காதல் நாற்பது (14) – கட்டு மீறிய காதல் !

This entry is part [part not set] of 32 in the series 20070322_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


உன்மீது நான் கொண்ட காதலை
என்னைச் சொல்ல வைப்பாய் நீ
ஏற்புடைய சொற்களில்
நாகரீகமாக !
நம்மிரு முகங்களுக் கிடையே
ஒளி உண்டாக,
வெளியே காற்று கொந்தளிக்க,
விளக்கு தீபத்தை
விட்டு வைப்பேன் உன் பாதத்தில் !
எனக்கும் எட்டாமல்
என்னுள் ஒளிந்திருக்கும் காதலை
எப்படி உனக்கு நிரூபணம்
பண்ணுவது ?
எனக்கு அப்பால் போகும்
எனது ஆன்மாவைப்
பற்றி நிறுத்த கையிக்குப்
பாடம் புகட்ட முடியாது !
அந்தோ இல்லை,
உன் மனம் ஒப்புதல் தந்தால்
பெண்மையின் மௌனம்
வரவேற்கும்
பெண் காதலை !
உனை வசப்படுத்த நான்
முனைந்தாலும்
உனக்குரி யவளாய் ஆகாது
தனித்தி ருந்தால்
முறிந்திடும் புனைந்துள்ள என்னுயிர்
சிறிதளவு !
உறுதியோடு
வாய்ச்சொல் தோற்றாலும்
வைராக்கிய முள்ள
இந்த இதயம்,
ஒரு முறை உன்னால்
தொடப் படாது போயின்
எடுத்து ரைக்கும்
அது படும் துயரை !

********************
Poem -14
Sonnets from the Potuguese
By: Elizabeth Browing

And wilt thou have me fashion into speech
The love I bear thee, finding words enough,
And hold the torch out, while the winds are rough,
Between our faces, to cast light on each?–
I drop at thy feet. I cannot teach
My hand to hold my spirit so far off
From myself–me–that I should bring thee proof
In words, of love hid in me out of reach.
Nay, let the silence of my womanhood
Commend my woman-love to thy belief,–
Seeing that I stand unwon, however wooed,
And rend the garment of my life, in brief,
By a most dauntless, voiceless fortitude,
Lest one touch of this heart convey its grief.

**********

S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 19, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா