கபா

This entry is part [part not set] of 31 in the series 20060728_Issue

சூபிமுகமது


வர வர வகாபி நல்லதொரு ஜோக்காளராக மாறிவிட்டார். கபாவின் உள்ளே என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு காற்று இருக்கிறது என்ற அவரது பதில் வெகுஜோர்.

மகாமுஇபுராகீம் வார்த்தைக்கு நபி இபுராகீம் நின்ற இடம்,ஹஜ்ஜின் கிரியைகள் நடக்குமிடம்மக்காவின் புனித எல்லை முழுவதும் என மூன்றுவிதமாகவும் நடைமுறையில் பொருள்கொள்ளப்படுகிறது.

மஹ்மூத் அல் ஹசன் கபாவின் அதிகாரம் யாருக்கு என்ற தனது விவாதத்தில் 21ஆண்டுகளுக்கு முன்பு கபா தூய்மைபடுத்தும் குழுவில் தமிழக பிரதிநிதி இருந்துள்ளார் என சப்பை கட்டுகிறார். 21 ஆண்டுகளாக சவுதி மன்னர் பரம்பரை தவிர பிறர் செல்லவில்லை என்பது அவரது வரிகளே சொல்லிவிட்ட உண்மை.அதுசரி அப்துல் சமது சாகிபு கபாவின் உட்புறத்தினுள் தான் சென்றது பற்றி என்ன சொல்லியுள்ளார் அவரது வரிகளை மேற்கோள்காட்டட்டும். பிறகு அது பற்றி விவாதிக்கலாம்.

கபாவில் அஷ்டகோணவடிவ மகாம் ஏ இபுராகீம் பீடம் இல்லை என்பதை வகாபி நிரூபிக்க முடியுma
ஸங்கே அஷ்வேத வெண்மை அல்லாத கல் என்பதற்கு அது நீலமாகவோ,பச்சையாகவோஇருக்கலாம் என்கிறாரே… தமிழ் வார்த்தைகளில் எதிர்மறைகள் குறித்து இன்னும் அவர் தெரிந்து கொள்ளவேண்டியுள்ளது. இருள் என்பதற்கு எதிர்மறை வெளிச்சம். இதுபோல் நெட்டை/குட்டை நல்லது/கெட்டது,உயரம்/குள்ளம், இந்த வகையில்தான் வெண்மைஇல்லாதது/கறுப்பு என்ற அர்த்தம் அதனுள்ளே உறைந்து கிடக்கிறது.

சிவலிங்கத்திற்கு ஒப்பானது(சிவலிங்கமல்ல)என்ற என் கூற்றை அல்ஹசன் எப்படி மறுக்கப் போகிறாரோ.
அவரது சுட்டிகளிலிருந்து படங்களாய் தருவித்து அதன் நிறம், வடிவம், புனிதம் குறித்த உண்மைகளை அல்ஹசன் வெட்ட வெளிச்சமாக்க தயாரா…

கபாவில் நபீஇபுராகீம், நபி இஸ்மாயில் கன்னிமரியம், குழந்தைஏசு, மற்றும் நபிமார்களின் முன்னோடிகளின்,ஒவியங்கள் சிலைகள் இருந்துள்ளன. நபி முகமது அரசியல்ரீதியாக கபாவை கைப்பற்றியப் பிறகுதான் இவை அகற்றப்பட்டன.

இன்றும் இந்த கபாவின் புனித எல்லைக்குள்தான் நபீஇபுராகீமின் நினைவுஅடையாளங்களும் நபி இஸ்மாயில் மற்றும் அன்னை ஹஜராவின் அடக்கவிடங்களும் உள்ளன. அல்லாவை தொழும் கபா சமாதிகளின் உறைவிடமாகவே உள்ளது. அறியப்படாத இந்த வரலாறுகள் உண்மையிலேயே அதிர்ச்சிகரமானவைதான்.

Series Navigation

சூபிமுகமது

சூபிமுகமது