கண்ணீர் விட்டு வளர்த்த கதை!

This entry is part [part not set] of 34 in the series 20070419_Issue

செல்வம்- அருளானந்தம்


�ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்� என்ற நூலை எழுதிய சி. புஸ்பராஜன் இறந்து ஒரு வருடமாகின்றது. ஐம்பதைந்து வருட வாழ்கை காலத்தின் பெரும்பகுதி கொட்டுகிற மழையில், இருளை அழித்துக் கிழிக்கும் மின்னலில் திசையறியாப் பயணமாயிற்று. சரியாகவோ, பிழையாகவோ ஈழப்போராட்டத்தின் முன்னோடி. ஈழப் போராட்ட வரலாற்றில் இரண்டு இளைஞர் இயக்கங்களுக்கு தலைமை தாங்கியிருக்கின்றார்.

வதந்திகளாகவும் வாய்வழி தகவல்களாகவும் இருந்த பல வரலாற்றுச் சம்பவங்களை ஆவணப்படுதியிருக்கின்றார். பல பேர் பேசத் தயங்கிய அல்லது துணியாத தகவல்களை எழுத்தாக்கியிருக்கின்றார்.

தன்னை முன்னிலைப்படுத்தியதும், சில வரலாற்று தவறுகளும் இப்புத்தகத்தில் இவர் விட்டதாக இப்புத்தகம் வெளிவந்த காலத்தில் சிலர் குறைப்பட்டு எழுதியிருந்தார்கள். இன்னும் சில பேராவது தங்கள் போராட்ட கால அனுபங்களை எழுத்தில் வைக்கும் போது இக்குறைபாடுகள் என்னவென்று தெரியவரும்.

குருநகரில் குலமக்கா வீட்டு வாசலில் இவரை சந்தித்த நாள் முதல் புஸ்பராஜனுடன் எனக்கு ஒரு நெருக்கமில்லாத தொடர்பு இருந்தது. குலமக்கா மகள் கௌரியை வரதராஜப்பெருமாள் காதலிக்கத் தொடங்கிய நாட்களில் பெருமாளுடன் நின்ற இவரை ஒரு நண்பர் அறிமுகம் செய்தார். என் வளர் இளம் பருவகாலத்தில் புஸ்பராஜனைத் தெரியும் என்பது ஒரு சின்ன பெருமைதான்.

கடைசியாக இவருடைய இப்புத்தகத்தை ரொறன்டோவில் வெளியிடுவது சம்பந்தமாக பேசினேன். சில பல காரணங்களினால் அது தவறிப் போயிற்று. சோகம் தான் மிஞ்சியது.

�கைதூக்கி விடுவதற்கு ஒன்றுமில்லை. நித்திய சூன்யமாக இருக்கின்றதே என்று எப்பொழுதும் நினைத்தே வந்தேன்� என எழுத்தாளர் புதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதிய கடிதம் தான் இவருடைய இறுதிநாள்கள் பற்றி நினைக்கும் போது நினைவுக்கு வருகின்றது.

அவருடைய நினைவாக இப்புத்தகத்தில் இருந்து சிறிய பகுதியை வாசகர்களுக்காக் தருகின்றேன்.

புத்தகம்: ஈழப்போராட்டத்தின் எனது சாட்சியம்
சி. புஸ்பராஜன்
அடையாளம் வெளியீடு

கொடுரமான சித்திரவதை

1979 ஆம் ஆண்டு ஒக்டேபர் மாதம் 5ஆம் திகதி பின்னேரம் ஜந்து மணி போல் கைது செய்யப்பட்ட என்னை நேராக யாழ்ப்;பாணம் கச்சேரிக்கு முன்னால் உள்ள பழைய பூங்காவில் அமைந்திருந்த பொலிஸ்இராணுவக்; கூட்டுப்படை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். முகாமுக்கு உள்ளே சென்றதும் வாசலில் வைத்தே இன்ஸ்பெக்டர் கருணாரத்தினா தாக்கத் தெடங்கினார். அவர் என்னை அடிப்பதைபபார்தது அங்கு நின்றவர்களும் அடித்தனர். அவர் எனது தலை மயிரில் பிடித்து கொற கொற என இழுத்து அங்கு அமைந்திருந்த விசேட அறைக்குள்( (இறைச்சி கடையெனச் சொல்வர்) போனார். அந்த அறையைக் கண்டதும் சப்தநாடிகளும் அடங்கி நிலமையை புரிந்துகொணடேன் ஆங்காங்கே மனிதர்களை தூக்கிவிடுவதற்க்கு வசதியாக கயிறுகள் தொங்கின. பல விதமான அளவுகளில் அடித்தற்க்கான மரப்பட்டைகள் சிலாகைகள் இருந்தன. சாக்குகுள் ஊசிகள் கம்பிகள் எனத் தாரளாமாக ஒரு மனிதனைச் சித்திரவதை செய்வற்கான உபகரணங்கள் இருந்தன. சுவர்கள் எங்கும் தெறித்தும் பறந்தும் சிந்தியும் துடைக்கப்பட்டும் அழுந்தியும் இரத்த அடையாளங்கள் இருந்தன.

என்னை நிற்கவிட்டு இரண்டு கைகளாலும் சப்பாத்து கால்களாலும் எனது நெஞ்சு வயிறு ஆண்உறுப்பு முகம் எங்கும் அடித்து உதைத்தனர். முகட்டில் தொங்கிய கயிற்றில் டார்சன் போல் தொங்கி வந்து நெஞ்சில் உதைத்தார் கருணாரத்தின. அக்கடி இரண்டாவது முறை பாய்ந்து வந்து எனது வயிற்றில் உதைத்த பொழுது எனக்கு மலம் தானாகவே கழுpந்தது. இப்படி பலருத் சேர்ந்து மிருகம்போல் தாக்கியதில் நான் மயங்கினேன்

விழித்துபார்த்த பொழுது விறாந்தை போன்ற இடத்தில் என்னை போட்டிருந்தது தெரிந்தது. எழுந்தேன். நடக்கமுடியாதது வேதனையாக இருந்துது இலகு ஆட்டமுடியாததால் வாய் திறக்க முடியவில்லை மலம்கழிந்திருந்தால்அது வேறு கஸ்டமாக இருந்தது பக்கத்தில் போன ஒருவரிடம் எங்கே கழுவுவதற்க்கு வசதியெனக்கேட்டேன் அவர்வேறு யாரையோ அழைத்து எனக்கு உதவும்படி சிங்களத்தில் கூறினார் வந்தவருக்கு சிங்களத்தை தவிர வேறு மொழி தெரியாததால் அவரிடம் எனது நிலமையை சிங்களத்தில் கூறினேன். அவர் காட்டிய இடத்தில் இருந்து ஆடைகளைக் கழற்றி கழுவினேன்.

உடலோ புண்ணாக நொந்தது ஆட்ட அசைக்க முடியாதிருந்தது. பலகால பயிற்சிக்கு உட்பட்ட உடம்பு என்பதால் அவ்வளவு அடியையும் தாங்கியது. அத்துடன் இளமை வேறு காரணம். இப்போழுதென்றால் ஓர் அடி கூட தாங்க முடியாது கழுவிய நீள் காற்சட்டையை உதறி மீண்டும் போட்டுக்கொண்டு வந்தேன். ஒரு தட்டில் பாணும் சம்பலும் போட்டு தந்து என்னை வேறெரு அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு ஈழவேந்தன் ஒரு கதிரையில் இருப்பதை கண்டேன். இருவரும் ஆளையாள் அடையாளம் கண்டுகொண்டோம். என்னை சாப்பிடும்படி கூறிவிட்டு அழைத்து வந்தவர்கள் போய்விட்டனர். அங்கு உலாவிய பெருபாலானவர்கள் சாதரண உடையகளில் இருந்ததால் யார் பொலிஸ் யார் இராணுவம் என அடையாளம் காண்பது கடினமாக இருநதது

இப்பெழுது ஈழவேந்தனும் நானும் தனியாக இருந்ததால் இரகசியமாகக் கதைத்துக் கொண்டோம் எனது ஈரதான காற் சட்டைக்கு பதிலாக ஈழவேந்தன் தந்த வேட்டியை கட்டிக் கொண்டேன்; ஈழவேந்தன் பத்தியசசாப்பாடு சாப்பிடுவதால் விசேட ஆஅனுமதி பெற்று வீட்டில் இருந்து சாப்பாடு பெற்நுச் சாப்பிடுவார் என்பதால் எனக்கு பாணுடன் சாப்பிட கொஞ்சம் கறி தந்தார். வாய்திறக்க ஆட்டமுடியாமல் இருந்தது. கஸ்ரப்பட்டு உள்ளே தள்ளினேன். கொஞ்சம் சாப்பிட்டால்தான் உதை வேண்டலாம். நாங்கள் இருவரும் குசு குசு என கதைச்சு கொண்டு இருக்கும்பொழுது கருணாரத்தான வந்தார். யார் வேட்டிதந்தது எனக் கேட்டார் கத்தோ கத்து என்று கத்தினார்;. எனக்கு வேட்டி தந்தது குற்றத்திற்காகச் சாப்படாமல் இரண்டு மணித்தயாலங்கள் எழுந்து தொடர்சியாக ஆடாமல் அசைமால் நிற்கும்படி ஈழவேந்தனுக்கு கட்டளையிடப்பட்டது.

அப்பொழுது நோயாளியாக இருந்த ஈழவேந்தன் அப்படி நிற்பதற்க்கு கஸ்ரப்பட்டார் எனக்கு பார்க்க வேதனையாக இருந்தது. ஈழவேந்தனின் உணவுகளை எடுத்து வெளியே கொட்டினார் கருணாரத்தினா. ஆக ஈழவேந்தனின் இரவுச்சாப்பாடு துண்டிக்கப்பட்டது

என்னை அழைத்துக் கொண்டு மீண்டும் அந்த அறைக்குள் போனார்கள். வவுனியாவில் எங்கே புலிகள் இருக்கின்றனர்? எனக்கேட்டார் கருணாரத்தினா �எனக்குத்தெரியாது என்றேன்;;� அன்பாக முறைத்து சிரித்து கன்னத்தில் கிள்ளிப் பல குரங்குச் சேட்டைகள் செய்து மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்டனர் �எனக்குத் தெரியாது� என மீண்டும் சொன்னேன். முகட்டில் தொங்கிய கயிற்றை இறக்கி கீழே கொண்டு வந்தனர் எனது இரண்டு கைகளும் இணைத்துக்கட்டப்பட்டன கப்பியில் கட்டப்பட்ட கயிறு இழுக்கப்பட்டது நான் கை மேலே இருக்க தொங்கியபடி மேலே சென்றேன். அங்கு நின்றவர்களின் கைக்கு எட்டும் தூரத்தில் தொங்டகவிடப்பட்ட எனது உடலில் பலகையால் அங்கும் இங்கும் என அடித்தனர். �வவுனியா பஸ் நிலையத்தில் பிரபாகரனுடன் நீ கதைத்துக் கொண்டிருந்ததை பார்த்தவர்கள் இப்போது வந்து உண்மையைச் சொல்வதற்கு முன் நீ உனக்கு தெரிந்தவைகளைச் சொல்லவிடு என்றனர் �என்க்குத் தெரிந்தால்தானே சொல்வதற்க்கு� என்று நான் குழறினேன். மீண்டும் தடிகளால் காலிலும் உடலிலும் அடித்தவிட்டு இன்னும் மேலே இழுத்துத் தொங்கவிட்டுசென்றனர்; நீண்ட நேரம் அப்படிக் கயிற்றில் உடல் நோகக்காயங்களுடன் தொங்க உயிரே போவது போல் இருந்தது தோள் ழூட்டுகள் விலகுவது போல பெரும் வேதனையாக இருந்தன. கத்தி குளறிக்கொண்டே இருந்தேன் உடலின் பாரமெல்லாம் கைகளிலும் தோள்மூட்டுகளாலும் தாங்குவது எவ்வளவு கடினம். காலை நிலத்தல் முட்டாது அந்தரத்தில் தொங்க விட்டிருந்தனர் இப்படி நீண்டநேரம் தொங்கவிட்டனர் இரவு பதினொருமணிக்கு மேல் இறக்கினர். ஒரு அறைக்கு அழைத்துச்சென்றனர்; �இங்கே போய்த்தூங்கடா� என்றனர். உள்ளே ஆடு மாடு அடைத்ததைத் போல் ஏராளாமான இளைஞர்கள் படுத்திருந்ததைப் பார்த்தேன். நீட்டாக சுவர் அருகுடன் ஒரு கை மட்டும் இணைக்கப்பட்ட இரும்புக் குழாயில் இளைஞர்களின் கை விலங்குகளால் பிணைக்கப்பட்டிருந்தது. அவர்கள் தூங்கிக்கொண்டிரப்பதை பார்க்கப் பரிதாபமாக இருந்தது. நல்ல வேளை அன்று கையை இணைக்காமல் போய் அங்கு அகப்பட்ட சிறிய மூலையில் நான் முனகியபடி மடங்கிக் கொண்டேன் இரவெல்லாம் நித்திரையே இல்லை தாங்க முடியாத வேதனையாக இருந்தது


kalam@tamilbook.com

Series Navigation

செல்வம்- அருளானந்தம்

செல்வம்- அருளானந்தம்