தேவமைந்தன்
அந்தக் காலத்தில் அரசர்களின் சபைகளில் ‘கவிதைகளை வாசித்தல் ‘ என்ற
ஒரு பிரிவேளை(Session) இருந்திருக்கிறது. ஆதாரம், நாலடியாரில் இடம் பெறும்
‘ ‘பாடமே ஓதி… ‘ ‘ என்ற பாட்டு. அவரவர்களே இயற்றிய கவிதைகளை வாசிப்பதைத்
திருவிளையாடற் புராணம் முதலியவை சொல்லியுள்ளன. ஆனால் இது அடுத்தவர்
கவிதைகளை வாசித்தல், அவற்றின் பொருள் – நயம் – நுட்பம் மொழிதல் பற்றியது.
நாலடி வெறும் விவரம் மட்டுமே தரவில்லை. ஒரு விமர்சனத்தையும் முன்ை
வக்கிறது. வாசிப்பு, மறுவாசிப்பு, மீள்வாசிப்பு, பின்வாசிப்பு, முன்வாசிப்பு,பக்கவா
ட்டு வாசிப்பு என்று இன்னும் பல வாசிப்பு வகைகளை முன்வைத்துக்கொண்டே ே
பாகும் ‘மெத்தப் படிப்பாளி ‘களுக்குப் படையல் இது.
ஒரு கவிதையின் பொருண்மையை உள்ளபடி வெளிப்படுத்துதல்தான் வாசிப்பு;
தான் விரும்பியபடியெல்லாம் அல்ல. தான் விருது – பட்டம் – பட்டயம் ‘ ‘வாங்கிய ‘ ‘
தடங்களின்படியெல்லாம் அல்ல. அதாவது, அதில் இயல்பாக விழுந்து விை
ளந்துவிடும் இருண்மையை உடைத்துச் சிதறி, ஆழவே உள்நுழைந்து, கருவிடத்தி
ல்(nucleus) தியானம் பண்ணிக் கொண்டிருக்கும் பொருண்மையைத் தரிசித்து, ‘ ‘அது,
இதுதான்! ‘ ‘ என்று எல்லோருமறிய வெளியே வந்து எடுத்துரைப்பதுதான் ‘வாசிப்பு. ‘
இது தெரியாதவனைத்தான் நாலடி பகடி பண்ணுகிறது.
ஒரு கவிதையை மட்டுமே வாசித்துவிட்டு, அதாவது ஒரு கவிதையின் மூலப்
பிரதியை மட்டுமே வாசித்துவிட்டு, அக்கவிதையின் பொருண்மையைத் தாம் அறிய
ாமல் முன்னமர்ந்து செவிமடுப்பவர்களுக்கும் புரியும்படியாக எடுத்துரைக்க மாட்டா
தவர்கள், மூலப்பிரதிகளை வாசித்துப் பொருண்மை நுகரும் ஆற்றலுள்ளவர்கள்
அகங்கடுத்து உளையும் வண்ணம் – குற்றமாகப் பொருண்மையை வெளிவரவிடா
மல் உள்ளழுத்திப் பல வெற்றுச் சொற்களை உளறும்பொழுது, அந்த வாசிப்புத் தி
றன்மிக்கவர்கள் எப்படிச் சகித்துக் கொள்வார்கள் என்றால்….
இப்படி வாசிப்பு உணாராதவனை, இந்த அரசவையில் இதற்காக இவனை ந
ாம் அவமானப் படுத்தினால், இவனைப் பெற்ற தாய் அதைக் கேள்விப்பட்டு
வருந்துவாளே என்று சுரக்கும் இரக்கத்தினால், அவனுடைய பிழைபட்ட வாசிப்பே
ாடு அவனையும் சேர்த்து சகித்துக்கொள்வார்களாம்.
‘ ‘பாடமே ஓதி ‘ ‘ என்ற முதற்பகுதியில் வரும் பாடம் என்பதற்கு மூலப் பிரதி
என்று நோம் ச்சோம் ?கி நோக்கில் பொருண்மை கொள்ள உதவினார், மறைந்த
புலவர் குழந்தை.(நீதிக் களஞ்சியம் 1962)
****
pasu2tamil@yahoo.com
- மிமோஸா அஹ்மதி – ஒரு தேடல்…ஓர் அறிமுகம்…சில கவிதைகள்
- டாவின்சி கோட்
- நாகூர் ரூமியின் கருத்துகள் பற்றி (ஆங்கிலம்)
- குறுந்திரைப்படப் பயிற்சிப் பட்டறை
- கடிதம்
- சுராவுக்கு அஞ்சலி
- அழிவைப் போற்றும் கற்பு, காதல் தோல்வி
- கடிதம் – (ஆங்கிலம்)
- ஓரு இளைய தலைமுறை இலக்கியவாதியின்(!); சாட்சியம்
- கவிதை: மூலப்பிரதி வாசிப்பு: முன்னோர் மொழிபொருள்
- புத்தகவெளியீட்டில் கிடைக்கப்பெற்ற நிதியை ‘கனடா இலக்கியத் தோட்டத்திற்கு’ அன்பளிப்புச் செய்தார் கவிஞர் புகாரி
- கம்பராமாயணத்தில் புறத்திணைக் கூறுகள் (முதற்போர்புரி படலப்பகுதி மட்டும்)
- ‘காலம் ‘ இலக்கிய மாலை!
- கவிஞர் புகாரியின் கவிதை நூல்கள் வெளியீட்டுவிழா வாழ்த்துரை
- டான் பிரவுண் மேசையில் ஒரு கமண்டலம்
- சுந்தர ராமசாமியின் மறைவு
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-13 )
- தற்கால சீனத்தின் நவீன ஓவியபாணி
- இமாலய மலைச் சரிவுகளில் எழுந்த அசுரப் பூகம்பம்!
- பந்தம்
- பேரிடர்கள்
- பொறுப்பு !
- மிமோஸா அஹ்மதி – சில கவிதைகள்
- பெரியபுராணம் – 61 (திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி)
- சுவாசலயம்
- கீதாஞ்சலி (45) மங்கித் தேயும் மணம்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- அட்லஸ்
- வயது வரும்போது. .
- பங்குச் சந்தை வீழ்ச்சி
- திசைமாறும் போராட்டக்களங்கள்
- மனிதாபிமானம்