கனடாவின் ஷரியா நீதிமன்றங்களை எதிர்த்து உலகளாவிய ஆர்ப்பாட்டம்

This entry is part [part not set] of 29 in the series 20050902_Issue

ஆசாரகீனன்


பெண்களின் அடிப்படை மனித உரிமைகளையும், பால் சமத்துவத்தையும் மறுக்கும் தீவிர இஸ்லாமிய சட்டமான ஷரியாவின் அடிப்படையில் இயங்கும் நீதிமன்றங்களை மதசார்பற்ற நாடு என்று தம்மைச் சொல்லிக் கொள்ளும் கனடாவின் அரசாங்கம் கடந்த ஆண்டு அங்கீகரித்தது. உலகெங்கிலும், குறிப்பாக ஜனநாயக மதசார்பற்ற நாடுகளில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாத அமைப்புகளை தம் மண்ணிலிருந்து சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்கும் ஒரு சில மேலை நாடுகளுள் கனடா முதன்மையானது.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ஆளைக் கடிக்க வரும் ஓநாயைக் கடைசி நேரத்தில் கண்டு கொண்டு பரிதவிக்கும் மனிதனைப் போல, பிற நாடுகளின் பயங்கரவாதிகளைத் தன் எல்லைக்குள் அனுமதித்து அவர்கள் மற்ற நாடுகளில் என்ன நாசம் விளைவித்தாலும் அது மனித சுதந்திரம், அரசியல் தாராளவாதம் என்று உளறிக் கொண்டிருந்த பிரிட்டன், இன்று உள்நாட்டிலேயே வளர்ந்த முஸ்லிம் தீவிரவாதிகள் தம்மையே கொல்லவும் நாசம் செய்யவும் துணிந்த பின் அலறி அடித்துக்கொண்டு தீவிரவாத முல்லாக்களை நாடு கடத்த முயல்கிறது. கூடிய சீக்கிரம் கனடாவுக்கும் இதே நிலை ஏற்படும் என்பது தெளிவு.

நேற்று வரை இந்தியாவை அமைதி காக்குமாறும், தீவிரவாதிகளுக்கு நீதி மன்றங்களில் முழு உரிமை கொடுக்கச் சொல்லி வலியுறுத்தியும் பன்னாட்டு மையங்களில் இந்தியாவைக் கண்டித்துத் தீர்மானங்கள் இயற்றி வந்த ஐரோப்பிய நாடுகளின் பொய் முகம் இப்போது கிழிபட்டு வருகிறது. தீவிரவாதி என்ற வெறும் ஐயத்தில் அப்பாவி பிரேசிலிய இளைஞரை நீதி விசாரணை ஏதும் இல்லாமல் சுட்டுக் கொன்றது பிரிட்டிஷ் போலிஸ். அது மட்டுமல்லாமல் அது தவிர்க்க முடியாத சம்பவம் என்று வேறு சாக்குப் போக்கு சொல்கிறது.

தனக்கு ஒரு நீதி மற்றவருக்கு ஒரு நீதி என்ற பொய்மை மேலை நாட்டு ஜனநாயகங்களில் உலவும் வரை உலக மக்களுக்கு அமைதி ஏற்படும் வாய்ப்பு கிடையாது. மேலை நாடுகளைப் புகலிடமாகவும் பாதுகாப்பாகவும் கொண்ட பல நாட்டுப் பயங்கரவாதிகள் – காஷ்மீரத்து இஸ்லாமியக் கொலைவெறியர்கள், நாகா தீவிரவாதிகள், சீக்கியப் பிரிவினைவாதம் பேசும் காலிஸ்தானியக் கொலை வெறியர்கள், இன்னமும் இதர மொழி, இன, தேசியத் தற்கொலைப் படை மூர்க்கர்கள் – இவர்கள் அனைவருக்கும் பிரிட்டன், கனடா போன்ற நாடுகளில் புகலிடம் கிட்டும் வரை இந்தியாவுக்கு அமைதி கிடைக்க வாய்ப்பில்லை.

நேற்று வரை இந்த கொலை வெறியர்களுக்கு ஆதரவு காட்டிய இடதுசாரியினர் – இந்திய மற்றும் மேலை இடதுசாரியினர் – இன்று பிரிட்டனுக்கும் இதர ஐரோப்பிய நாடுகளுக்கும் புகலிடம் தேடி வந்த மக்கள் உள்நாட்டுப் பண்பாடு மேலும் சட்ட திட்டங்களுக்கு உட்பட வேண்டும் என்று ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் பல்டி அடிப்பதைப் பார்த்துக் கொண்டு கையும் மெய்யும் பொத்தி மெளனம் காப்பது ஏன் ? சுயலாப நோக்குதான், வேறென்ன ? ஆனால், இன்னமும் இந்த நாடுகளில் பல கோணல்கள் இருக்கின்றன என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

அமெரிக்காவைப் போலவே வெள்ளை இனவெறியையும், எவாஞ்சலிக்க தீவிர கிறிஸ்தவத்தையும் தம் உள்ளீடாகக் கொண்ட நாடுதான் கனடா என்றாலும், தாராளவாத வேடம் போடுவதில் இதற்கு நிகராக எந்த ஒரு மேலை நாட்டையும் சொல்ல முடியாது. எனினும், பல-பண்பாட்டியம் என்ற போர்வையில் ஷரியா நீதிமன்றங்களை அங்கீகரிப்பது போன்ற செயற்பாடுகள் கனடாவின் உண்மை முகத்தை உலகுக்கு உணர்த்தி வருகின்றன.

நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர் மேலை நாடுகளின் பெண்கள் மீட்டெடுத்த அடிப்படை உரிமைகளை எப்பாடு பட்டேனும் ஒழித்துக் கட்டிவிடுவது என்று கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் செயல்பட்டு வருவது தெரிந்ததே. அவர்களைப் போலவே, மேலை நாடுகளில் வாழும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சவுதி அரேபியா போன்ற தீவிர இஸ்லாத்தைக் கடைபிடிக்கும் ஏகாதிபத்திய வேட்கை கொண்ட வஹாபி அரசாங்கங்களின் பெட்ரோ-டாலர்களின் பலத்துடன் செயல்படத் தொடங்கியுள்ளனர்.

இந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் முயற்சி மற்றும் தீவிர-இஸ்லாத்தின் அதிதீவிர ஆதரவாளர்களான இடதுசாரிகளின் ஆசி ஆகியவற்றின் காரணமாக கடந்த ஆண்டு கனடாவின் அரசாங்கம் ஷரியா நீதிமன்றங்களை ‘நம்பிக்கை அடிப்படையிலான நீதிமன்றங்கள் ‘ என்ற பிரிவின் கீழ் அங்கீகரித்தது. அரபு இனவெறி ஏகாதிபத்தியக் கோட்பாடான வஹாபிசத்தையே ‘இடதுசாரி இஸ்லாம் ‘ என்று கொண்டாடி வருபவர்கள் பல-பண்பாட்டியம் என்ற போர்வையில் ஷரியா நீதிமன்றங்களை ஆதரிப்பதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது ?

பெண்களின் அடிப்படை மனித உரிமைகளை மறுக்கும் ஷரியத் நீதிமன்றங்களுக்கு எதிராகவும், அவற்றை அங்கீகரிக்கும் கனடிய அரசாங்கத்தைக் கண்டித்தும் கடந்த ஆண்டே ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு ஆகஸ்டு 12-ம் தேதி டொராண்டோ நகரில் ஷரியா நீதிமன்ற எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மிரட்டல்கள் காரணமாக பல இடமாற்றங்களுக்குப் பின்னர் நடந்த இந்த மாநாட்டில் அயான் ஹிர்ஸி அலி, இர்ஷத் மஞ்ஜி, ஹோமா அர்ஜோமண்ட் முதலிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினர். பார்க்க: மாநாட்டு நிகழ்வுகள்

இந்த மாநாட்டில், ‘ஷரியா சட்டமும் உலகமயமாகும் அரசியல் இஸ்லாமும் ‘ என்ற தலைப்பில் ஹோமா அர்ஜோமண்ட் ஆற்றிய உரை முக்கியமானது. பார்க்க: ஹோமா அர்ஜோமண்டின் உரை

ஷரியா நீதிமன்ற எதிர்ப்பு மாநாட்டில் அயான் ஹிர்ஸி அலி பேசியதன் ஒளிப்பதிவு

மாநாட்டு நிகழ்வுகளின் ஒளிப்பதிவு: பாகம் 1 பாகம் 2 பாகம் 3

இந்த மாநாட்டைத் தொடர்ந்து, ஷரியா உள்ளிட்ட நம்பிக்கை சார்ந்த நீதிமன்றங்களுக்கு எதிரான அகில உலக அளவிலான ஆர்ப்பாட்டம் இந்த ஆண்டும் நடத்தப்பட உள்ளது. கனடாவின் பல நகரங்களிலும், ஐரோப்பிய நாடுகளிலுள்ள கனடிய தூதரகங்களுக்கு முன்னாலும் செப்டம்பர் மாதம் 8-ந் தேதி நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டங்கள் பற்றிய விவரங்களை அறிய: ஆர்ப்பாட்ட விவரம்

இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும், அரபு ஏகாதிபத்தியத்தையும் பரப்பும் விதத்தில் உலகெங்கும் செயல்பட்டு வரும் இஸ்லாமிய அமைப்புகளுக்கு சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள் பெரும் பணத்தை வாரி வழங்கி வருகின்றன. இந்த அமைப்புகள் பெண்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் ஷரியா நீதிமன்றங்களை ஏற்படுத்த, இடதுசாரிகளின் கருத்துத் தளத்திலான ஆதரவுடன் பல்வேறு விதங்களில் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், இத்தகைய நீதிமன்றங்களை எதிர்க்கும் பெண்கள் அமைப்புகளுக்கு உலகிலுள்ள எந்த ஓர் அரசாங்கமும் ஒரு பைசா கூட நிதியளிப்பதில்லை.

எனவே, பெண்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க நடத்தப்படும் இத்தகைய போராட்டங்களில் பங்கு பெறுவதோடு, தங்களால் முடிந்த அளவு நிதியை அளிப்பதும் உலகம் முழுவதும், குறிப்பாக வட-அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் கடமை. காசோலைகளை ‘No Sharia Court In Canada ‘ என்ற பெயருக்கு எழுதி அனுப்ப வேண்டிய முகவரி: F.P.P.O., P.O.Box 45546, 747 Don Mills Road, Toronto, Ontario, M3C 3S4 Canada.

இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்ள முடியாதவர்கள் கடிதங்கள் மூலம் தங்கள் கண்டனத்தை அனுப்ப வேண்டிய முகவரிகள்:

Premier of Ontario

The Honorable Dalton McGuinty

Ministry of Intergovernmental Affairs

900 Bay St, 6th Flr, Mowat Block

Toronto ON M7A 1C2

Tel: +1 416-325-9895

Fax: +1 416-325-5222

Email: dmcguinty.mpp.co@liberal.ola.org

Attorney General

The Honourable Michael Bryant

Ministry of the Attorney General

720 Bay St, 11th Flr

Toronto ON M5G 2K1

Fax : +1 416-326-4016

Email: michael.bryant@jus.gov.on.ca

Minister Responsible for Women ‘s Issues

The Honourable Sandra Pupatello

80 Grosvenor St, 6th Flr, Hepburn Block

Toronto ON M7A 1E9

Fax : +1 416-325-5221

Email: spupatello.mpp@liberal.ola.org

United Nations Special Rapporteurs

on Violence against Women

Ms. Yakin Ertற்rk

OHCHR-UNOG

8-14 Avenue de la Paix 1211

Geneva 10 Switzerland

Fax: +41 22 917 9006

Email: urgent-action@ohchr.org

United Nations Special Rapporteur

on the Human Rights of Migrants

Ms. Gabriela Rodrங்guez Pizarro

OHCHR-UNOG

8-14 Avenue de la Paix 1211

Geneva 10 Switzerland

Fax: +41 22 917 9006

Email: urgent-action@ohchr.org

Special Rapporteur

on Freedom of Religion

Asma Jahangir

OHCHR-UNOG

8-14 Avenue de la Paix 1211

Geneva 10 Switzerland

Fax: +41 22 917 9006

Canadian High Commission

7/8 Shantipath, Chanakyapuri

New Delhi 110 021, India

Telephone: +91 (11) 5178-2000

Facsimile: +91 (11) 5178-2020

E-mail: delhi@international.gc.ca

Canadian Consulate

18 (Old 24), 3rd floor YAFA Tower

Khader Nawaz Khan Road, Nungambakkam

Chennai 600 034, India

Tel: (+91 44) 2833 0888

Fax: (+91 44) 5215 9393

E-mail: cheni@gocindia.org

இந்த ஆர்ப்பாட்டம் பற்றிய மேலதிக விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

Homa Arjomand

Coordinator of the international Campaign against Sharia Court in Canada

தொலைபேசி: (+1) 416-737-9500

மின்னஞ்சல்: homawpi@rogers.com

www.nosharia.com

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்