கலிஃபோர்னியாவிலிருந்து ஒரு கானம்…. ‘இதயப் பூக்கள் ‘ ஒலித் தட்டு.

This entry is part [part not set] of 30 in the series 20050715_Issue

கோவிந்த் (எ) கோச்சா


எல்லா மனிதருக்குள்ளும் கலையுணர்வும் கலை வித்தகமும் இருக்கும். சிலரால் அதையே தங்கள் தொழிலாக அமைத்துக் கொண்டு அதில் வெற்றியும் காண முடிகிறது.

பலரோ தாங்கள் கொண்ட துறை எதுவாக இருப்பினும் வேலைப் பளுவுக்கிடையே கலைக்கென்று நேரம் ஒதுக்கி, பல திறமைசாலிகளைச் சேர்த்து பொழுது போக்காக மேன்மையாக ஏதாவது செய்கின்றனர்.

அதில் சிலர், தொழிற் முறை கலைஞர்களுக்குண்டான நேர்த்தியுடன் கலைப்பணியை ஆற்றுகின்றனர்.

அமெரிக்காவின் பல பகுதிகளில் இத்தகைய திறமைசாலிகள் இருக்கின்றனர்.

அவர் போல் கலிபோர்னியாவில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர், முகுந்தன்.

அவர் சார்ந்த கலைக்குழு நிர்பந்தமினிறி, கூட்டம் வரக் கூடிய சக்தி படைத்த அர்ப்புத குழு.

தரமான இசை, அது சார்ந்த நாட்டியக் குழுக்கள் என்று தங்களின் நிகழ்வுகளில் அற்புத ஜாலம் செய்து கலிபோர்னியாவை தங்கள் கலைத்திறனால் கட்டிப் போடுபவர்கள்.

முக்ஸ் (அப்படித் தான் செல்லமாக அவரை அழைகிறார்கள் ) இந்திய பாரம்பரிய மற்றும் மேற்கத்திய இசைகளில் முறையான பயிற்சி பெற்றுள்ள முக்ஸ் , சமீபத்தில் ஒலித் தட்டை சென்னையில் வெளியிட்டுள்ளார்.

‘இதயப் பூக்கள் ‘ எனும் அந்த ஒலித் தட்டை தமிழக திரை இசை வித்தகர்கள், கவிஞர்.வைரமுத்து, மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் (ராமமூர்த்தி ) வெளிட்டு, முக்ஸின் இசைப் பயணத்தின் அடுத்த வடிவத்தை ஆரம்பித்து வைத்தார்கள்.

டெக்ஸ்சாஸ் தமிழர் விழாவில் ‘ அந்த இசைத்தட்டு அமெரிக்க மண்ணில் வெளியிடப்பட்டது.

அதிலும் அந்த ‘இதயப் பூக்கள் ‘ இசைத் தட்டில், ‘அமெரிக்காவில் பிறந்த என் அற்புதமே…. ‘ என்ற பாடல், மணிராம் இயக்கத்தில் , சுபாஷிணி ஒளிப்பதிவில் கலிஃபோர்னியா வாழ் கலை ஆர்வலர்களால் நடிக்கப் பெற்று விடாயோ வடிவம் பெற்றுள்ளது.

அதை http://music.muxonline.com/Americavil.mpeg என்ற தொடர்பில் பார்க்கலாம்.

சிக்னலில் நின்று நின்று வரும் போது, ஓட்டி வருபவர் குழுந்தை நினைவில் எதிர்த்தாற்போல் இருக்கும் டாஸ் போர்டில் விரலால் ஒரு கோடு மாதிரி இழுக்கிறாரே.. அது இயக்குனரின் எண்ண அலைகளைக் காண்பிக்கிறது.

குழந்தைகளின் சின்னஞ் சிறு குறும்புகளை ‘சுபாஷணி ‘ அற்புதமாக பதிவு செய்துள்ளார்.

காலை கிளம்பி இரவு வீடு வரும் பலரும், ‘குழந்தைகள் காப்பகத்தில் ‘ விடப்பட்டுள்ள தங்களின் குழந்தைகள் தொடர்பான உணர்வை …. சொல்ல வார்த்தை கிடைக்காத அந்த உணர்வை, ‘அருள் ‘ என்பவரின் பாடல் வரிகளில் அற்புதமாக எடுத்துள்ளார்கள்.

இனி அமெரிக்காவில் அலுவல் முடிந்து வீடு வரும் அந்த ஐந்து மணி தாண்டிய தருணத்தில் கார்களில் தேசிய கீதம்போல் ‘அமெரிக்காவில் பிறந்த என் அதிசியமே… ‘ எனும் பாடலைக் கேட்கலாம்.

இதைப் பார்த்த முடிவில் என் மனைவியின் விழிகளில் கண்ணீர்ப் பூக்கள். அது முக்ஸ் மற்றும் குழுவினருக்கு கிடைத்த வெற்றிப் பூக்கள்.

எந்த கலை வடிவு விழி மற்றும் காது தாண்டி இதயத்தைத் தொடுகிறதோ அது நிரந்தமானது என்பது வரலாறு.

இந்த ‘இதயப் பூக்கள் ‘ அத்தகைய வெற்றியை எட்டியுள்ளது.

பாருங்கள்…. நான் சொல்வது அனுபவித்தாலே புரியும்….

கோவிந்த்

—-

gocha2004@yahoo.com

Series Navigation

கோவிந்த் (எ) கோச்சா

கோவிந்த் (எ) கோச்சா