தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
அந்தோ இளவேந்தர் நெஞ்சமே !
வேறானவர் நாமிருவரும் !
மாறானவர்,
விதிகள், பழக்கப் பாடுகள்
வேறானவை!
இறக்கை ஒன்று மேல் ஒன்று
உரசிக் கொண்டு
செல்கையில்
தனியே கண்காணிக்கும்
தேவதைகளும்
விந்தையாய் நோக்கும்
நம்மிருவரை !
பகட்டானச் சமூக விழாக்களில்
பங்கெடுக்க
அரசிகளும் அழைப்பார் உன்னை
விருந்தினராக !
ஆயிரம் சுடர் விழிகள்
ஆங்கே எடைபோடும் உன்னை !
என்னவன் ஆக்கா
உன்னை
என் கண்ணீர்த் துளிகள்,
உன்னைப் போல்
இசைக்கு அதிபதியாய் நடிக்க நான்
முன்வந்த போதும் !
காரிருளில் பாடித் திரியும்
ஓர் எளிய
பாடகி நான் !
சைப்பிரஸ் மரத்தின் மீது
சாய்ந்த வாறு
நிற்கிறேன்
களைத்துப் போய் !
என்னை நோக்கிப்
பலகணி விளக்குகள் மூலம்
பார்த்து நீ
பண்ணுவ தென்ன ?
புனித எண்ணையை
உன்தலை மீதும், என்தலை மீதும்,
பனித்துளி மீதும்
ஊற்றிய பின்
ஆங்கே மூன்றும்
ஒப்புதல் புரியும் போது
மரணம்தான் தோண்ட வேண்டும்
மட்டச் சமநிலைக்கு !
********************
Poem -3
Sonnets from The Portuguese
By: Elizabeth Browing