9. வலைத்தளங்களில் தானிறங்கி எழுத்துருக்களை(Dynamic Fonts) அமைப்பதற்கு காரணம் என்ன ? அதனை எவ்வாறு அமைப்பது ?
சாதாரனமாக ஆங்கிலம் இல்லாத வேறு ஒரு எழுத்து வடிவத்தில் எழுதப்பட்டுள்ள பக்கங்களைப் படிப்பதற்கு அந்த எழுத்துருக்களுக்கான கோப்புகள்(font files) நமது (விண்டோஸ் விணைக்கலனில்)விண்டோஸ் கோப்பகத்தில்(directory) உள்ள பான்ட்ஸ்(fonts) என்னும் கோப்பகத்தில் சேமித்துவைக்கப் பட்டிருக்கவேண்டும்.
அவ்வாறு சேமிக்கப்படாவிடில் நாம் அந்தப்பக்கங்களை அதனுடைய எழுத்துவடிவங்களில் காண முடியாது அவ்வெழுத்துக்களுக்குப்பதிலாக நாம் சில குறிகளுடன் கூடிய எழுத்துவடிவத்தைத்தான் திரையில் காணமுடியும். அதனை படித்துப் புரிந்துகொள்ளவும் முடியாது.
பொதுவாக கணினி பற்றிய அறிவு இல்லாதவர்கள் இணையத்தைப்பயன்படுத்துவது சுலபம். அவர், எப்படி தனது கணினியை இணையத்துடன் இணைப்பது. அதிலிருந்து எப்படி விடுவித்துக்கொள்வது என்பதை மட்டும் தெரிந்துகொண்டால் போதும். அதன்பின் எளிதாக சுட்டியை இயக்கி பக்கங்களைப் புரட்டத் தானாகவே தெரிந்துகொள்வார்.
ஆனால் அவர் சில பிற மொழி வலைத்தளங்களை அந்த அந்த எழுத்துருவத்தில் பார்க்க விரும்பும் போதுதான் சிக்கல் ஆரம்பிக்கிறது. என்ன சிக்கல் ?
அவருக்கு எப்படி அந்த எழுத்துரு கோப்புகளை அப்பக்கங்களில் இருந்து இறக்கி, தன்னுடைய கணினியில் ஏற்றி பின்பு அந்த வலைத்தளத்தின் பக்கங்களை மீண்டும் அழைத்துப்பார்ப்பது என்பது சிக்கலான வேலையே. ஆக இந்த பிரச்சனையே இல்லாமல், எழுத்துருக்களைத்தானாக பக்கங்களுடன் கூடவே சேர்ந்து வந்துவிடும் படி செய்துவிட்டால் அனைவரும் எளிதாக அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளளாமே! எளிமைக்கும், விரைவுக்கும் தான் நாம் கணினியை உபயோகிக்கின்றோம் என்றால் அவற்றில் தவறேதும் உளதோ ?
அத்தகைய தானிறங்கி எழுத்துருக்களை அமைப்பது எப்படி ?
மிக எளிது. இதற்கு முதலில் Typograph Softwares என்னும் எழுத்துருக்கி(நானே உறுவாக்கிய வார்த்தை வேறு ஏதேனும் வார்த்தை இருந்தால் தவறுசெய்ததற்கு மன்னிக்க) செயலிகள் நமக்கு வேண்டும் இத்தகைய எழுத்துருக்கிச்செயலிகளை நாம் இணையத்தில் பணம் கொடுத்து இறக்கிக்கொள்ளலாம் (எழுத்துருக்கிகளை இறக்கிக்கொள்ள http://www.hexmac.com/) இத்தகைய எழுத்துருக்கி செயலிகளில், நாம் வடிவமைத்துள்ள வலைப்பக்க கோப்புகளையும், அதற்கான எழுத்துருக்கோப்புகளையும் தந்தால் அது அவற்றை ஒன்றாக இனைத்து சில மாற்றங்களைச்செய்து Font Definition file என்னும் கோப்பு ஒன்றை உருவாக்கித்தரும்.
இந்த Font Definition file (எழுத்துருவிளக்கக் கோப்பு) என்னும் கோப்பில் எவ்வாறு இந்த எழுத்துருக்களை உபயோகிப்பது என்பதை எழுதிவைத்துவிடும். அதன்பிறகு நீங்கள் இந்த Font Definition file ஐ வலைத்தளத்தில் போட்டுவிட்டு உங்களுடைய் ஒவ்வொரு வலைப்பக்கத்தில் இருந்தும் அதற்கு ஒரு இனைப்புசெய்துவிட வேண்டும். இவ்வாறு செய்து விட்டால் நாம் வலைப்பக்கங்களை நமது கணினியில் இறக்கும்போது எப்படி வலைத்தளக்கணினியில் சேமித்துள்ள படங்களை நமது கணினிக்கு கொண்டுவருகிறதோ அதுபோல அங்கு உள்ள எழுத்துருக்கோப்பை பயன்படுத்தும் முறையையும் அவ்வடிவங்களை அமைப்பதற்கான நுனுக்கங்களையும் அந்தந்த பக்கங்களுடன் கொண்டுவந்து நமது திரையில் காட்டும். எனவேநாம் அந்த எழுத்துருவக்கோப்புகளை நமது கணினியில் சேமித்துவைக்கவேண்டிய அவசியம் இல்லை என்றாகிவிடுகிறது.
இதற்கு உங்களது உலவி(மேய்ப்பானும்)யும் உதவியாக இருக்கவேண்டும். இது புதிய வெளியீடுகளில் மட்டுமே செய்யப்படக்கூடிய ஒன்று. (எடு. Internet Explorer 4 க்கு மேல், Netscape Navigator 4.0 க்கு மேல்) நமது மேய்ப்பானில் அதுவும் Netscape Navigatorல் Font settingல் போய் அங்கு ‘Use Document specific font including Dynamic fonts ‘ என்னும் optionஐ தேர்வுசெய்யவேண்டும். ஆனால் Internet Explorarல் அதுபோன்று செய்யத்தேவையில்லை.
என்ன நண்பர்களே! நீங்களும் எழுத்துருக்கிச்செயலிகளைத் தேடிப்போய்விட்டார்களா ?
திண்ணை
|