காதல் நாற்பது (9) – என்ன கைம்மாறு செய்வேன் ?

This entry is part [part not set] of 24 in the series 20070215_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


கைம்மா றென்ன செய்வேன், கோமானாய்
அளவின்றி அளிப்பவரே ?
கறை யிலாத,, எவரும் கூறாத
உன் பொன்னித யத்தை
வீட்டு மதில்களுக்கு
வெளியே வைத்தி ருக்கிறாய் !
எதிர்பாராத உன் பரிசுகளை எல்லாம்
அள்ளிக் கொள்ளலாம்,
அல்லது தொடாமல் நீங்கலாம் !
நன்றி கெட்டு
ஒன்றிலும் ஒட்டா துள்ளேனா ?
உயர்ந்த பரிசுகள் !
உனக் கெதுவும் நான் அளித்தேனா ?
அப்படி யில்லை, ஆனால்
ஒதுங்கவு மில்லை !
அளித்தது மலிவானது !
கடவுளைக் கேள், அவர் அறிவார் !
கண்ணீர் அடிக்கடி சிந்தி
வெளுத்துப் போகு மென் வாழ்வு !
உன் தலையைத் தாங்கும்
தலையணை போல்,
என் மரண வெளுப்புடல் இருந்திட
முன் செல்வாய் !
உன் மிதிப்பு மெத்தையாய்
உதவி செய்ய !

********************

Poem -8
Sonnets from the Potuguese
By: Elizabeth Browing

What can I give thee back, O liberal
And princely giver, who hast brought the gold
And purple of thine heart, unstained, untold,
And laid them on the outside of the wall
For such as I to take or leave withal,
In unexpected largesse? am I cold,
Ungrateful, that for these most manifold
High gifts, I render nothing back at all?
Not so; not cold,–but very poor instead.
Ask God who knows. For frequent tears have run
The colours from my life, and left so dead
And pale a stuff, it were not fitly done
To give the same as pillow to thy head.
Go farther! let it serve to trample on.

**********

S. Jayabarathan [jayabarat@tnt21.com (February 12, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா