புதுவை ஞானம்
ஏற்கனவே தமிழ் எண்கள், அளவைகள் பகுதி 1-ல் கணக்கதிகாரத்தின் சில பாடல்களைக் கொடுத்திருக்கிறேன் அல்லவா ? இப்படிப்பட்ட நுட்பமான அளவைகள் எதற்காகப் பயன் படுத்தப் பட்டன ? பயன்பாடே இல்லாமல் இருந்திருந்தால் அவை பற்றிய வாய்ப்பாடுகள் எதற்காக எழுதப்பட்டன ? என்று ஆராய்கையில் பட்ட சிரமங்களைச் சொல்லி மாளாது.
எல்லாரையும் போல் எண்- அளவைகளைக் குறிக்கும் சொற்களை அகராதிகள் நிகண்டுகள் இவைகளில் தேடி சில விவரங்கள் அரை குறையாகக் கிடைத்த போதிலும் அவை வெற்றுச் சொற்களாகவே என் மர மண்டைக்குத் தோன்றியது.இந்தக் குழப்பத்திற்கு இடையில் ஒரு மின்னல் கீற்றென ஒரு பரிச்சயமான சொல் பளீரீட்டது அதுவே ‘அதிசாரம்’ என்ற சொல்.ஒரளவு சோதிட ஈடுபாடு இருந்ததால் மட்டுமே அந்த சொல் என் புத்திக்கு எட்டியது. இல்லையென்றால் ‘பராஸ்பத்தர் ‘ கிழவன் போல் வாழ்நாள் முழுவதும் இரும்பைப் பொன்னாக்கும் அற்புதக் கல்லைத் தேடி உரசிப்பார்த்த இரும்பாணி பொன்னாகி விட்டது தெரியாமல் அற்புதக்கல்லை ஆற்றில் எறிந்திருப்பேன்.
குரு எனப்படும் வியாழன் ஒரு கிரகம் என்பதும் அது ஒரு வருட காலம் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் என்பதும் பொதுவாக பலருக்கும் தெரியும்.அது மீன ராசிக்கு வரும் போது அதிசாரம் பெற்று ஒரு வருடம் முடியுமுன்னே மேட ராசிக்குச் சென்று விட்டது என்று எனது நண்பரான சோதிடர் ஒரு முறை சொன்னது நினவுக்கு வந்ததால் இந்த அதிசாரம் என்ற சொல் மனதில் பதிந்து இருந்த போதிலும் அது பற்றி மேற்கொண்டு விவரங்களை நான் தேடியது இல்லை.ஆனால் அதிர்ஷ்ட வசமாக கணக்கதிகாரத்தின் “ஆனாதி சாரம் நாற்பஞ்சதே சாரமாகும் ” எனத்தொடங்கும் பாடல் வரியைத் தொடர்ந்தோடியதில் மேலும் பல தவல்கள் கிடைத்தன.இது சோதிடத்தில் பயன்படுத்தப் படுகிறது என்பதையும் அது பற்றி நமக்கிருக்கும் மூடநம்பிக்கைகள் பற்றியும் எழுதினேன். இதனை ஒருவர் ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.சோதிடம் என்பதற்கும், முந்தையது வானவியல் இது பற்றித் தமிழர்களுக்கு நிறையத் தெரிந்திருக்கிறது.
COMPUS எனும் திசைக்காட்டிக் கருவி கண்டு பிடிப்பதற்கு வெகு காலம் முன்பிருந்தே தமிழர்கள் மிகவும் பிரபலமான கடலோடிகளாக வணிகர்களாக இருந்து கலங்களை உருவாக்கி உலகம் முழுவதும் சென்று பண்ட மாற்றம் செய்து வந்தனர். அவர்களுக்கு கடல் தாய் போன்றவள்.எப்படி எந்த மரத்தில் கப்பல் கட்டுவது ? அதன் பாய்களில் எத்தனை விதம் ? பாய்கள் எவ்வாறு அமைப்பது ? காற்றின் போக்கும் வேகமும் என்ன ? திக்குத் தெரியாத நடுக்கடலில் திசை காண்பது எப்படி ? எப்போது புயல் வரும் ? எங்கெங்கே சுழல்களும் நீரோங்களும் உள்ளன ? எங்கிருந்து எந்த நட்சத்திரத்தில் கிளம்பினால் எப்போது எங்கு சென்றடைய முடியும் ? எங்கெங்கு நல்ல குடி நீர் கிடைக்கும் ? எத்தனை நாள் பயணத்துக்குப் பிறகு எந்த தீவினை அடையலாம் ? என்பதனைத்தையும் வானவியல் துணை கொண்டு தான் கண்டு பிடித்தனர்.
கப்பல் சாத்திரம், நாவாய் சாத்திரம் என்றெல்லாம் ஒலைச் சவடிகள் நூலாக வெளி வந்துள்ளன. இவை பற்றியும் எழுத வேண்டும். இதற்கிடையில் நீங்கள் ” 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் ” என்ற திரு.கனசபைப் பிள்ளை அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பன்மொழிப்புலவர் அப்பதுரைப் பிள்ளை அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட நூலைத் தேடிப் படித்து விடுங்கள்.அவிநந்த மாலை,அரச சட்டம் வருத்தமானம் ஆகியன கணிதம் பற்றிய நூல்கள் எனவும் ” எண் இரண்டு வகைய கணிதமும் காரணமும்….. அவற்றுட் கணிதமாவன பதினாறு வரி கருமமும், ஆறுகலச வருணமும்,இரண்டு பிரகரணச்சாதியும் சத குப்பையும் ஐங்குப்பையும் என்றிப் பரிகருமமும்,மிச்சிரகமு முதலாகிய எட்டதிகாரம்.அவை அவிநந்த மாலையும் அரச சட்டமும் வருத்த மானமும் முதலியவற்றில் காண்க.” எனவும் ‘மறைந்து போன தமிழ் நூல்கள்’ என்ற தனது நூலில்(பக்.140 )திரு. மயிலை சீனிவேங்கடசாமி குறிப்பிடுவதும் ஆய்வுக்குறியது.
பல புதிய நோய்களையும் அதற்கான மருந்துகளையும் கண்டு பிடித்து அறிவியல் சாதனை புரிவதாகப் பீற்றிக் கொள்ளும் மேலை அறிவியல், போதைப் பொருளை ஒழிக்க படையெடுப்புகளை எடுக்கும் மேற்கத்திய அரசுகள் தான் அபின் என்னும் போதைப்பொருளை இந்தியாவில் எராளமாக உற்பத்தி செய்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்ததும் அதே சமயம் இந்திய மருத்துவம் காயகல்பம் செய்து நோய் மனிதனை அழிக்கா வண்ணம் இருக்க ஆய்வு செய்ததும், நாளந்தா, தட்சசீலா பல்கலைக் கழகங்களில் ஏராளமான வெளி நாட்டவர்கள் வந்து படித்துச் சென்றதும் , குறிப்பாக புத்த பிட்சுக்களான தருமசேனர் போன்றோர் சித்த மருத்துவத்தை சீனாவுக்கு கொண்டு சென்றதும் இன்னமும் கூட மூலிகை மருத்துவத்தில் சீனா உலகில் முதலிடம் வகிப்பதும் இந்திய நாகரிகத்தின் கொடை என்பதனை மறந்து விடாதீர்கள்.
நான் ஏற்கனவே மேற்கோள் காட்டியுள்ள கணக்கதிகாரப் பாடல்கள் SPACE- TIME- DISTANCE எனப்படும் அடிப்படை அலகுகள் பற்றிப் பேசுகின்றன.ஒரு நாள் என்பது 24 மணி நேரம்–60 நாழிகை, ஒரு மணி என்பது 60 நிடங்கள், ஒரு நிமிடத்துக்கு 60 வினாடிகள் என்பது நமக்குத் தெரியும்.நாழிகைக்குக் கீழே உள்ள நுட்பமான அளவைகள் தரப்பட்டிருப்பதை எண்கள்- அளவைகளில் பாருங்கள்.இவை நாம் அன்றாடம் பயன் படுத்தும் கால அளவைகள் அல்ல. அதே போல் வாரம், மாதம், ஆண்டு ,நூற்றாண்டு என நாம் பயன் படுத்தும் கால அளவைகளுக்குள் பெரியதான கல்பம், யுகம் போன்ற மீப்பெரிய MEGA UNITS தரப்பட்டுள்ளதைப் பாருங்கள்.இவை எல்லாம் வானவியலில் பயன் படுத்தப் பட்ட SPACE TIME எனப்படும் புவி ஈர்ப்பு விசை தாண்டிய கால அளவை
குறிப்பவை.நவீன அறிவியலாளர் LIGHT YEAR என்றெல்லாம் பேசுகிறார்கள் அல்லவா ? இவை பற்றியெல்லாம் அக்காலத் தமிழர்கள் எழுத வேண்டி வந்ததும் தற்காலத் தமிழர்களாகிய நமக்கு அவை விளங்காமல் போனதும் காலத்தின் கோலம். எனினும் ஆய்வு செய்தேயாக வேண்டும்.
அப்படி ஆய்வு செய்தால் நம்மிடையே ஒரு ஜோசப் நீதாம் உருவாகவில்லை என்றாலும் கூட சீன அரசாங்கம் வெளியிட்டுள்ள ANCIENT CHINA’S TECHNOLOGY AND SCIENCE ( FOREIGN LANGUAGE PRESS- BEIJING ) போன்றதொரு சிறிய நூலையாவது தமிழக அரசு வெளியிடக்கூடிய சாத்தியத்தை உருவாக்கலாம்.அப்படி வெளியிடுவதற்கான பல உதவிகளை தமிழக அரசால் செய்ய இயலும். தக்க அறிஞர்கள் இது பற்றி முயற்சி எடுக்க வேண்டும் மொத்த உலகத் தமிழர்களும் ஆதரவுக் குரல் எழுப்ப வேண்டும்.வெளி நாட்டுப் பல்கலைக் கழகங்களில் உள்ள தமிழ்த்துறை அறிஞர்கள் இதில் கவனம் செலுத்துவது நல்லது.
இப்படியாக ASTRONOMY எனப்படும் வானவியல் அறிவு, காலத்தையும் பருவகால சுழற்சிகள் இயற்கைச் சீற்றங்கள் வெளிப்படும் முறைகள் பாதுகாப்பான வாழ்வு என்பன போன்ற TERRESTRIAL என்ற நிலம்- பூமி அல்லது புவி சார்ந்த வாழ்க்கைக்கும் ASTROLOGYஎன்னும் சோதிடம் CELESTIAL எனப்படும் புவிக்கோளத்துக்கு அப்பாற்பட்ட ஆன்மீகத்தேடலுக்கும் அண்டகோளவியல் எனப்படும் COSMOLOGY உடன் தொடர்புஉடையதாகவும் தோன்றுகிறது .ஏற்கனவே ஒரு கட்டுரையில் ANTHROPOGENISIS என்பது பற்றியும் COSMOGENISIS என்பது பற்றியும் SECRET DOCTRINE பேசுவது பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறேன் மனித இனம் HOMOSAPIENS சிந்திக்கும் இனம் என்பதால் உண்டும் உறங்கியும் புணர்ந்தும் இனவிருத்தி செய்தும் அலுத்துப்போய் புவிக்கு அப்பால் என்னவெல்லாம் இருக்கும் என சிந்தித்து இருக்கும் போலிருக்கிறது. இந்தத் தேடல் இட்டுப்போன இடங்களுக்கு எல்லாம் உங்களையும் இழுத்துப் போக நான் விரும்பவில்லை. தன்னைப் பற்றியும் தான் வாழும் உலகைப் பற்றியும் தெரிந்து கொள்வது தான் அறிவியல். அறிவியலின் மொழி என்ன தெரியுமா ? கணிதம் ! கணிதம் !! எனவே, தாம் கண்டு பிடித்ததை ஊகித்ததை எல்லாமும் கணித வாயிலாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இன்று சோதிடத்தில் நாம் அறியும் நவ கோள்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களில் ராகுவும் கேதுவும் ஏதோ பிற்காலத்தில் சேர்க்கப் பட்டன போலும்.மற்ற ஏழு கிரகங்கள் சூரியனைச் சுற்றி நீள்வட்டப்பாதையில் சுற்றுவதும் அவை தம்மைத்தாமே சுழற்றிக்கொள்வதும் பண்டைய மற்றும் நவீன வானவியலாளருக்குத் தெரியும். இந்த சூரியன்,சந்திரன்,செவ்வாய், புதன், வியாழன்,வெள்ளி, சனி ஆகிய ஏழுகிரகங்கள் மீனம் , மேடம்,ரிஷபம் மிதுனம்,கடகம்,சிம்மம், கன்னி,துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய பன்னிரண்டு ராசிகளில் சஞ்சரிக்கின்றன என்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை ஆட்சியும் செய்கின்றன. இவற்றுள் சூரியனுக்கு சிம்மராசி ,சந்திரனுக்கு கடக ராசி எனும் ஒவ்வொரு வீடு மட்டும் சொந்தமாக ஏனைய கிரகங்களுக்கு இரண்டு இரண்டு வீடுகள் சொந்தம்.
ஏன் இப்படி ஓரவஞ்சனை ? மேஷம்- விருச்சிகம் செவ்வாய் வீடு ரிஷபம்-துலாம் சுக்கிரன் வீடு , மிதுனம்-கன்னி புதன் வீடு, தனுசு- மீனம் வியாழன் வீடு, மகரம்-கும்பம் சனி வீடு. கடகத்துக்கும் மகரத்க்கும் ஒரு கோடு இழுத்தால் ANTI CLOCK WISE கடகமாகிய சந்திரன் தொடங்க மிதுனம்-புதன், ரிஷபம்-சுக்கிரன், மேஷம்-செவ்வாய், மீனம்-குரு ,கும்பம்-சனி அதே போல் சிம்மத்திலிருந்து CLOCK WISE கன்னி -புதன், துலாம்- சுக்கிரன்,விருச்சிகம்-செவ்வாய்,தனுசு-குரு, மகரம்-சனி என வருகிறது அல்லவா ? சூரியன் தை மாதம் மகரம் -சனி தொடங்கி ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் சஞ்சரிக்கையில் ஒருவரிசைக்
கிரமமாக இவற்றின் அமைப்பு மேலும் கீழும் ஒரே மாதிரி இருக்கும். அதாவது பழைய காலத்து சாவி கொடுத்தால் ஒடும் கடிகாரத்தின் FLYWHEEL போல் வலமும் இடமும் ஆக ஆடிக்கொண்டு இருப்பது தெரிய வரும். கிரகங்கள் செக்கு மாடு மாதிரி சுற்றி வருவதில்லை.கடகத்தில் இருந்து கன்னியில் குதிப்பதும் சிம்மத்தில் இருந்து கடகத்துக்குப் புரளுதலும் சிம்மத்திலிருந்து மிதுனம் தாண்டுதல் குக்குடம், மண்டூகம்,சிங்காவலோகன கதி ,தவளைக் கதி எனவெல்லாம் இந்த FLY WHEEL போல ஆடுதல் பற்றிய கணக்குகள் மிக மிக நுட்பமானவை மட்டுமல்ல மிகவும் அறிவியல் பூர்வமானவை.
இவை பற்றிய கணக்குகள் பூடகமாக மறைத்து வைக்கப்பட்டுள்ளன. ” அந்தாதி மீது சூட்டென்றேற்கை ” என ஒரு பாடல் வரி. காலச் சக்கரம் என்ற தமிழ் நூலில் வருகிறது. இதை எழுதியவர் தில்லை நாயகம். இந்த வரியில் ஒற்றுகளை நீக்கி உயிர் உயிர் மெய் எழுத்துக்களை அவ்வவ்வருக்கத்தின் முதலிலிருந்து எண்ணி அவற்றுக்கான எண் குறிக்க வேண்டும்.
அ=1,தா=2 ,தி=3மீ,ம=4, து=5 சூ=6 டெ= 7 றே=8, கை= 9 இதனை 7+16+9+21+5+9+16+7+10 ஆக மொத்தம் 100.றோரு பாடல் வரியானது “பொற்போல் வெளவேய் பெற்றூர் நீடுதி ” என்பதாம். இதனை பொ =10 ,போ =11 , வெள =12 ,வே =8 ,பெ =7 ,றூ =6 ,நீ =4 , டு =5 , தி =3 இவற்றை 4+4+10+7+16+9+21+5+9 எனக்கூட்டினால் 85 ஆகும். “தான மெளவ்வோர் தொல்லைவராகி ” என்பது மற்றொரு பாடல் வரி.இதனை தா =2, ந =1 ,மெள =12,வோ =11 ,தொ =10, லை=9, வ=1,ர=2, கி=3 என்வாக 16+7+10+4+4=10+7+16+9 ஆக 83 இப்படியெல்லாம் செய்யப்பட்ட கணக்குகள் உள்ளன. சலிப்பாக இருக்கிறதா ? நம் வாழ்க்கையைப்
புரிந்து கொள்வதை விடவா ? ஓரு எடுத்துக் காட்டு மட்டுமே காட்டி இருக்கிறேன் ! நம் கணிதத்தின் மேன்மை அல்புரூனி என்ற-பாரசீக பிரஜைக்கு தெரிந்த அளவில் லட்சத்தில் ஒரு பங்கு எனக்குத்தெரியாது.இது பற்றி யாருக்காவது தெரிந்து கொள்ள விருப்பம் இருந்தால் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தை அணுகவும்.
அது மட்டுமா எல்லா ராசிகளுக்கும் 360 பாகை (Degree) க¨ளை சமமாகப் பங்கிட்டு ஒவ்வொன்றுக்கும் 30 பாகை அல்ல.ஒரு நாளின் 24 மணியை இரண்டு இரண்டு மணி நேரம் சூரியன் ஒரு ராசியில் சஞ்சரிப்பதில்லை.ஒவ்வொரு ராசிக்கும் கால வேறுபாடு உண்டு. மிக நுட்பமான கணக்குகள் இவை.
” What in fact, is mathematical discovery ? It does not consist in making new cobinations with mathematical
entities that are already known. That can be done by anyone , and the combinations that could be so formed
would be infinite in number , and the greater part of them would be absolutely devoid of interest. discovery
consists precisely in not constructing useless combinations , but in constructing those that are useful ,
which are an infinitely small minority. Discovery is dicer nment ,selection. ( p13)
Now we have seen that mathematical work is not a simple mechanical work, and that it could not be
entrusted to any machine, whatever degree of perfection we suppose it to have been brought to. It is not
merely a question of applying certain rules, of manufacturing as many combinations as possible according to
certain fixed laws.The cobinations so obtained would be extremely numerous, use less avd encumbering.
The real work of the discoverer consists in choosing between these combinations with aview to eliminating
those that are useless , or rather not giving himself the trouble of making them at all.the rules which must
guide this choice are extreemly subtle and delicate, and it is practically impoossible to state them in
precise language ; they must be felt rather than fomulated. Under these contions, how can we imagine
a sieve capable of applying them mechanically ? ( From Henri Poincare -Science and Method.)
கற்பம் 47 கொண்டது புற்புதம் 47*41=1927
புற்புதம் 41 கொண்டது புணரி 1927*37=71299
புணரி 37 கொண்டது பற்பம் 71299*33=2352867
பற்பம் 33 கொண்டது பனிச் சங்கம் 2352867*31=72938877
பனிச்சங்கம் 31 கொண்டது தாய் 72938877*29=2115227433
தாய் 29 கொண்டது தந்தை 2115227433*27=57111140691
தந்தை 27 கொண்டது தனிவருக்கம் 57111140691*23=1313556235893
தனி வருக்கம் 23 கொண்டது முத்தொகை 1313556235893*19=24957568481967
முத்தொகை 19 கொண்டது பந்தம் 24957568481967*17=424278664193439
பந்தம் 17 கொண்டது சின்னம் 424278664193439*15=6364179962901585
சின்னம் 15 கொண்டது குணம் 6364179962901585*3=19092539888704755
குணம் 3 கொண்டது சிந்தை 19092539888704755*13=248203018553161815
சிந்தை 13 கொண்டது கும்மி 248203018553161815*11=35493031653102139545
கும்மி 11 கொண்டது இம்மி 35493031653102139545*21=745353664715144930445
இம்மி 21 கொண்டது அணு.
இம்மி 21 கொண்டது அணு என வருகிறது அல்லவா ?
அமரர் தேவநேயப் பாவாணர் இம்மி 11 கொண்டது மும்மி எனவும் மும்மி 7 கொண்டது அணு எனவும்
குறிப்பிடுவது ஆராய்ச்சிக்கு உரியது.அவர் கணக்கதிகாரத்தை சுட்டிக் காட்டுகிறாரா அல்லது அவருக்கு வேறு
ஆதாரம் எதாவது கிடைத்திருக்குமா ?எது எப்படி இருந்தாலும் ‘பதார்த்த சாரம்’என்பதை ESSENCE OF MATTER
எனக் கொண்டால் இந்தப் பிரபஞ்சத்தின் மூலக்கூறுகள் பற்றியே இவை கணக்கிட்டுப் பார்க்கின்றன எனவே
தோன்றுகிறது.
MATTER was only energy vibrating at a certain level and in the beginning matter existed only in its simplest
VIBRATORY FORM the element we call HYDROGEN.THAT’S ALL THERE WAS IN YHE UNIVERSE,
JUST HYDROGEN. THE HYDROGEN ATOMS BEGIN TO GRAVITATE TOGETHER AS IF
THE RULING PRINCIPLE ,the urge , of energy was to begin a movement in to more
complex state .And when pockets of this hydrogen reached a sufficient density ,it began
to heat up and to burn ,to become what we call a star, and in this burning the hydrogen fused
together and leaped in to next higher vibration ,the element we call helium.
THE FIRST STARS AGED and finally blew themselves up and spewed the remaining
hydrogen and newly created helium out in to the universe. And the whole process began
again.The hydrogen and helium gravitated together until the temperature be came hot enough
for new stars to form and that in turn fused the helium together ,creating the element lithium,
which vibrated at the next higher level. And so on ஸ each successive generation of stars creating matter
that had not existed before, until the wide spectrum of matter – the basic chemical elements – had been
formed and scattered everywhere. Matter had evolved from the element hydrogen, the simplest vibration of
energy, to carbon, which vibrated at an extremely high rate. The stage was now set for the next step in
evolution.
As our sun formed, pockets of matter fell into orbit around it, and one of them, the Earth, contained carbon.
As the Earth cooled, gases once caught in the molten mass migrated to the surface an merged together
forming water vapor, and the great rains came, forming oceans on the then barren crust. Then when water
of the Earth’s surface, the skies cleared and the sun, burning brightly, bathed the new world with light and
heat and radiation. And in the shallow pools and basins, amid the great lightening storms that periodically
swept the planet, matter leaped past the vibratory level of carbon to an even more complex state: to the
vibration represented by the amino acids. But for the first time, this new level of vibration was not stable
in and of itself. Matter had to continually absorb other matter into itself in order to sustain its vibration.
It had to eat. Life, the new thrust of evolution, had emerged. Still restricted to living only in water, I saw
this life split into two distinct forms. One form – the one we call plants – lived on inorganic matter, and
turned these elements into food by utilizing carbon dioxide from the early atmosphere. As a by-product,
plants released free oxygen into the world for the first time. Plant life spread quickly through the oceans
and finally onto the land as well. The other form – what we call animals – absorbed only organic life to
sustain their vibration. As I watched, the animals filled the oceans in the great age of fishes, and when
the plants had released enough oxygen into the atmosphere, began their own trek toward land.
I saw the amphibians – half fish, half something new – leave the water for the first time and use lungs
to breath the new air. Then matter leaped forward again into reptiles and covered the Earth in the
great period or the dinosaurs. Then the warm-blooded mammals came and likewise covered the Earth,
and I realized that each emerging species represented life – matter – moving into its next higher vibration.
Finally, the progression ended. There at the pinnacle stood humankind.
தமிழர் கணிதத்தின் ஆழமான பகுதிகளுக்குச் சென்றால் இணைய தளத்தின் வாசகர்களுக்கு படிப்பதற்கான பொறுமையும் நேரமும் இருக்குமா என்ற ஐயப்பாடு எனக்கு இருக்கிறது.எதிர்காலத்தில் நூலாக வெளிவந்தால் நிதானமாக ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் படிக்கமுடியும் என்பதோடு தமிழ் எண் வடிவம் NUMERALS கொண்ட மென்பொருள் எதாவது உள்ளதா ? அப்படி இல்லாத பட்சத்தில் இந்தோ அராபிய எண் எனப்படும் நாம் தற்போது பயன் படுத்தும் அந்த எண் வடிவத்தில் அந்தக் கணக்குகளைத் தருவதால் அதன் சிறப்பு சிதைபடுமோ என்ற ஐயமும் எழுகிறது.எடுத்துக் காட்டாக ஜோசப்செவர்கீஸ் தனது NON EUROPEAN ROOTS OF MATHEMATICS என்ற தனது நூலில் மலையாள எண் வடிவத்தைப் பயன் படுத்தி இருந்தால் என்னால் அதைப் படித்திருக்க முடியுமா ? இப்படிப்பட்ட ஐயப்பாடுகளுக்கு இடையில் சில வேடிக்கைக் கணக்குகளை மட்டுமாவது உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் அல்லவா என்ற சிந்தனைப் போக்கில் உங்கள் முன் வைக்கிறேன்.
கணிதம் படித்தவர்கள் இந்தக் கணக்குகளுக்கான சமன்பாட்டினை EQUATIONS திண்ணைக்கு எழுதி அனுப்ப வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக பல நண்பர்கள், என்க்குப் பரிச்சயமான பேராசிரியர்கள், பொறியியல் வல்லுனர்கள் ஆகியோரைக் கேட்டுப் பார்த்து இதற்கான விடிவு காலம் பிறக்கவில்லை என்பது வேதனையாக இருக்கிறது. ஒரு SENSE OF PARTICIPATION விளையாட்டில் பங்கேற்கும் மன நிலை இல்லாமல் போனது நாம் நமது குழந்தைப் பருவ துருதுருப்பை இழந்து போனதையே காட்டுகிறது .இது நல்லதல்ல !
” ஒருவன் சில பூக்களைப் பறித்து வந்தான். அவற்றை இரண்டு இரண்டாக பிரித்து அடுக்கும் போது ஒரு பூ மீதி வந்தது. மூன்று மூன்றாக பிரித்து அடுக்கும் போது இரண்டு பூக்கள் மீதி வந்தன. நான்கு நான்காகப் பிரித்து அடுக்கும் போது மூன்று பூக்கள் மீதி வந்தன. ஐந்து ஐந்தாகப் பிரித்து அடுக்கும் போது நான்கு பூக்கள் மீதி வந்தன. ஆறு ஆறாகப் பிரித்து அடுக்கும் போது ஐந்து பூக்கள் மீதி வந்தன.ஏழு ஏழாகப் பிரித்து அடுக்கும் போது ஒன்றும் மீதி ஆகவில்லை.அப்படி ஆனால் அவன் பறித்து வந்த பூக்கள் எத்தனை ? ”
இந்தக் கணக்குப் புதிருக்கு விடை சொன்னால் போதாது.அதற்கான சமன்பாட்டினை EQUATION எழுதி அனுப்ப வேண்டும்.
” ஒரு குதிரை ஒரு மணிக்கு 30 மைல் வேகம் ஓடக்கூடியது அதைத் துரத்திக் கொண்டு ஒரு நாய் ஓடுகிறது. அந்த நாயோ முதல் ஒரு மணி நேரத்தில் மணிக்கு ஒரு மைல் வேகத்திலும், இரண்டாம் மணியில் இரண்டு மைல் வேகத்திலும், மூன்றாம் மணியில் மூன்று மைல் வேகத்திலும் ஓடினால் எத்தனை மணி நேரத்தில் குதிரையைச் சென்றடையும் ? ”
————————————–
“ஒரு பல்லி ஒரு மணி நேரத்தில் சுவற்றில் 3 அடிகள் ஏறுகிறது.ஆனால் 2 அடி வழுக்கி விழுந்து விடுகிறது.
சுவற்றின் உயரம் 10 அடி என்றால் பல்லி சுவற்றின் உச்சியை அடைய எவ்வளவு காலம் பிடிக்கும் ? ”
—————————————
” ஒரு அரசனைக் காண்பதற்கு ஒரு முத்து வியாபாரி வந்தான். அவனிடம் 25 வகை முத்துக்கள் இருந்தன. முதல் முத்தின் விலை ஒரு வராகன். இரண்டாவது முத்தின் விலை இரண்டு வராகன்.மூன்றாம் முத்தின் விலை மூன்று வராகன். இப்படியாக …………. 25ஆவது முத்தின் விலை 25 வராகன்.
அரசன் முது வியாபாரியிடம் , தனது ஐந்து மந்திரிகளுக்கும் விலையில் சமமாக வரும் விதத்தில் முத்துக்களைப் பகிர்ந்து தரச் சொன்னான்.
வியாபாரி எப்படிப் பங்கிடுவான் ? ”
இந்தக் கணக்குகள் எனக்கு எவ்வளவோ நூல்கள் கொடுத்து உதவிய நண்பர் முத்தய்யா ராமநாதன் அவர்களின் தந்தையும் எனது சக ஊழியரும், பழம்பெரும் தமிழறிஞருமான தெய்வத்திரு.நாக முத்தையா அவர்களால் வெளியிடப்பட்ட ‘வேடிக்கை கணக்கு’ என்ர நூலில் இருந்து எடுக்கப் பட்டவை. அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
மீண்டும் குழந்தையாவது எளிதான காரியம் அல்ல, ஆகித்தான் பார்க்க முயற்சி செய்யுங்களேன் !
————————————————————————————————————————————-
புதுவை ஞானம்.06:51 PM 6/10/06
- கீதாஞ்சலி (81) கடந்ததின் மீது கவலை!
- கபாலகார சுவாமி கதைப்பாடல் அறிமுகம்
- 500 டாலர் நகைச்சுவை
- SIVANANDA ORPHANAGE IN CHENNAI TAMIL NADU
- சூடேறும் கோளம், மேலேறும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-4
- ஆனந்தவிகடனுக்கு என்ன நேர்ந்தது?
- விரைந்து தமிழினி வாழும்
- வானலையில் நூல் வெளியீடு
- ஜெயந்தி சங்கரின் கதை மாந்தர்கள்
- பெண்ணின் இடம் அல்லது அழியும் பூர்வீக வீடு
- தமிழ் இணைய இதழ்கள் – ஒரு முன்னோட்டம்
- கடித இலக்கியம் – 13
- கலக்… கலக்… கானிஸ்பே
- வண்ணக் கோலங்கள் !
- ஒரு கோரிக்கை
- அல்லாவை மொழியியல் ரீதியாக புரிந்துக் கொள்வது
- கண்ணகியும் ஐயப்பனும்
- கஅபா ஒரு சிறுவிளக்கம்
- மனிதகுல எதிரிகள்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 29
- பெரியபுராணம் – 96 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- மரணத்தை எதிர் கொள்ளுவது பற்றி
- இன்னும் எஞ்சி இருக்கவே இருக்கிறது
- முத்தம் போதும்
- “ஹாங்காங் தமிழ்க் கல்வியின் மேன்மை அதன் தொடர்ச்சியில் இருக்கிறது”
- கணிதம் என்பது அறிவியல் மொழி
- பொய்யை விட அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை
- இணையமில்லா இடைவெளியில் – புஸ்பராஜா, ம்!, புத்தவேடு விகாரம், மும்பாய், ·பனா.
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 6 : யோகியின் பார்வையினூடே வாழ்க்கை
- தமிழ்வழி வாழ்வு மெல்லப் போகும் பொருட்காட்சியகத்துக்கு!
- யு க ங் க ள்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-9)
- க ட வு ளே !