அருளடியான்
கவிஞர் ஹெச்.ஜி. ரசூலின் இஸ்லாமிய விரோத எழுத்துக்களை விமர்சித்து நான் பல பதிவுகளை எழுதியிருக்கிறேன். ஆனால் அவரை தக்கலை ஜமாஅத், குடும்பத்துடன் ஊர்விலக்கம் செய்ததையும், குமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா பேரவை மதவிலக்கம் செய்ததையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. நபி முஹமது (ஸல்) அவர்களை எதிரிகள் ஊர்விலக்கம் செய்தனர். ஆனால் இஸ்லாமிய ஆட்சியை நிறுவிய நபி முஹமது (ஸல்) அவர்கள் நயவஞ்சகர்களையோ, இஸ்லாத்துக்கு விரோதமாக நடந்தவர்களையோ ஊர்விலக்கமோ, மதவிலக்கமோ செய்ததாக நாம் ஹதீஸ்களில் காண முடியவில்லை. தமிழ் நாட்டில் முஸ்லிம்களிடம் முன்னெப்போதையும் விட அதிகமாக பல கொள்கைப் பிரிவுகள், அமைப்பு பிரிவுகள் ஏற்பட்டுள்ளன. தொழுகையில் நெஞ்சில் கை கட்டுவது, அத்தஹிய்யாத் இருப்பில் விரலசைப்பது போன்றவற்றை ஏற்காத பள்ளிவாசல் நிர்வாகிகள், அறிவிப்பு பலகைகளை தொங்கவிட்டு முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகின்றனர். தன்னை ஒரு ஜனநாயகவாதியாக காட்டிக் கொள்ளும் கவிஞர் ஹெச்.ஜி. ரசூல், ஜமாஅத் நிர்வாகியாகக் குழுவில் இருந்த போது மாற்றுக் கொள்கையுடையவர்களிடம் எப்படி நடந்து கொண்டார் என்பதை அறியவிரும்புகிறோம். இந்தியா ஒரு பன்மைக் கலாச்சார நாடு. முஸ்லிம்களிடையே நிலவும் கருத்து மாறுபாடுகளை சகிக்காத முஸ்லிம்கள் பிற மாற்று மதத்தினரிடம் எப்படி நடந்து கொள்வார்கள்? இந்தக் கோணத்தில் தமிழ் நாட்டில் வாழும் முஸ்லிம் அறிஞர்களும், பொதுமக்களும் சிந்திக்க வேண்டும். நான்கு மத்ஹப்களையும் மதிக்கிறோம் என்று கூறிக் கொள்ளூம் ஜமா அத் உலமா பேர்வையினரும், சுன்னத்துல் ஜமாஅத் பேரவையினரும் குர் ஆன், ஹதீஸ் வழியில் செயல்படுபவர்களை மட்டும் காழ்ப்புணர்வுடன் பார்ப்பது ஏன்? இவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும். ஹெச்.ஜி. ரசூலின் எழுத்துக்களில் மதுவிலக்கு தொடர்பான கட்டுரையை விட, குர் ஆனில் இறைவனின் கூற்றுடன் முஹமது நபியின் கூற்றும் கலந்துள்ளது என்று எழுதியதும், குர் ஆனின் மாற்றுப் பிரதியாக ரஷாத் கலீஃபாவின் குர் ஆன் மொழிபெயர்ப்பைக் குறிப்பிட்டதும் தான் இஸ்லாமிய விரோதமானவை. இதனைப் புரிந்து கொள்ள குமரிமாவட்ட ஜமாஅத்துல் உலமா பேரவையினருக்குப் போதிய படிப்பில்லை. யார் மீதும் மதவிலக்கம்/ஊர் விலக்கம் செயல்படுத்தக் கூடாது. இது போன்ற வழிகாட்டும் குறிப்பை தமிழ் நாடு வக்ஃப் வாரியம், அனைத்து ஊர் ஜமாஅத்தார்களுக்கும், அனைத்து மாவட்ட ஜமாஅத்துல் உலமா அமைப்புகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும்.
aruladiyan@hotmail.com
- என் மூலையில் – கறுப்பு
- பண்பாட்டு மானுடவியலும் தமிழகமும்
- நேற்று அரேபியா! இன்று தேரிக் காடு!!
- சுதந்திரப் போராட்டமும் தமிழ் எழுத்தாளர்களும் – 2
- விவேகானந்தா கல்விக் கழகம், சென்னை 84 – 13-வது பண்பாட்டு நாடக விழா
- இஸ்லாமிய கலாச்சாரம்-கவிஞர் ஹெச்.ஜி.ரசூலின் படைப்பு குறித்த ஒர் உரையாடல்.சென்னையில் நிகழ்வு
- அரிமா விருதுகள் 2006
- கவிஞர் ஹெச்.ஜி. ரசூலின் ஊர்விலக்கம் ஏற்றுக் கொள்ள முடியாது
- திகம்பர மாமியார்!
- மக்கள் தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா…
- ஒருவிதம்
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 6
- கவிஞர் சதாரா மாலதியும் சிலப்பதிகார மாதவியும்
- இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியர் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார்(05.09.1909 -03.01.1972)
- பிழைதிருத்தம் தொடர் 14 நிலைபாடு – நிலைப்பாடு
- சல்லா ராதாகிருஷ்ண சர்மா: சுற்றி வளைத்து எழுதாத தெலுங்குக் கவிஞர்
- தோப்பில் முகமது மீரானின் சமீப சிறுகதைகள்: நினைவுக் கிடங்கும், ஆறாத ரணங்களும்
- நுண்கலை : கோரம் தவிர்த்து உக்கிரம் காட்டுதல்
- ‘யுகமாயினி’ வரும் அக்டோபர் 2007 வெளியாகிறது
- அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா ? அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா ? -1
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 2 பாகம் 1
- கடிகாரங்கள்
- காதல் நாற்பது – 37 என் ஐயமும் அச்சமும் !
- கிளிநொச்சி
- முதல் மரியாதை
- அறிந்தும்.. அறியாமலும்…
- வாழ்க்கைக் கணக்கு
- இந்தியாவின் தேசிய விருதுகள்
- உயர் கல்வி: அரசு,தனியார்,சிறுபான்மையினர்
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபத்தியாறு: நடுவழியில்…
- தண்டனை
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 22
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 26
- கவர்னர் பெத்தா