புதுவை ஞானம்
எட்டெட் டரையினெல் லிரட்டித்த லக்கமதை
இட்டமுள மானே இயம்பிடிற் – திட்டமுடன்
இரண்டை அறுகால் பெருக்கும் இலக்கம்
திரண்ட கலப்படுத்திச் செப்பு
.
2*2=4
4*4=16
16*16=256
256*256=65536
65536*65536=429கோடியும்49 லட்சத்து67296(429,49,67296 )
429கோடியே49லட்சத்து67ஆயிரத்து296.
4294967296*429,49,67296=184477,42370,95,50616
184477 மகாகோடியே42370கோடி 95லட்சத்து 50ஆயிரத்து616.
மான் போன்ற கண்ணை உடையவளே இரண்டை அறுகாற் பெருக்க184477 மகாகோடியே42370கோடி 95லட்சத்து 50ஆயிரத்து616
இதனைக் கலப்படுத்த,தனி நெல்லு 360 கொண்டது செவிடு என்றறிந்து, கல நெல்லுக்கு
13 லட்சமும் 82400 என்றறிந்து கூடினது. இதற்கு கூடின நெல்லு 13 லட்சத்து62400 கோடியும் 88 லட்சத்து 95610 கலம், இரண்டு மரக்கால் 7நாழி மூவுழக்கு தனி நெல் 16 என்று சொல்லுவது. கணக்கதிகாரம் பக் 150-151.
2*2 = 4
4*4 = 16
16*16 = 256
256*256 = 65536
65536*65536 = 4294967296
4294967296*4294967296 = 18446744073709551616
இதுவுமது
“எட்டேறு பத்துநா லரையா மற்றிநாமே
இட்டிடங் கொண்டு முதலாக – விட்டிட்டு
இரட்டித்து நெல்லதனை யீங்குதை ஈதென்றார்
முரட்டித்த மூதறிவி னார்.”
“ முரட்டித்த மூதறிவினார்” என்பதை முரட்டு கோபக்கார முனிவர் என்பதாகக் கொள்வோமானால் துருவாசர்,விசுவாமித்திரர் போன்ற யாரையோ குறிக்கும். அல்லது வைரம் பாய்ந்த- SEASONED INTELECTUAL எனவாகும். ஆனால் திரு.பில்கேட்ஸ் ஒரு அமைச்சர் என சொல்கிறார்.
இதுவுமது
எட்டெட்டு அறுபத்தி நாலுசது ரங்கத்தின்
முட்டவிடங் கொன்று முதல் கழிந்து – திட்டமாய்
ஆறுதாங் குழியை அடவுடனே மாறினால்
வீறாகச் சொல்லலா மே.”
“கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கனுக்கும்
மூத்தோரை யில்லா அவைக்களனும் -பார்த்துண்ணும்
தன்மை யிலாளர் அயலிருப்பு (ம்) இம்மூன்றும்
நன்மை பயத்தல் இல” -திரிகடுகம் பாடல் எண்-10
கற்றதூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தாற்
பெற்றதாம் பேதை ஓர் சூத்திரம்” நாலடியார் பாடல் எண் 314.
கணக்காயர் இல்லாத ஊர் தானும் நன்மை அடையாது பிறருக்கும் நன்மை பயக்காது என்று நல்லாதனார் என்னும் புலவர் சொன்னதாக கணக்கதிகாரம் பேசுகிறது. நான் பொதுக்கணிதம் பத்தாம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறேன் விளையாட்டு கணிதம் புரிந்து கொள்ள 21 September 2006உதவுங்கள் என ‘ கணிதம் என்பது அறிவியல் மொழி ‘ கட்டுரை மூலம் விடுத்த வேண்டுகோளுக்கு யாரும் செவிசாய்க்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
நம்ம ஊர் சதுரங்கம் பற்றி Mr.Bill Gates அவர்கள் தனது ROAD AHEAD நூலில் குறிப்பிட்டிருப்பதை ஆங்கில வடிவிலேயே உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன். அவருக்கு எனது நன்றிகள் உரித்தாகுக.
“King shirham of India was so pleased when one of his ministers invented the game of chess that he asked the man to name any reward.
“Your Majesty” said the minister, “I ask that you give me one grain of wheat for the first square of the chess board, two grains for the second square, four grains for the third, and so on, doubling the number if grains each time until all sixty-four squares are accounted for”. The king was moved by the modesty of the request and called for a bag of wheat.
The king asked that the promised grains be counted out onto the chessboard. On the first square of the first row was placed one small grain. On the second square were two specks of wheat. On the third square there were 4, then 8, 16, 32, 64, 128. By square eight at the end of the first row, King Shirham’s supply master had counted out a total of 255 grains.
The king probably registered no concern. May be a little more wheat was on the board than he had expected, but nothing surprising had happened. Assuming it would take one second to count each grain, the counting so far had taken only about four minutes. If one row was done in four minutes, try to guess how long it would take to count out the wheat for all sixty-four squares of the board. Four hours? Four day? Four years?.
By the time the second row was complete, the supply master had worked for about eighteen hours just counting out 65,535 grains. By the end of the third of the eight rows, it took 194 days to count the 16.8 million grains for the twenty-fourth square. And there were still forty empty squares to go.
It is safe to say that the king broke his promise to the minister. The final square would have gotten 18,44,744.073,709,551,615 grains of wheat on the board and required 584 billion years of counting. Current estimates of the age of the earth are around 4.5 billion years. According to most versions of the legend, King Shirham realized at some point in the counting that he had been tricked and had his clever minister beheaded.” ( ROAD AHED)
புதுவை ஞானம் – 21 September 2006
Puthuvai_gnanam@rediffmail.com
mailto:j.p.pandit@gmail.com
- மௌனத்தின் அலறல்
- துண்டு துண்டாக்கப்பட்ட நான்கு பட்சிகளின் உடல்கள்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5, காட்சி:1) ரோமாபுரிக்கு கிளியோபாத்ரா விஜயம்
- கணக்கதிகாரம் பேசும் சதுரங்க செய்திகள்
- உயிர்ப்புள்ள மனமும் மறதிப் பெருவெளியும்
- தாஜ் கவிதைகள்
- இட ஒதுக்கீடு, அரசியல் சட்டம், நீதி மன்றங்கள்: ஒரு கேள்வி பதில்
- பண்டைத் தமிழர்களின் அணு அறிவு – கணிதம் என்பது அறிவியல் மொழி- தூரம்
- கடிதம்
- வாணர்களும் விந்தியமலையும்
- வெங்கலராசன் வரலாற்றை முன்னிறுத்தி ஓர் ஆய்வு
- தந்தைமை என்னும் உணர்வு – “அப்பா”- ஈரானியத் திரைப்பட அனுபவம்
- கடித இலக்கியம் – 28
- காசும் கரியும் !
- National folklore support center
- இஸ்லாம் ஏற்றுக் கொள்ளும் புதுமைகள்!
- கருமையம் நிகழ்ச்சி – தொடரும் முஸ்லிம்களின் அவலங்கள்
- அஞ்சலிக் கூட்டம் – ஏஜே என்னும் பேரறிவாளன்
- அலெக்ஸாண்டர் பாரத மண்ணில் தோல்வியை சந்தித்தான்
- பெண்கள் சந்திப்பு 2006
- மடியில் நெருப்பு – 9
- வைதீஸ்வரனின் கவிதைகள்
- உலக புராணங்கள் ஒரு எளிய பார்வை : புராணங்கள் : என்றும் வாழும் அதி-யதார்த்தம்?
- இலை போட்டாச்சு !
- நேற்று ! இன்று ! நாளை !
- பதஞ்சலியின் சூத்திரங்கள் – 1
- அவலம்
- கீதாஞ்சலி (96) – எனது பிரிவுரை!
- சிந்தனையில் சிலநேரம்
- பெரியபுராணம் — 109 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- பேசும் செய்தி – 5 :: பாஸ்டன் பாலாஜி
- நாலந்தாவின் மரணம் : வரலாற்றின் கண்ணீர்த்துளிகளிலிருந்து..
- இரவில் கனவில் வானவில் – 8
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 8