என்ன செய்து கொண்டு இருக்கிறோம்

This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue

புதுவை ஞானம்


தானே நடனம் ஆடுகிறது வாழ்க்கை!
பின் எதற்காக மரங்களும் பெரனிச் செடிகளும்
பட்டாம்பூச்சிகளும் பாம்புகளும்
நடனம் ஆடுகின்றனவாம்?

ஒவ்வொரு மரமும்
ஒவ்வொரு எலும்பும்
தத்தம் உள் கட்டமைப்பில்
ஓடும் நீரின் சலனத்தைக் கொண்டுளவாம்?

புவி ஈர்ப்பு விசையினைப் பின் தொடர்ந்து
வெல்லற்கறிய சக்தியை
வென்றெடுக்கின்றனவாம்?

மனிதன் மட்டும் ஏன்
மறுத்திடல் வேண்டும் கீழ் நோக்கியதான
இயல்பான பாய்ச்சலை?

காலடிகளைக் கணக்கிடுவது இல்லை
நடனமாடும் போது நான்
தாள லயமே இல்லை என்பதாக
சலிக்கின்றனர் பெண்கள்.

தொடர்ந்து ஆடுகிறாள் செல்ல மகள் என்னை
நிழல் என்னைத் தொடர்வது போல்.
புவி ஈர்ப்புடன் இசைந்தோடுவதில் இருக்கிறது
படைப்பாற்றலின் மொத்த இரகசியமும்
தாவினாலும் குதித்தாலும் என் பூனை
இயைந்தே செயல் படுகிறது ஈர்ப்பு விசைக்கு.

மொத்த உலகுக்கும் பிரபஞ்சமெனும்
தேன் கூட்டுக்கும் மார்க்கமிதுவே ஆகும்.
மன்னித்து விடுங்களெனது
மடத்தனமான துனிச்சலை.

சச்சதுரமான அமைப்புகளுக்கு மாறாக
அறுகோணமான கூடுகளில் தான்
வாழுகின்றன தேனீக்கள் கூட்டமாக.

இயற்கையான இந்த வழியில் தான்
ஒன்றினைகின்றன ஒன்றினை ஒன்று
ஈர்ப்பதன் மூலம்
நீர்க்குமிழிகளும் கூழாங்கற்களும்.

இது ஏன் இப்படியாக இருக்கிறது என்றால்
இரண்டு x ஆறு = பன்னிரண்டு அல்லவா?
பக்மின்ஸ்டர் fபுல்லர் நிறுவியது போல
பத்தடிமான கணிதத்தை விட
பன்னிரண்டடிமான கணிதம்
நெருக்கமானது இயற்கைக்கு.

ஏனெனில்……….பன்னிரண்டு என்பதோ
இரண்டாலும் வகுபடும்
மூன்றாலும் வகுபடும்.

வட்டங்களையும் உருளைகளையும்
காலத்தையும் அளக்க
பன்னிரண்டடிமானத்தைப்
பயன் படுத்துகிறோம் அல்லவா?

எனவே…….
மக்களைப் பற்றிச் சிந்திக்கும் போது
வட்டங்கள் பற்றிச் சிந்திக்கிறோம்
சந்தங்களைப் பின் பற்றும்
மக்களைப் பற்றிச் சிந்திக்கிறோம்.

பத்தடிமானத்தைப் பின்பற்றி
இந்த உலகம் ஒழிந்து போவதை விட
பன்னிரண்டடிமானத்தைப்
பின்பற்றுவதே பாதுகாப்பானது.

மூலம்: ஆலன் வாட்ஸ் ALAN WATTS-CLOUD-HIDDEN WHEREABOUTS UNKNOWN (P.121)

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்