தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
என்னுடைமை அனைத்தும் நானுனக்கு
அன்புடன் அளித்தால்
அதற்கு மாற்றாக நீ
எனக்குரிமை ஆவாயா ?
தினம் தரும் முத்தமுடன்
இல்வாழ் வெனும் ஆசியோடு
மென்மேலும்
விந்தையாக எண்ணப் படாமல்
சொந்த மாவதை
இழக்காமல் இருப்பேனா ?
விழித்து மேல்நோக்கும் போது
வேறொரு வீட்டின்
புதிய சுவர்களும், வெளி முற்றமும்
எதிர்ப்படும்,
என் இல்லம் நீங்கி !
நிகழும் மாறுதலைக் காணாது
கண்ணை மூடி
நிரப்பிக் கொண்டோர்
இடத்தை நான் நிரப்பிட நீ
விடுவாயா ?
கடினமானது அது !
காதலை வெற்றி கொள்ள
முயன்றால்
சோகத்தை முறித்துக் கொள்வது
மிகை யாகிறது !
எல்லாம் எனக்கு நிரூபிப்பது
காதல் என்பது மெய்யாக
மனதுக்கு
வேதனை என்று !
சோகம் நிழலாய்த் தொடரும்.
அந்தோ
துக்கத்தில் உழன்றவள் நான்,
ஆதலால்
காதலிக்கக் கடின மானவள் !
ஆயினும் நீ
நேசிக்கிறாய் அல்லவா
என்னை !
உன் நெஞ்சை அகல விரித்து
அணைத்துக் கொள்
நனைந்த இறக்கை களுடைய
உனது புறாவை !
************
Poem -35
Sonnets from the Potuguese
By: Elizabeth Browing
If I leave all for thee, wilt thou exchange
And be all to me? Shall I never miss
Home-talk and blessing and the common kiss
That comes to each in turn, nor count it strange,
When I look up, to drop on a new range
Of walls and floors, another home than this?
Nay, wilt thou fill that place by me which is
Filled by dead eyes too tender to know change?
That’s hardest. If to conquer love, has tried,
To conquer grief, tries more, as all things prove;
For grief indeed is love and grief beside.
Alas, I have grieved sol am hard to love.
Yet love me–wilt thou? Open thine heart wide,
And fold within the wet wings of thy dove.
**********
S. Jayabarathan [jayabarat@tnt21.com (August 19, 2007)]
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 4
- காதல் நாற்பது – 35 காதல் என்பது மனக்குடைவு !
- பூம்பூம் காளை!!
- ஸூபி முஹம்மதிற்கு…..
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 20
- சீனக்கவிதைகள்
- எஸ்.ராமகிருஷ்ணனின் ‘இலைகளை வியக்கும் மரம்’
- கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஆவணப்படம் தொடக்கவிழா
- எனி இந்தியன் பதிப்பகம் நடத்தும் கருத்தரங்கு
- ஊர்விலக்கத்தினூடே தொடரும் பயணங்கள்
- குடியேற்றம் முத்தமிழ்ச்சுவைச்சுற்றம் பதினொன்றாம் ஆண்டு பைந்தமிழ்த்திருவிழா
- அரிமா விருதுகள் 2006
- பத்துப் பைசா பெறாத ஃபத்வாக்கள்
- ‘நாங்கோரி என்ற உறுப்பினர்’ கதையை பற்றி
- மும்பையனுக்கு மும்பாதேவி
- திரு அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் இருபத்திநான்கு: அனிஸ்மானின் ஆலோசனை!
- மழை என்னும் மாபெரும் சக்தி – சரவணன் கவிதைத்தொகுப்பு
- பிழைதிருத்தம் 13 : வாய்பாடு – வாய்ப்பாடு
- ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் கண்காணிப்பும் -2 (ஜூலை 17, 2007)
- அறிவுநிதி கவிதைகள்
- உருக்கியில் (HIV) உருகும் சிறார்!!
- விமர்சனக்குருவிகள்
- ஒரு புயலும் சில பூக்களும்
- என் வெளி…..
- தஸ்லிமாவின் முன்னோடி : இஸ்மத் சுக்தாய் எதிர்கொண்ட ஆபாச எழுத்து வழக்கு
- ஹெச்.ஜி.ரசூல் மீதான ஊர்விலக்கமும் எழுத்துக்களின் உடனான உரையாடலும்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்)
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 24