கல்யாணம் யாருக்கு ?

This entry is part [part not set] of 21 in the series 20020224_Issue

பவளமணி பிரகாசம்


மரகதம்: ‘வா, சுசீலா, வா. உன்ன பாத்து ரொம்ப நாளாச்சி. யாாிது உன் கூட ? ‘

சுசீலா: ‘என்னோட தோழி ப்ாியா. டில்லிலேர்ந்து வந்திருக்கா. அவளோட ஊரெல்லாம் சுத்தி பாத்துட்டு வர கிளம்பிட்டேனா, அதான் உன்ன பாக்க வர முடியல. ‘

மரகதம்: ‘வணக்கம் ப்ாியா.அவ்வளவு தூரத்துலர்ந்து வந்திருக்கீங்க, எங்க வீட்டு கல்யாணத்துக்கு அவசியம் இருந்துட்டு போகணும். ‘

சுசீலா: ‘கல்யாண ஏற்பாடெல்லாம் முடிஞ்சிருச்சா, மரகதம் ? ‘

மரகதம்: ‘உம். எல்லாம் திருப்தியா முடிஞ்சிருச்சி, சுசீலா. ‘

சுசீலா: ‘எவ்வளவு பவுனுக்கு நகை செஞ்சிருக்க ? ‘

மரகதம்: ‘எப்படியோ 16 பவுன் தேத்திட்டேன். கழுத்து சரத்துக்கும், கை வளையலுக்கும் சாியாயிருக்கும். ‘

சுசீலா: ‘பட்டு ஜவுளி எடுத்தாச்சா ? ‘

மரகதம்: ‘ஓ! எடுத்தாச்சே. நல்லா எடுப்பா 3 சேலை அமைஞ்சிருக்கு. நிச்சயத்துக்கு, கல்யாணத்துக்கு, வீட்டுக்குன்னு 3 தினுசா எடுத்திருக்கேன். ‘

சுசீலா: ‘காஸ் கனெக்ஷனுக்கு எழுதி வச்சிருந்தியே, கிடைச்சிருச்சா ? ‘

ப்ாியா: ‘என்னது, காஸ் கனெக்ஷனா ? ‘

மரகதம்: ‘ஆமா, முன்னாடியே காஸ் வாங்கிட்டா, தனியா குடித்தனம் பண்ண ஆரம்பிக்கும் போது சிரமமில்லாம இருக்குமில்லையா ? ‘

சுசீலா: ‘பையன் மண்ணெண்ண கேன தூக்கிட்டு ஓட்றதுக்கும், பொண்ணு மணிக்கணக்கா மண்ணெண்ண ஸ்டவ்வுல வேகறதுக்கும் பதிலா காஸ் அடுப்புல சீக்கிரமா சமையல முடிச்சிட்டு சந்தோஷமா இருக்கலாமே ? ‘

மரகதம்: ‘நினைச்ச மாதிாி ஃப்ாிட்ஜ் கூட வாங்கியாச்சி. ‘

ப்ாியா: ‘பரவாயில்லையே! ‘

மரகதம்: ‘ஃப்ாிட்ஜ் என்னங்க, கலர் டிவியும் வாங்கியாச்சி. அதோட சின்னஞ்சிறுசுகளுக்கு ஒரு குறையும் இருக்கக் கூடாதுன்னு பாட்டு கேட்க ஒரு நல்ல த்ாீ-இன் -ஒன்னும் முன்னாடியே வாங்கிட்டேன். ‘

ப்ாியா: ‘வண்டி, வாகனம் பத்தி நீங்க ஒன்னுமே சொல்லலியே ? ‘

மரகதம்: ‘ஓ! டூவீலர்தான் இருக்கே! ‘

சுசீலா: ‘இன்னும் யோசிச்சி, யோசிச்சி ஏதாவது சேகாிச்சி வச்சிருப்பியே ? ‘

மரகதம்: ‘ஆமா. வீடுன்னா ஃபர்னிச்சர் வேண்டாமா ? ஒரு சோபா, ஒரு டேபிள், 2 சேரு எல்லாம் வாங்கிட்டேன். ‘

ப்ாியா: ‘அப்பப்பா! இவ்வளவையும் சேக்குறதுக்கு நீங்க ரொம்பத்தான் சிரமப்பட்டிருப்பீங்க, இல்லியா ? ‘

மரகதம்: ‘ரொம்ப சிரமப்பட்டதா சொல்ல முடியாது. சந்தோஷமா, கெளரவமா வாழணும்னா இதெல்லாம் வேணும். வேலையில சேர்ந்ததுமே சிக்கனமா சேமிச்சி எல்லா வசதிகளையும் சேத்துட்டேன். ‘

சுசீலா: ‘திட்டம் போட்டு கச்சிதமா செஞ்சி முடிக்கிறதுல நீ ரொம்ப சாமர்த்தியசாலிதான். ‘

ப்ாியா: ‘ஓஹோ, வரதட்சிணை வாங்குறது சட்டப்படி தப்புன்னு ஆனதும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொருளாவே தரச் சொல்றாங்களா ? ‘

மரகதம்: ‘மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தரச் சொல்றாங்களா ? ‘

சுசீலா:(சிாிக்கிறாள்) ‘ப்ாியா, கல்யாணம் யாருக்குன்னு நீ நினைச்சே ? ‘

ப்ாியா: ‘ஏன் ? இவங்க பொண்ணுக்குத்தான். ‘

சுசீலா: ‘இல்ல. கல்யாணம் இவ பையனுக்கு. ‘

ப்ாியா: ’16 பவுன் நகை ? ‘

மரகதம்: ‘என் மருமளுக்கு கையில தங்க வளையல் பூட்டி, தங்க சரடுல தாலி அணிவிச்சி எங்க வீட்டுக்கு கூட்டி வருவோம். எங்க வீட்டுக்கு வரவளுக்கு எங்க செலவுலதான் பட்டெடுப்போம். ‘

ப்ாியா: ‘காஸ் அடுப்பு, ஃப்ாிட்ஜ், கலர் டிவி, த்ாீ-இன் -ஒன், டூவீலர், அம்மாடி- ஃபர்னிச்சர் கூடவா ? ‘

மரகதம்: ‘என் மகன் இருக்கானே, அவன் ரோஷமான ஆம்பள. அவன பெத்து, வளத்து, படிக்க வச்சது பெத்தவங்களான எங்க கடமை. உத்தியோகம் கிடைச்சி சம்பாதிக்க ஆரம்பிச்சதும் அவன் அவங்கப்பாவுக்கே பாரமா இருக்க விரும்பல. அப்படி இருக்கையில வருங்கால மாமனார் வந்து அவனுக்கு செளகாியமா வாழ வசதி செஞ்சி கொடுக்கணும்னு நினைக்க அவன் சுய கெளரவம் இடம் கொடுக்குமோ ? இந்த பறவைகள பாத்தீங்களா ? கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொாிச்சி, குஞ்சிகளுக்கு இறக்கை முளைக்கிற வரைக்குந்தான் அதுகள காப்பாத்துறது பொிய பறவைகளோட கடமை. பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் தொிஞ்ச இந்த விஷயம் நமக்கு தொியாம போகலாமா ? ‘

சுசீலா: ‘ப்ாியா, இப்ப புாிஞ்சிகிட்டியா ? கல்யாணம்கறது பெண்ண பெத்தவங்களுக்கு சிம்ம சொப்பனமா இருக்க தேவையேயில்ல. ‘

ப்ாியா: ‘பெண் குழந்தை பிறந்தா துக்கப்படணும்கற பழக்கமும் ஒழிஞ்சிருமா ? ‘

மரகதம்: ‘ஆமா. மருமகள்னா மற்றொரு மகள்னுதானே அர்த்தம் ? ‘

சுசீலா: ‘ஆணும், பெண்ணும் சந்தோஷமா சேர்ந்து வாழ்றதுக்காக செஞ்சிக்கிற ஒப்பந்தம் திருமணம்.அது புனிதமா நீடிக்கிறதுக்கு மரகதம் மாதிாி எல்லா பெண்களும் நினைக்கணும். இத ஒரு உறுதிமொழியா எடுத்துக்கணும். பெண்களாகிய நாம நினைச்சா மாறுபட்ட ஆரோக்கியமான சமுதாயத்த உருவாக்கலாமே ? நீ என்ன சொல்ற, ப்ாியா ? ‘

ப்ாியா: ‘ஆமா. நீங்க சொல்றத கேட்கும் போதே எவ்வளவு ஆனந்தமா இருக்கு! ‘

***

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்