குற்றங்கள் மறுபடியும் நடவாமல் இருப்பது உங்கள் பொறுப்பு ‘. இந்த வாசகமே அவர்களுக்கு நினைவூட்டப் போதுமானது. ‘

பெர்லினில் பேரழிவிற்கான ஒரு மியூசியம் கட்ட முடிவு செய்த போது எழுந்த விவாதங்களில் கிராஸ்-ம் கருத்துத் தெரிவித்ததில் வியப்பேதும் இல்லை. ஹிட்லரால் பலியான் யூதர்களுக்கு மட்டும் நினைவுச் சின்னம் எழுப்புவதற்கு அவர் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார். ‘ மீண்டும் யூதர்களைப் பிரித்துப் பார்க்கிறார்கள் – நாஜிகளைப் போலவே. இது தவறு. நாஜியால் குற்றம் இழைக்கப் பட்ட அனைத்து மக்களுக்கும் நினைவகம் வேண்டும். யூதர்கள் மட்டுமல்லாமல், 5 லட்சம் நாடோடிகள், ஆயிரக் கணக்கான போலந்து மற்றும் ரஷ்யர்கள். ஒவ்வொருவருக்கும் வேண்டும். ‘

விமர்சிக்கப் படுவது அவருக்குப் பழக்கம் தான். ‘சில விமர்சகர்களுக்கு என்னைத் தாக்குவதே ஒரு கேளிக்கை தான். ‘ என்று சிரிக்கிறார். இலக்கியத்திற்கு நோபல் பரிசு அவருக்குக் கிடைத்த போது, அவருடை தைரியமான அரசியல் கருத்துகளுக்கும் கிடைத்த அங்கீகாரமாய் அது எதிர் கொள்ளப் பட்டது. ‘ கருத்துப் பரிமாற்றங்களில், வலுவான வாதங்களுமாய் மற்றவர்களை எரிச்சல் படுத்தவும் அவர் தயங்கியதில்லை: ‘ என்கிறது (நோபல் பரிசை நிர்ணயிக்கும்) ஸ்வீடிஷ் அகடமி.

எனினும் எழுத்தாளன் ஒரு தேசத்தின் ஆன்மாவாகச் செயல் பட முடியும் என்ற கருத்தை அவர் நிராகரிக்கிறார்.

‘உங்கள் ஆன்மாவை எழுத்தாளர்களுக்கோ, வேறு யாருக்குமோ தாரை வார்க்காதீர்கள். ‘ என்கிறார். ‘ நான் எழுத்தாளன் என்பதால் நான் குரல் எழுப்பவதில்லை. நான் குடிமகன் என்பதால் தான் குரல் எழுப்புகிறேன். 1933-ல் நாஜிகள் அரசாங்கத்தை ஆக்கிரமித்ததற்கும் காரணம் குடிமகனாக நடந்து கொள்ளாத மக்களால் தான். அரசியல் வாதிகளுக்கு மட்டுமென நாம் அரசியலை ஒதுக்கிவிடக்கூடாது. ‘

மொழிபெயர்ப்பு : சின்னக்கருப்பன், கோபால் ராஜாராம்,

Series Navigation