ஓருரன்

This entry is part [part not set] of 33 in the series 20070405_Issue

முனைவர் மு. பழனியப்பன்


.

`யாதும் ஊரே! யாவரும் கேளீர்’ என்பது உலக வாசகம். உலகில் உள்ள எந்த ஊரும் நாம் சென்று சேர்ந்தால் நமது ஊராகும். உலகில் உள்ள அனைத்து மனிதரும் நம் உறவினர் ஆவர். உலக மக்களை உறவினராக்கும் இந்த சங்க இலக்கிய நெறி தமிழரின் பண்பாட்டு நெறியாகும்.
இதன் மறுதலை `அனைவரும் ஓருரில்! அனைவரும் ஓருர் மக்கள்!’ என்பதாகும். அதாவது உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒரே ஊரில் வாழ்கையில் ஊர் பெரிதாகும். ஊருக்குள் உலகம் அடங்கிவிடும். ஊரின் எல்லை விரிந்து கொண்டே போய் ஓருரர் என்ற சிந்தனை ஏற்பட்டு உலகம் என்ற வேறுபட்ட ழல் நீங்கிவிடும்.
இந்த சிந்தனை வெற்றி பெற முடியுமா மனித குலம் ஏன் வேறு வேறு ஊர்களில் வாழ்கிறது. ஓரிடத்தில் தோன்றிய அல்லது பல்வேறு இடங்களில் தோன்றிய மக்கள் ஏன் ஓரிடத்தில் குவியவில்லை. அவரவர் வாய்ப்பக்கு ஏற்றார்போல அப்பா ஓருரில், அம்மா ஓருரில், மகன் ஒரு நாட்டில், மருமகள் வேறு நாட்டில், உறவினர் வேற்று கண்டத்தில், உறவினர் அல்லாதார் பக்கத்துவீட்டில், பக்கத்து நாட்டில், பக்கத்துத் தீவில், பக்கத்து கிரகத்தில் இவரை எல்லாம் ஒருசேரக் காண்பது அவ்வளவ எளிதான செயலா.. அப்படி ஒரே இடத்தில் குவியும் போது இட நெருக்கடி, பண நெருக்கடி, வசதி நெருக்கடி ஏற்படாதா… இப்படிப் பல சிக்கல்களுக்கு ஓருர் என்ற சிந்தனை வழிவகுக்கும்.

ஓருருக்கே இப்படிப் பலசிக்கல்கள் இருக்கையில் ஒருவரே உலகத் தலைவர் என்பதை ஏற்பதில் இன்னும் பல சிக்கல்கள் ஏற்படக் வுடும். அத்தலைவர் எவ்வூரில் இருப்பார்.. அவர் சார்பாக மற்ற ஊர்களில் தலைமை ஏற்பவர் யாவர்..

தமிழ்ச் சைவ மரப `எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !’ என்று சிவனைப் போற்றுகின்றது. இத்தொடர்வழி எந்நாட்டவர்க்கும் உரியவர் சிவபெருமான். அப்படியானால் அச்சிவபெருமான் எவ்வூரினர்.. எல்லா ஊரும் அவர் ஊரா.. அல்லது அவர் இருக்கும் ஊர் எல்லாருக்கும் ஊரா?

கைலாயம் தொடங்கி கேதாரம் பெருகி திருப்பத்தூரிலும் அவன் உறைகிறான் என்றால் அவனின் உண்மையான ஊர் எது.. பல கோயில்கள், தேவாரத்தலங்கள், பீடங்கள் எல்லாவற்றிலும் அவன் உறைகிறான் என்றால் அவனை எங்கு சென்று முபுமையாய்க் காண்பது..
ஒரு கடவள் என்ற நிலையில் எல்லாக் கோயில்களிலும் இருப்பவர் சிவன் என்ற போதிலும் ஒவ்வெரு ஊரிலும் ஒவ்வெரு வடிவம், ஒவ்வெரு தத்துவம்.. பலசமயம், பலகடவள், பலவழிபாடு என்ற ழலில் பல கோயில் என்பது இன்னும் வேறுபாடுகளைப் பல்கிப் பெருகிடச் செய்யும். இவற்றை ஒருங்கு படுத்தி உள்ளொளி பெருக்கிட வழி என்ன..
இதுவரை ஏற்பட்ட கேள்விகளுக்கு பெரியபராணம் பதில் அளிக்கின்றது.
“நிலவம் எண்இல் தலங்களும், நீடுஔ
இலகு தண் தளிர் ஆக, எபுந்தது ஓர்
உலகம் என்னும் ஔமணி வல்லி மேல்
மலரும் வெண்மலர் போல்வது அம்மால் வரை”
(பெரியபராம் 13)

உலகம் என்பது ஒரு உயிருள்ள பூங்கொடி. அந்தப் பூங்கொடியின் தளிர்கள் உலகில் உள்ள சிவ ஆலயங்கள். அந்தத் தளிர்களின் ழலில் நடு நாயகமாக வெள்ளை மலராக வெள்ளிப்பனி மலையான கயிலாய மலை அமைந்துள்ளது என்பது இப்பாடலின் பொருள்.
உலகம் என்ற ஒன்றை இங்குச் சேக்கிழார் ஒரே கொடியாகக் கொண்டிருப்பது உலகை ஒன்றாக்கிச் சுருக்கும் ஓருர்ச்சிந்தனை. அதில் ஆங்காங்கே விளைந்த தளிர்களாக பலநாடுகளில் உள்ள சிவாலயங்கள் உள்ளன. அந்தக் கொடியின் முடியாக விளங்குவது கயிலாயமலை. அடிமுடி உடைய ஒரு கொடி என்ற நிலையில் சிவபெருமானை ஓருரினராக ஓர் மலையராக இப்பாடல் காண்கினறது. அதே நேரத்தில் மற்ற சிவாலயங்களுக்கும் தக்க இடம் தந்துள்ள இந்தச் சேக்கிழாரின் கற்பனை வியப்பினது.
பக்திப் பரட்சி செய்த திருநாவக்கரசர் இந்த ஓருர்ச் சிந்தனையை மேலும் வளப்படுத்தியுள்ளார். ஓருரை இன்னும் நெருக்கமாக்கி ஒரே வீட்டினராகக் கொண்டு பாடல்பாடியுள்ளார்.
“அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்படைய மாமனும் மாமியும் நீ
ஒப்படைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ
துய்ப்பனவம் உய்ப்பனவம் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்து நீ
இறைவன் நீ ஏறு ஊர்ந்த செல்வன் நீயே!”

தந்தை, தாய், தலைவன், மாமன், மாமி, பெண், பொருள், குலம், சுற்றம் அனைத்தும் சிவபெருமான் ஒருவரே என்ற நிலையைப் பெற்றுவிட்டால் உலகம், நாடு, ஊர் ஆகியன வேறுவேறாக முடியாது. ஒருவீடாக, ஆண்டவன் குடியிருக்கும் வீடாக அதில் அவன் அடியார் அனைவரும் ஒரே சொந்தமாக நெருக்கடி இன்றிக் குடியிருக்க முடியும் என்ற ஓரில்லச் சிந்தனை இங்கு வெற்றி பெற்றிருக்கிறது.
துய்ப்பன, உய்ப்பன, தோற்றுதல், காத்தல், நெஞ்சத்துள் நிற்றல் அனைத்துச் செயல்களிலும் இறைவனே நிற்க எச்செயலும் நம் செயலாகாமல் அவன் செயலாகும். பொன், மணி, முத்து எவையும் நம் சொத்தாகாமல் அவன் சொத்தாகும். எல்லாவற்றுக்கும் மேல் அவனே தலைவன், இறைவன் என்ற நிலை கிட்டும்.
ஏறு ஊர்ந்த செல்வனான அச்சிவபெருமான் உலகம் முபுவதும் அவ்வேற்றில் ஏறி பவனி வந்தாலும் அவன் வீடு ஒரே வீடுதான். உலகிலேயே பெரிய வீடு. ஒரே ஊர்தான். உலகிலேயே பெரிய ஊர். ஒரே சொந்தம்தான். உலகிலேயே பெரிய சொந்தம். அது சிவவீடு, அது சிவனூர். அது சிவத் தொண்டர்.
இந்நிலையில் சிவத்தொண்டர்கள் அனைவரும் ஓர் இல்லத்தாராய், ஓருரினராய், ஓர் உறவினராய் ஆவர். அவர்தம் தலைவர் எந்நாட்டவர்க்கும் இறைவரான சிவபெருமான் என்பது இல்லமொழி.


விரிவரையாளர்,
மா. மன்னர் கல்லூரி, பதுக்கோட்டை
muppalam2003@yahoo.co.in

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்