காதல் நாற்பது (16) பளிங்குச் சிறையில் சிக்கிய தேனீ !

This entry is part [part not set] of 33 in the series 20070405_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


குற்றம் சுமத்தாதே என்னை !
உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன் !
நின்முன் தெரிவது சலனமற்ற
என் சோக முகம் !
நம்மிரு முகங்கள் வெவ்வேறு பக்கம்
நோக்குவதால்
சிரத்திலும் முகத்திலும்,
ஒரே மாதிரி ஒளிர்வ தில்லை
பரிதி வெளிச்சம் !
தெய்வீகக் காதலில்
சோக மென்னைப் பாதுகாப்பாய்ச்
சிறைப் படுத்தி உள்ளது !
சிறகை விரித்து வெளியே
பறக்க முயன்றாலும்
தோல்விதான் எனக்கு !
பளிங்குப் பேழையில் சிக்கிய தேனீயாக
எண்ணிக்
கண்காணிப்பாய் நீ
ஐயமின்றி !
முன்னேறும் எனது காதல்
முடிந்து போவதும்,
நினைவின் எல்லை தாண்டி என்னை
நீ மறந்து போவதும்,
தெரிகிறது எனக்கு,
வானின் மீதமர்ந்து நதிகளைக்
கீழ் நோக்கும்
ஒருத்தி காணும்
உப்புக் கடல் போல !

********************
Poem -16
Sonnets from the Potuguese
By: Elizabeth Browing

Accuse me not, beseech thee, that I wear
Too calm and sad a face in front of thine;
For we two look two ways, and cannot shine
With the same sunlight on our brow and hair.
On me thou lookest with no doubting care,
As on a bee shut in a crystalline;
Since sorrow hath shut me safe in love’s divine,
And to spread wing and fly in the outer air
Were most impossible failure, if I strove
To fail so. But I look on thee–on thee–
Beholding, besides love, the end of love,
Hearing oblivion beyond memory!
As one who sits and gazes from above,
Over the rivers to the bitter sea.

**********

S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 2, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா