ஜோர்டன் போல்லாக்(Jorden Pollack)
1980களில் எப்படி கணிணிகள் எல்லா வீடுகளிலும், எல்லா நிறுவனங்களிலும், எல்லா விஷயங்களுக்கும் பயன்படக்கூடியதாக நம் வாழ்வில் உள்ளே நுழைய ஆரம்பித்தனவோ, அதுபோல 2001இல் (தானியங்கி ) இயந்திரமனிதர்கள் நம் வாழ்விலும் வியாபாரச்சந்தையிலும் வர ஆரம்பிக்கும் என்று இயந்திர மனித வடிவமைப்பாளர்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். ஒரே ஒரு பிரச்னை இருக்கிறது. வெவ்வேறு விஷயங்களுக்கும், வெவ்வேறு சூழ்நிலைகளுக்கும் மனிதர்கள் உடனடியாக வளைந்துகொடுத்து கற்றுக்கொண்டு போவதுபோன்ற ஒரு இயந்திர மனிதர்களை வடிவமைப்பது, மிக அதிக செலவாகக்கூடியது. அதிக சிக்கல்கள் நிரம்பியது.
இதுவரை ரோபாட்டிக்ஸ் என்ற இயந்திரமனித வடிவமைப்பு எளிய, திரும்பத்திரும்ப அதையே செய்யும் வேலைகளைச் செய்வதற்குமே பயன்பட்டு வந்திருக்கிறது. உதாரணமாக கார் அசெம்பிளியிலும், ஒரே மாதிரி பொம்மைகளை செய்யும் பொம்மை உற்பத்திச் சாலைகளிலும் உபயோகப்பட்டு வருகிறது. எல்லா வேலைகளையும் செய்யும், புதிதுபுதிதாக கற்றுக்கொண்டு வேலை செய்யும் இயந்திரங்களை உருவாக்குவதும் கடினம், விலையும் அதிகம்.
ஒரு நல்ல அணுகுமுறை, கணிணிகளையே ஒரு இயந்திர மனிதனை வடிவமைக்கக் கற்றுக்கொடுப்பது. ஒரு இயந்திரம் இதை இதை செய்யவேண்டும் அதற்கு தகுந்தாற்போல ஒரு இயந்திர மனிதனை வடிவமை என்று ஆணையிட்டால் அதுவாக ஒரு இயந்திர மனிதனை வடிவமைத்துத் தருமாறு கணிணிக்குச் சொல்லித்தருவது. அதாவது இயந்திரங்களை வைத்து புதிய இயந்திரங்களை வடிவமைப்பது. கடந்த வருடம் மஸாசூசெட்ஸ் நகரத்தில் இருக்கும் ப்ராண்டெஸ் பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஜோர்டன் பொல்லாக், இது போன்ற இயந்திரமயமான இயந்திர வடிவமைப்பை செய்து காட்டியிருக்கிறார்.
கணிணியில் துணைப் பேராசிரியராக இருக்கும் பொல்லாக் அவர்களும், ஹோட் லிப்ஸன் என்ற மாணவரும் இணைந்து ஒரு கணிணிக்கு ஒரு இயந்திரமனிதனைச் செய்ய ஆணையிட்டார்கள். உயிர் பரிணாமக்கோட்பாடுகளை கொண்ட ஒரு அல்காரிதம் எழுதினார்கள். கணிணியிடம் சில பொருள்கள் கிடைக்கும் என்று சொன்னார்கள்(பிளாஸ்டிக் கம்பிகள், குச்சிகள், ஒரு மூளை, சில இணைப்புகள், சில மோட்டார்கள் போன்றவை). கணிணி இந்தப் பொருள்களை வைத்துக்கொண்டு பரிணாமக்கோட்பாடுகளை வைத்துகொண்டு இந்த பொருள்களை பொருத்தி பொருத்தி பரிணாமப்படுத்தியது. பல பரிணாமங்களுக்குப் பின்னர் கொடுத்த வேலைகளைச் செய்வதாக கணிணி ஒரு இயந்திர மனிதனை காண்பித்தது. கணிணியின் வடிவமைப்புப்படி பொல்லாக் அவர்களும் லிப்ஸன் அவர்களும் பாகங்களை இணைத்தார்கள். கருவிகள் நன்றாக நகர்ந்தன.
‘இந்த பரிணாம வடிவமைப்பும், இயந்திர மயமாக்கப்பட்ட உற்பத்தியும், இயந்திர மனிதர்களை சிறிய அளவில் தயாரித்தாலும், விலை மலிவாக்கும் ‘ என்று கூறுகிறார் பொல்லாக். இன்னும் 5 அல்லது 10 வருடங்களில் இயந்திர மனிதர்கள் இது போன்ற பரிணாம வடிவமைப்பில் தேவையான இயந்திர மனிதர்களை வடிவமைத்துக்கொள்ள முடியும் என்றும் கருதுகிறார்.
பொல்லாக் அவர்களின் ‘இயந்திரமயமாக்கப்பட்ட ‘ முறை இன்னும் மனித தலையீடும், பெரும் பொருள் செலவும் தேவையான ஒன்று. பொல்லாக் அவர்களும் துணைவர்களும் சுமார் 50000 டாலர் செலவு செய்து, இன்னும் கணிணி மென்பொருளும் எழுதி நேரமும் செலவிட்டிருக்கிறார்கள். இவர்களது சாதனை ‘நேச்சர் ‘ இதழில் வெளிவந்து பெரும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. ‘முக்கியத்துவம் இதனது சாத்தியக்கூறுகளின் காரணமாக ‘ என்று கூறுகிறார் பிட்ஸ்பர்க் நகரத்தில் இருக்கும் கார்னகி மெலான் பல்கலைக்கழகத்தின் முதன்மை அறிவியலாளராக இருக்கும் ஹான்ஸ் மொராவக். ‘இங்கே இயந்திர மனிதர்கள் இன்னொரு இயந்திரத்தால் கட்டப்படுகிறார்கள். எதிர்காலத்தில் வளமையான இயந்திர மனிதர்கள் இதுபோல உருவாக்கப்படுவார்கள் ‘ என்கிறார்.
பொல்லாக் அவர்களுக்கு நல்ல போட்டி இருக்கிறது. பல்கலைக்கழகங்களிலும், தொழில்ச்சாலைகளிலும், புதிய தலைமுறை இயந்திரமனிதர்களை கட்ட தீவிரமாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் பத்தாண்டுகளில், தரைகளைதுடைக்கும் இயந்திரங்களும், பொருள்களை எடுத்துத்தரும் இயந்திரங்களும் நிறைய சந்தையில் கிடைக்கும் என்று எண்ணுகிறார்கள். ‘இயந்திர மனிதர்களுக்கு மக்களிடம் தேவை இருக்கிறது ‘ என்று கூறுகிறார் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ரோபாட்டிக்ஸ் பரிசோதனைச்சாலையின் நிறுவனரான ஜார்ஜ் பெக்கே. ‘அடுத்த பத்தாண்டு இயந்திர மனிதர்களின் பத்தாண்டாக இருக்கும் ‘
பொல்லாக் போன்றவர்களின் பரிசோதனைகள் சிந்தனையைத் தூண்டுபவையாக இருந்தாலும், சாதாரண வேலைகளைச் செய்யும் இயந்திர மனிதர்களைச் செய்வது எளிய காரியமில்லை. ஜப்பானில், ஹோன்டா நிறுவனம், ஒரு மனிதன் போல உள்ள இயந்திர மனிதனைச் செய்ய (சும்மா நடக்கவும், கதவு திறக்கவும், மாடிப்படி ஏறவும் செய்யக்கூடிய இயந்திர மனிதன்) கடந்த 14 ஆண்டுகளாக கஷ்டப்பட்டுவருகிறார்கள்.
பொல்லாக் அவர்களின் பரிசோதனைச்சாலையில் நடந்தால் இயந்திரமனிதர்களை உருவாக்க நல்ல வழிமுறைகள் இருக்கின்றன என்றுதான் தோன்றுகிறது. ஒரு எட்டுக்கால் பூச்சி போல ஒரு இயந்திரம் தானாக நடக்கிறது. இவர் தயாரித்த ஒரு இயந்திரம், தரையில் இருக்கும் குப்பைகளின் மீது ஏறாமல், அவரது சட்டையை எடுத்துக்கொண்டு போகிறது. இன்னும் சில வருடங்களில் அந்த பரிசோதனைச் சாலை தரையில் இருக்கும் குப்பைகளை ஒழுங்குபடுத்தும் ஒரு இயந்திரம் கண்டுபிடித்தாலும் கண்டுபிடிக்கலாம்.
Others in Robot Design
Organization Project
Sarcos (Salt Lake City, Utah) Robots for industry, medicine, Hollywood
iRobot (Somerville, Mass.) Household communications robot
Humanoid Interaction Lab (Tsukuba, Japan) Interactions between humanoid robots and humans
MIT Artificial Intelligence Lab (Cambridge, Mass.) Machine learning, robot legs, faces
Robotics Institute (Carnegie Mellon) Mobile robots and face recognition
- அஞ்சு ரூபா
- ஒரு பெண்ணாதிக்கக் கதை
- ஒர் ஆணாதிக்கக் கதை
- மாயை
- மாறுதலான சினிமாவும் மாறிவரும் சினிமா பார்வையும்
- உடைவது சிலைகள் மட்டுமல்ல
- இந்த வாரம் இப்படி – மார்ச் 11, 2001
- பேசடி பிாியமானவளே…
- எலிப் பந்தயம்
- பாட்டி
- உயிர்த்திருத்தல்
- எம் ஐடி டெக்னாலஜி ரிவியூவில் வந்த 10 எதிர்கால தொழில்நுட்பங்கள் -9 – இயந்திர மனித வடிவமைப்பு(Robot Design)
- சிக்கன் எலும்பு சூப்
- வஞ்சிரம் மீன் ஊறுகாய்
- காட்சிப்படுத்தலும் கலை ஊடகங்களும்