கீதாஞ்சலி -89 திடீர் அழைப்பு எனக்கு

This entry is part [part not set] of 31 in the series 20060908_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


வெடிப்புடன் வெளிவரும்
ஆரவாரச் சொற்கள் என் வாயில்
வாரா இனிமேல்!
என் அதிபதியின் விருப்பமும் அதுவே!
அதனால் முணுமுணுப்பில் பேசுவேன் நானினி.
இதயத்தில் எழும் என் குரல் நாதம்
மெல்லோசைக் கீதமாய்
முணுமுணுக்கும் இனிமேல்!
வேந்தனின் வணிகச் சந்தைக்கு
விரைந்து செல்கிறார் மாந்தர்.
விற்போர், வாங்குவோர் மும்முரமாய்
முற்பட்டுள்ளார்
வியாபாரத்தில் ஆங்கே!
வேலைப் பளுவின் மத்தியில்
வெளியேற நேர்ந்தது எனக்கு,
கால நேரம் தவறி!
பூக்கள் மலரட்டும் என்னரும்
பூங்காவிலே,
பூக்கும் பருவ மில்லை யாயினும்!
ரீங்கார இசைபாடிச்
சோம்பலுடன் வரட்டும்,
தேனீக்கள்,
பட்டப் பகலிலே!
நல்லதும், பொல்லதுமான தீர்ப்புகளில்
நானீடு பட்டேன்,
நாளும், பொழுதும் முழு வேளை!
ஏதுமில்லா நாட்களில்,
என் விளையாட்டுத் துணைவன்
பேருவகை அடைகிறான்,
என் இதயம்
அவன் மீது திரும்பும் போது!
பயனற்ற அற்பப் பலாபலனை
நோக்கித்
திடீரென்று ஏனவன் அழைத் தானென்று
தெரிய வில்லை, எனக்கு!

+++++++++++++++++++++

jayabarat@tnt21.com [September 4, 2006]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா