எழுத்தில் எளிமை வேண்டும்

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

நாஞ்சிலன்


இந்த ஜூன் மாதம் எட்டாம் தேதி திண்ணை இணைய இதழில், ” இஸ்லாம் சம்பந்தமான உரையாடல்களுக்கு ஒரு எதிர்வினை” என்ற, எச் முஜீப் ரஹ்மான் எழுதிய கட்டுரை ஒன்றைக் கண்டேன். இஸ்லாம் சம்பந்தமான கட்டுரை என்று நினைத்துப் படிக்கத் தொடங்கினேன். அதில் இஸ்லாம் பற்றி ஒன்றுமே இல்லை. மாறாக அவருக்கு என்னென்ன தெரியுமோ அவற்றைப் பட்டியலிட்டுப் புரியாத பாஷையில் என்னென்னவோ நிறைய எழுதி என்னைப் போன்ற பாமரர்களை வாசிப்பை விட்டுத் தூரமாக்கும் பணியையே செய்துள்ளார்.

ஏதாவது அறிவு கிடைக்குமே என்று திண்ணையில் அமர்ந்து வாசிக்கத் தொடங்குவேன். முதுபெரும் எழுத்தாளர்களான ஞாநி, ஜோதிர்லதா கிரிஜா மலர் மன்னன், கற்பக வினாயகம், குமரி மைந்தன் போன்றோர் எழுதும் கட்டுரைகள், மற்றும் எச்.ஜி ரசூல், வஹ்ஹாபி,இப்னுபஷீர், ஹமீது ஜஃபர் போன்றோர் இஸ்லாம் பற்றி எழுதுபவை எல்லாம் புரியும்படியும் வாசிப்பைத் தூண்டும்படியும் அமைந்துள்ளன. வாதங்களும் எதிர்வாதங்களும் வாசிப்போரின் அய்யங்களைப் போகும் விதம் அமைந்துள்ளன.

ஆனால் முஜீப் கட்டுரை எளிமையான வாசகர்களை மிரட்டும் முரட்டுப் பாணியில் அமைந்துள்ளது.

தமக்குத் தெரிந்ததை எல்லாம் எழுதிவிட்டால் பெரிய எழுத்தாளர் ஆக முடியாது; எழுத்து அனைத்துத் தரப்பு வாசகர்களையும் சென்றடைய வேண்டும். அப்படி எழுதுபவனே எழுத்தாளன்.அதன்றி வெறும் பட்டியலிடுவது என்பது, ‘எனக்கு இவையெல்லாம் தெரியும்’ என்று விளம்பரப் படுத்துவதற்கு மட்டுமே உதவும் என்பது என் கருத்து.

நன்றி.

naanjilan@gamil.com

Series Navigation

நாஞ்சிலன்

நாஞ்சிலன்