T.R.பட்டினம்-H.அப்துல் ஹலிம்-துபை
நான் தொடர்ந்து ‘திண்ணை ‘ படிக்கும் வாசகன்.இதில் நண்பர் இஸ்மாயில் அவர்களின் ஆக்கம் (நாகூர் ஹந்திரி) கண்டேன்.பல நெருடல்கள்.இதை அவரை தாக்குவதற்க்கு எழுதவில்லை.புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன். அவரது ஆக்கதில் அவரது நண்பர் ஏதோ தவறான வழியில் போய், பிறகு நேர் வழிக்கு வந்தது போல் எழுதி இருந்தார் .முதலில் ஒன்றை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.நாம் தொடர்ந்து ஒன்றை செய்வதுனாலேயோ,சமுதாயத்தில் தொடர்ந்து செய்யப்பட்டு வருவதுனாலேயோ அது இஸ்லாம் ஆகிவிடாது. ‘இஸ்லாம் மார்க்கம் ‘ என்ற பெயரில் ஒன்று செய்யப்பட்டால்,அது ஒன்று அல்லாஹ் ‘திருகுர்ஆனில் ‘ சொல்லபட்டு இருக்கனும்,அல்லது அவனது திருத்தூதர் நபி(ஸல்) சொன்ன
ஹதீஸாக இருக்கனும்.இல்லையெனில் நபி(ஸல்) அவர்கள் நவின்றது போல் ‘நான் அங்கீகரிக்காத ஒன்று யார் செய்தாலும் அது நிராகரிக்கபடும்.அது பித்அத்(புதுமை).எல்லா பித் அதும் வழிகேடு.எல்லா வழிகேடும் நரகில் கொண்டு சேர்க்கும் ‘ என்பதாக ஆகிவிடும்.மேலும், கப்ருகள் பூசப்படுவதையோ,அதற்கு மேல் கட்டிடம் போல கட்டுவதையோமார்க்கம் தடுக்கிறது.மேலும் கப்ரு செல்லும் பெண்களை நபி(ஸல்) அவர்கள் சபித்ததாக ஹதீஸ் கூறுகிறது.ஆண்கள் கப்ரு சென்று ஜியாரத் செய்யலாம்.ஏனெனில்,கப்ரு ஜியாரத் மெளத்தை ஞாபகப்படுத்தும் என்றார்கள்.ஆனால்,பொது கப்ருஸ்தானில் தான் இந்நிலை பொருந்தும்.தர்ஹாக்களில் நிச்சயம் மெளத்து ஞாபகம் வர வாய்ப்பில்லை.அதுவும் கூடு,சந்தனம் என ஏதும் இஸ்லாத்தில் இல்லை.அவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் நல்லடியார்கள்,இஸ்லாம் மார்க்கம் தழைக்க பாடுபட்டவர்கள். நல்லடியார்கள் யாவரும் கபுருகளில்,புது மாப்பிள்ளை போல
உறங்குவதாக மற்றோர் ஹதிஸ் கூறுகிறது.மேலும், 1400 ஆண்டுகளுக்கு முன்பே, இன்று
இம்மார்க்கம் முழுமை அடைந்தாக திருக்குர் ஆன் கூறுகிறது. ஆக, மார்க்கம் என எது செய்தாலும் திருக்குர் ஆன்,ஹதீஸுடன் உரசிப் பார்த்துதான் செய்யனும்.இப்போது, திருக்
குர்ஆன், புஹாரி,முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூல்களும் தமிழில் வந்து விட்டது.IFT போன்றவை வெளியிட்டு உள்ளன.இவைகளை பார்த்து தெளிந்து,தூய இஸ்லாத்தின் படி வாழ்ந்து இம்மை மற்றும் மறுமையிலும் வெற்றி பெற முயல வேண்டும்.இதை விடுத்து காலங்காலமாக
செய்து வருகிறோம் என நியாயப் படுத்தி மற்றவர்களையும் இது தான் சரி என தவறான
பாதையை காட்ட வேண்டாம்.மற்றபடி தாங்களின் சந்தேகங்களை, மாற்றுக்கருத்துக்கள் தெரிவித்தால் இன்ஷா அல்லாஹ் பதில் தருகிறேன்.
தாங்களின் நலன் விரும்பும்,
T.R.பட்டினம்-H.அப்துல் ஹலிம்-துபை.
halim555@yahoo.com
- கடிதம் ஜூலை 22 , 2004
- மீள்பிறக்கும் உயிர்வளக் கழிவு, எருவாயு எருக்களில் எடுக்கும் எரிசக்தி [Energy from Renewable Biomass & Biogas Fuels]
- தங்கம் மனோரமா – மணிப்பூரில் இந்திய ராணுவத்தினரின் அத்துமீறல்
- தியாகிகளுக்கு கண்ணீருடன் சிரம் தாழ்த்துவோம்
- ஊழலின் சந்நிதியில் 100 நரபலிகள்
- கூரையைப் பிய்க்கும் குரங்குகள்!
- கர்ணனின் மனைவி யார் ?
- மெய்மையின் மயக்கம்-9
- வாழ்வின் புன்னகை இந்தக் கதைகள்
- அறிய விரும்பிய ரகசியம்(எலீ வீசலின் ‘இரவு ‘ -நூல் அறிமுகம்)
- கொடிகள் அறுபடும் காலம்( உமா மகேஸ்வரியின் ‘யாரும் யாருடனும் இல்லை ‘-நாவல் அறிமுகம்)
- அழகும் அதிகாரமும் (காதல் தேவதை-மொழிபெயர்ப்பு நாவல் அறிமுகம்)
- நூறு வருடம் லேட்
- சோமரட்ண திசநாயக்காவின் ‘சின்ன தேவதை ‘ திரைப்படம்
- பூச்சிகளின் காதல்
- உயிர்மை ஓராண்டு நிறைவு விழா – உயிர்மை.காம் துவக்க விழா – ஜூலை 31 , 2004
- மரத்தடி இணையக் குழுமம் நடத்தும் ஆண்டுவிழாப் போட்டிகள்
- தஞ்சை ப்ரகாஷ் நான்காம் ஆண்டு புகழஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா
- கடிதம் ஜூலை 22,2004
- கடிதம் ஜூலை 22, 2004 – கலைந்ததா ‘மவுண்ட் ரோடு மாஒ ‘வின் உறக்கம் ?
- தேர்தல், காந்தி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற
- கடிதம் ஜூலை 22, 2004 – தமிழ் சங்க பேரவை
- கும்பகோணத்தில் தீ விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி : 24-07-04
- கடிதம் ஜூலை 22, 2004 : வஹாபி இயக்கமும் வர்னாஷிரம லோகஸ்டுகளும்
- கடிதம் ஜூலை 22, 2004
- ஆட்டோகிராஃப் ‘வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும் உருளுதடி ‘
- வள்ளுவர் தந்த புதுக்கவிதை (அதி:111)– இன்பத்தின் இன்பம்(3)
- டாக்ஸி டிரைவர்
- அன்புள்ள ஆண்டவனுக்கு
- பொய்யன் நான் பொய்யனேனே!
- பதியப்படாத பதிவுகள்
- அன்புடன் இதயம் – 24 – எழுதக் கூடாத கடிதம்
- ஒரு தமிழனின் பிரார்த்தனை
- பெரிய புராணம்
- கொட்டு
- வேடத்தைக் கிழிப்போம்-3 (தொடர் கவிதை)
- எப்போதும் சூாியனாய்
- காலம் கடந்த காதல் கவிதைகள்
- சுயதரிசனம் (26.01.004)
- தோற்கிறேன் தான்!
- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம் – 29
- கவிதைகள்
- கவிதைகள்
- தீயே நீ தீபம் ஆகமாட்டாய்…
- கும்பகோணம் காட்சிகள் ஜூலை 2004
- இனிப்பானது
- சத்தியின் கவிக்கட்டு 16-நன்றாய்ப் பார்த்துவிடு
- வதங்கள்
- தீக்கொழுந்தாக….
- 16-ஜூலை-04
- சின்னபுள்ள….
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்-4
- அறிவியல் தொழில்நுட்பம்:எதிர்காலத்தில் மனிதனுக்கு இயற்கை மரணமில்லை!