வே.சபாநாயகம்
மண் மணம் கமழும் மக்கள் மொழியில் கவிதைபாணியை உருவாக்கிய ‘கவிஞர் பழமலய்’ யின்
பத்தாவது நூலாக ‘கொனாரக் பாட்டியின் ஊன்றுகோல்’ வெளி வந்துள்ளது. இதுகாறும் தன் சொந்த
பந்தங்களின், தன் பிராந்திய மக்களின் கதைகளையும் அவர்களது வாழ்வின் அவலங்களையுமே கவிதைகளில்
பதிவுசெய்து வந்த அவர் இப்போது தன் பிராந்தியத்துக்கு வெளியே நாடு முழுதுமாய் தேசீய அளவிலும்
உலக அளவிலுமாய்த் தன் பார்வையைச் செலுத்தி எழுதும் மாற்றம் பெற்றிருப்பதை இத் தொகுப்பில் காண முடிகிறது. 2001ல் ஒரிசா மாநிலம் கொனாரக்கில் நடைபெற்ற ‘அகில இந்திய கவி சம்மேளன’த்தில் கலந்து
கொண்டு கவிதை வாசித்துத் திரும்புகையில் கொனாரக்கின் சூரியனார் கோயிலையும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளையும் கண்டு வந்தபின் இந்த பரந்துபட்ட பார்வையின் தாக்கம் உண்டாகி இருக்கலாம். கொனாரக்கில் கண்ட கோலூன்றிய ஒரு பாட்டியின் சிலை தந்த கற்பனையைக் கருவாகக் கொண்டதுதான் – நூலின் தலைப்பாக உள்ள ‘கொனாரக் பாட்டியின் ஊன்றுகோல்’ என்கிற கவிதை.
முதல் கவிதையிலேயே அவரது பாணியில் ஒரு மாற்றம் தெரிகிறது. சொல்லப்போனால் அது கவிதையே அல்ல. எழுத வேண்டிய கவிதைக்கான குறிப்புகளாகும். அதுவே தலைப்புமாகியுள்ளது – ‘எழுத வேண்டிய
கவிதை: இவை குறிப்புகள்’. உலகின் கவனத்தை ஈர்த்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது இராக்கில் ஒரு நிருபர் தன் ஷ¥வை வீசிய செய்தியும் அதன் தொடர் நிகழ்வுகளும் செய்திகளாகத் தொகுத்தளிக்கப்
பட்டுள்ளன. இதுதான் தற்போதைய புதிய கவிதையாம்! எனக்கென்னவோ இது அதி நவீன நட்சத்திர விடுதி களில் காப்பிக்கு ஆர்டர் கொடுத்தால் பால், சர்க்கரை, டிக்காஷன் ஆகிய மூலப்பொருள்களைக் கொண்டு வந்து சர்வர் வைப்பதுபோலத் தோன்றுகிறது. இனி அடுத்த நிலையில் பால் கறந்து கொள்ளப் பசுமாட்டைக்
கொண்டுவந்து நிறுத்துவார்களோ என்னவோ? இது என் புரிதலின் வறட்சியாகக் கூட இருக்கலாம். கவிஞர், கவிதை உருவாக்கத்தில் பல்வேறு சோதனைகளையும் சாதனைகளையும் அவதானித்து வருகிறவர். அவரது இந்த பாணி ‘கவிதை அறிவுஜீவி’களுக்கு ஏற்புடையதாகவும் இருக்கக் கூடும்.
அடுத்து, இவரது இன்றைய கவிதைகளில் அவரது ஆரம்பகால மரபுக்கவிதையாக்கத்தின் மீட்சி இத்
தொகுப்பில் உள்ள சில கவிதைகளின் மூலம் தெரிகிறது. ‘மழை’ என்கிற கவிதை முழுக்க முழுக்க மரபுவழிப்
பட்ட புதுக்கவிதை எனலாம். பாரதியின் வசன கவிதையை ஒத்த சொல்லாட்சிகளும், கலைநயமும், ஒலியமை தியும் கொண்ட கவிதை அது. ஒவ்வொரு பாடல் (stanza) முடிவிலும் ‘மழை…மழை… அது, பெய்யட்டும்!’ என்று மரபுக்கவிதையின் அழகைக் கொண்டுள்ளது. மேலும் செய்தி வெளிப்பாடும் சொல்லடுக்குகளாய், புதுமைப்பித்தன் ‘அன்று இரவு’ கதையில் வசனகாவியமாய் அடுக்கிக் கொண்டே போவது போல நெஞ்சை ஈர்ப்பதாய் சுவை கூட்டுகிறது. கவிதையைப் பார்க்கலாம்:
‘மழை..மழை…அது, பெய்யட்டும்!
வீட்டின் மீது,
வீதியில், வெளியில் –
காட்டின் மீது,
மலையில், மனத்தில் –
இண்டில், இடுக்கில், எங்கெங்கும் –
அது பெய்யட்டும்! – என்று கவிதை செல்கிறது.
பழமலய்க்கு ‘நகைச்சுவை’ இயல்பாகவே அமைந்துள்ள ஒரு கொடை. அவரது கவிதைகளில் நமுட்டுச்
சிரிப்பாய் பல இடங்களில் அங்கதங்கள் அமைந்திருக்கும். அதில் சமூக அக்கறையும், அனுதாபமும் இருக்கும். இத் தொகுப்பில் அப்படிப் பல கவிதைகளைக் காணலாம். ‘புறமுதுகு’ என்றொரு கவிதை. இது
போரில் புறங்காட்டுதல் பற்றியது அல்ல. முதுகுப் பகுதியை முழுதும் திறந்து போட்டுக்கொண்டு போகிற பெண்களுக்கான எச்சரிக்கை.
‘………….நம் பெண்களுக்கு
இதில், இவ்வளவு ‘இளகிய மனம்’ கூடாது.
திறந்து கிடந்தால் நுழைவதற்குத்
திரிகின்ற நாய்கள் இருக்கின்றன.
கண்கள் என்கின்ற நாய்கள் திரும்பவும் வந்து
கால்கள் தூக்கிச் சிறுநீர் பெய்வன.
உரியவருக்குத் தெரியாமலேயே
‘அவர் இடம்’ ஒன்று கழிவறை ஆகிறது.
ஆண்களின் கண்களும்
அம்புகள் போல் பாய்வன.
‘வீராங்கனைகளா’ய் இருக்க விரும்பினால்
‘புறமுதுகு’ காட்டாதீர்கள்.
புறப்புண் நாணும் புறநாநூறு-
உங்களுக்கும்தாம்!
– ஆதங்கமும் அனுதாபமும் நிறைந்த எள்ளலான கவிதை.
‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்’ என்று பழைய இலக்கியங்கள் கூறும். பழமலய் காட்டும்
‘பண்பெனப்படுவது’ இன்றயை நடைமுறைக்கான வழிகாட்டுதல்.
‘பண்பெனப் படுவது’தான் என்ன?
பிறருடைய சுயமரியாதையும்
பார்ப்பது, பாதிக்காதது”
அதாவது –
‘வணக்கம் வைத்தல்,
பதிலுக்கு ‘வைக்காதவர்களுக்கு வைக்காதது’
சுயமரியாதை.
வைக்கிறவர்களுக்கு வைக்காமை
அவமரியாதை.
பிறர் காலில் விழாதது
சுயமரியாதை.
பிறரைக் காலில் விழ அனுமதிப்பது
அவமரியாதை.
உட்காரச் சொல்லாத போது
உட்கார்ந்து கொள்வது சுயமரியாதை.
உட்காரச் சொல்லாமை அவமரியாதை.’ ………..போல.
கவிஞர் மனிதர்களின் சீரழிவிற்கு மட்டுமல்லாமல், நம்மை அண்டி வாழும் பிராணிகளுக்காகவும் உருகு
கிறார். சிங்கப்பூரில் காக்கைகளே இல்லாதபடிக்கு சுட்டுத் தள்ளும் கொடுமை பற்றி எழுதுகையில்,
‘என் கவலை:
குயில் இனமும் அழிந்துவிடும்
கொடுமை நடந்து விடுமே!
‘கத்தும் குயிலோசை’ கனவு ஆகிவிடுமே!
இனிவரும் தலைமுறைகளுக்குக்
கனவுகளும் இருக்காது.
பார்த்திருந்தால்தானே கனவு!
பாவம் எதிர்கால மனிதன்!
நாம் காக்கைகளை நேரில் பார்த்திருக்கிறோம்:
அ•து ஓர் அழகான பறவை.
இருட்டைப் போலவும்
இருட்டு வெளுத்து வருவது போலவும்
இருக்கும் அவற்றின் நிறங்கள்.’
– என்று பரிதாபப்படும் கவிஞர் இறுதி வரிகளில ஒரு நடைமுறை வழக்கைச் சொல்லி நம்மையும் உருக
வைத்துவிடுகிறார். இடுகாட்டில் எரியூடுமுன்னதாக வெட்டியான் சொல்லுவதை –
‘மூடப் படப்போகிறது:
முகம் பார்ப்பவர்கள் பார்க்கலாம்!’
– இங்கே சொல்லி காக்கை இனத்தின் மறைவை ஒரு சோகக் காட்சியாக்கி விடுகிறார்.
கவிஞர் பழமலய் குழந்தைகளுக்காகவும் கவிதைகள் எழுதியுள்ளார். பெருங்கவிஞர்கள் குழந்தை
களுக்கு எழுதுவதையும் ஒரு பெரிய பணியாகக் கொள்ள வேண்டும். கவிமணியின் ‘தோட்டத்தில் மேயுது
வெள்ளைப்பசு….’, பெ.தூரனின் ‘நத்தையாரே நத்தையாரே அத்தை வீடு பயணமோ?’ என்னும் காலத்தால்
அழியாத கவிதைகளில் மனம் பறி கொடுக்காதோர் நம்மில் யார்?
இத்தொகுப்பில் சில பிரபல ஆங்கில குழந்தைப் பாடல்களை அருமையாய்த் தமிழாக்கித் தந்திருக்
கிறார் பழமலய். சிறப்பான தமிழாக்கம் என்பது மட்டுமல்ல, நம் சூழலுக்கு ஏற்ப, நமது கலாசாரத்தை
யொட்டியும் ஆக்கியிருக்கிறார்.
‘Hot cross bun hot crossbun!
One a penny, two a penny
Hot cross bun’
என்கிற கவிதையை, எப்படி மொழியாக்கம் செய்திருக்கிறார் பாருங்கள்!
‘இட்லி, தோசை சூடு!
இட்லி, தோசை சூடு!
இரண்டு ரூபாய்-
மூன்று ரூபாய்-
இட்லி,தோசை சூடு!
– மேலே காட்டப் பட்டவை மாதிரிகள் தாம். கவிஞரின் முழு ஆளுமையையும் கவித்திறத்தையும் காண
முழுதுமாய்த் தொகுப்பைப் படிக்க வேண்டும்.
வயது மற்றும் அனுபவ முதிர்ச்சி காரணமாய், கவிஞரின் தற்போதைய கவிதைகளில் மரபுக்கவிதையின்
சுகானுபவமும், கலைநயமும் மிகுந்து வருவது ஆரோக்கியமான வளர்ச்சி எனலாம். 0
நூல் : கொனாரக் பாட்டியின் ஊன்றுகோல்.
ஆசிரியர் : கவிஞர் த.பழமலய்.
வெளியீடு : பெருமிதம் வெளியீடு, விழுப்புரம்.
- இன்னும் கொஞ்சம் … நட்புடன்தான்
- நண்பர் ஷேக் தாவூதுக்கு பதில்
- கனெக்டிகட் – நியூஜெர்ஸி, நியூயார்க் ஜெயமோகன் வாசகர் சந்திப்பு அறிவிப்பு
- ‘கவிஞர் பழமலய்’யின் ‘கொனாரக் பாட்டியின் ஊன்றுகோல்’
- வேத வனம் – விருட்சம் 42
- சிறகுகளே சுமையானால்…
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! காலக்ஸி ஒளிமந்தையின் நான்கு நியதிகள் (கட்டுரை: 60 பாகம் -3)
- சுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று -1
- சுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று – 2
- கல்வி தரும் சகலகலாவல்லி மாலை
- ஜாகீர் ராஜாவின் செம்பருத்தி பூத்த வீடு
- வதிரி கண. எதிர்வீரசிங்கத்தின் ‘சிறுவர் கவிச்சரம்’
- வழியும் மாலை நேரம்
- ஈழத்துத் தமிழ்க் கவிதை – ராஜமார்த்தாண்டன் வாசிப்பு
- கடித விமர்சனம் – 6 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)
- சிங்கப்பூரில் தமிழகத்தின் தஞ்சை கூத்தரசன், மலேசியாவின் பாண்டித்துரை கலந்து கொள்ளும் இலக்கிய விழா
- நாகரத்தினம் கிருட்டிணா அவர்களின் அறிவியல் புனைகதை “எந்திர சாதி, சோலார் கோத்திரம்” படித்தேன்.
- சிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டி. மூன்று முதல் பரிசுகள்- சிங்கப்பூருக்கு ஒரு வாரம் சுற்ற
- மழை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << என்னை விலக்கி விடு >> கவிதை -13 பாகம் -2 (முன் கவிதைத் தொடர்ச்சி)
- ஊர்விலக்கம் – மூன்றாமாண்டு துவக்கம் (எழுத்தின் உரையாடல்)
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பனிரெண்டு
- பித்தனின் உடையாத இரவுகள்
- அவன்…அவன்?
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு
- புகைக்கண்ணர்களின் தேசம் -1
- புகைக்கண்ணர்களின் தேசம் – 2
- நான் ஒரு பூஜ்ஜியம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -4
- விரிவடையும் இஸ்லாமியப் பார்வை (குர்ஆனிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம் – திறனாய்வு)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 45 << என் அழகீனக் காதலி ! >>
- சாமி படிக்க வைக்கும்
- ஓரின ஈர்ப்பும் விவாதங்களும்.
- நர்சரி வார்த்தைகள்
- சவுக்கால் அடியுங்கள்
- நிர்வாணம்
- நீரின் மேற்பரப்பில் தத்தளிக்கும் வீடு
- நிசிவெளி
- பாண்டிச்சேரி பிரகஸ்பதிகள் கதை