அறிவிப்பு
புலம்பெயர்ந்த மக்கள் வாழ்கின்ற மண்ணில் இருந்து மிக நீண்ட காலமாக தொடர்ந்து வெளிவரும் சஞ்சிகை காலம். கடந்த பதினைந்து வருடங்களாக பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தொடர்ந்து வெளிவரும் காலம் சஞ்சிகையின் இருபத்தைந்தாவது இதழ் வெளியீட்டு விழாவும் அது தொடர்பாக நாட்டார் கலை நிகழ்வும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
இடம் : யொர்க்வுட் நூலக அரங்கம் (Yorkwood Library Theatre, 1785 Finch Avenue West, Toronto)
காலம்: அக்டோபர் 8, சனிக்கிழமை, மாலை 6:00 மணி
விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டனின் உலகை மாற்றிய மூன்று அற்புதக் கண்டுபிடிப்புகளின் நூறாவது ஆண்டான 2005 ‘இயற்பியல் ஆண்டு ‘ என அறிவிக்கப்பட்டு உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக, காலத்தின் இருபத்தைந்தாவது இதழ் ‘அறிவியல் சிறப்பிதழாக ‘ மலருகிறது. கலாநிதி வெங்கட்ரமணனைச் சிறப்பாசிரியராகக் கொண்டு வெளிவரும் இந்த இதழில் அறிவியல், தொழில்நுட்பம், அறிவியலாளர்கள் குறித்த கட்டுரைகள் இடம்பெறுகின்றன. நிகழ்வில் காலம் குறித்த விமர்சனங்களுடன்கூட பின்வரும் கலைநிகழ்வுகளும் கருத்தரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
- நாடகம் – ‘மீண்டும் வருவார்கள் ‘ இயக்க்கம் : பாபு வரதராஜ்
- அடர்வட்டு (DVD) வெளியீடு – யாழ் அண்ணாவி அல்பேர்ட் வழங்கும் தென்மோடி நாட்டுக்கூத்து. 157 அரிய இராகங்கள் அடங்கிய தென்மோடி நாட்டுக்கூத்து அடர்வட்டு
- நாட்டுக்கூத்து அமர்வு.
- யாழ் அண்ணாவி அந்தோணிப்பிள்ளை,
- சட்டத்தரணி யேசுதாசன்,
- வைத்திய கலாநிதி பிகார்தோ
- ரெஜி மனுவல்பிள்ளை
தொடர்புகளுக்கு : செல்வம் அருளானந்தம், ஆசிரியர்,காலம், kalam@tamilbook.com
- ஏதேன் தோட்டமும் கேலாங் விடுதியும்
- 24 வது ஐரோப்பிய தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005 – லண்டனில் 15,16 ஒக்டோபர் 2005
- கவிஞர் எஸ் வைதீஸ்வரனின் 70-வது வயது நிறைவை முன்னிட்டு சிறப்புக் கூட்டம் – 2-10-2005
- அவசரமாய், அவசியமாய் ஒரு வேண்டுகோள்
- காலம்-25 : இலக்கிய மாலையும் அறிவியல் சிறப்பிதழ் வெளியீடும்
- சுயாதீன கலை திரைப்பட மையம் -முடிவுகள்
- ரமேஷ் மெய்யப்பனின் புதிய நாடகம் ‘இந்த பக்கம் மேலே ‘(This Side Up)
- கிரிக்கெட்டாம் கிரிக்கெட்டாம் . . .
- கிடைக்க மறுக்கிற நீதி (ஹஸினா – கன்னடத்திரைப்பட அனுபவம்)
- சின்ன வீடு
- குறும்பட வெளியீட்டு விழா
- திறந்த ஜன்னல் வழியே
- அலைகள் திமிங்கிலம்
- ஒற்றை நட்சத்திரம்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-10)
- மூன்று மணித்துளிகள் – பேரண்டத் துவக்கம்
- நலம்பெறவேண்டும்
- கீதாஞ்சலி (42) முடிவில்லா முக்தி! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெரியபுராணம் – 58 – ( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )
- கவிதைகள்
- ‘ ‘மற்றவர்கள் நரகம்…. ‘ ‘
- கற்பு என்னும் மாயை
- கலாச்சார புரட்சியாளர்களும் கலாச்சார காவலர்களும்
- Commander in Chief
- பி.ஏ. கிருஷ்ணனுடன் ஒரு சந்திப்பு
- சேவை
- தெரிந்தவன்