காதல் நாற்பது – 30 அவ்வொளி மீண்டும் வருமா ?

This entry is part [part not set] of 24 in the series 20070719_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


சிந்துமென் கண்ணீர்த் துளிகள் ஊடே
உந்தன் வடிவம் தெரிகிறது
இவ்விரவில் ! ஆயினும்
இன்று நீ
புன்னகை புரிவதைக் கண்டேன் !
எப்படிக் குறிப்பிடுவது காரணத்தை ?
இனிய காதலனே !
நீயா அல்லது நானா
எவர் என்னை நோகச் செய்வது ?
பரிவோடு அளிக்கும் சடங்கு மகிழ்ச்சியில்
பலிபீடத்தின் முன்னே
உதவிப் பாதிரி மந்திரம்
ஓதும் போது
மட்டமாய்த் தெரிந்திடலாம்
மடத்தனமாய் !
குழுவினர் ‘ஆமென்’ என்று சொல்லி
முடிப்பதைச்
செவியில் கேளாத
அவரைப் போல் நீ
தலைமறைவாய் இருந்ததால்,
குழம்பி
உறுதி யில்லாத
உன் சபதக் குரல் கேட்டது !
இனிய காதலனே !
என்னை நேசிக்கி றாயா நீ ?
இல்லை யெனில்
கனாக் கண்ட உயர்ச்சி யெல்லாம்
காண்பேனா நான் இனிமேல் ?
என் ஆத்ம விழிகளுக்கு
வேட்கை ஒளியால்
எனது வாழ்வுக் கொள்கை
விரிவாகும் சமயம்
விழுவேனா மயங்கி ?
அந்த ஒளி
இந்த கண்ணீர் துளிகள்
வெந்நீராய் மெய்யாக விழும்
தருணத்தில்
வருமா மீண்டும் ?

************
Poem -30

Sonnets from the Potuguese
By: Elizabeth Browing

I see thine image through my tears to-night,
And yet to-day I saw thee smiling. How
Refer the cause?–Belovழூd, is it thou
Or I, who makes me sad? The acolyte
Amid the chanted joy and thankful rite
May so fall flat, with pale insensate brow
On the altar-stair. I hear thy voice and vow,
Perplexed, uncertain, since thou art out of sight,
As he, in his swooning ears, the choir’s amen.
Belovழூd, dost thou love? or did I see all
The glory as I dreamed, and fainted when
Too vehement light dilated my ideal,
For my soul’s eyes ? Will that light come again,
As now these tears come–falling hot and real?

**********
S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 15, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா