பிரபு.
விழியிருக்கு, வெளிச்சமில்லை..
மனதில் மட்டும் ஊனமில்லை..
நிறம் கண்டதில்லை..
நிழல் கண்டதில்லை..
சிலுவைகளை பார்த்ததில்லை..
கோவில் சிலைகளை பார்த்ததில்லை..
இந்த பிறவிகுருடான கண்களுக்கு…
ஒருபொழுதும்,
மன இருளோடு வாழ்ந்ததில்லை..
பாிதாபப்பட்டு ஜெயித்ததில்லை..
உதிரம் கொடுக்க விலை பேசும் மனிதர்களிடையே…
தன் கண்களைத் தவிர மற்ற
உறுப்புக்களை தானம் செய்ய
ஆசை
இந்த குருடனுக்கு…
விழியிருக்கு, வெளிச்சமில்லை..
மனதில் மட்டும் ஊனமில்லை..
இளமை காலம்
இயற்கையை சுவாசிக்க
தஞ்சம்புகும்… அழகிய
பறவைகள் எங்கள் ஊருக்கு..
களவு போனாலும்,கை எடுத்தாலும்
தீர்ப்பு சொல்லும் தனி நீதிமன்றம்
எங்கள் அரசமரத்தடி பஞ்சாய்த்துதான்..
ஆரவாரமற்ற வாழ்வில்
அரக்க பறக்க முகாமிட்டு
தேர்தல் முடிந்தவுடன்…
காணாமல் போனது.. அரசியல்வாதிகள்
மட்டும் அல்ல…
அவர்கள் நினைவில் இருந்த
எங்கள் ஊரும் தான்…
பள்ளியில் அடிக்கும் மணி
எங்கள் கொல்லைக்கும் கேட்கும்…
ஒருமாதமாய் தவமிருந்து பெற்ற
மகிழ்ச்சியில் என் கண்கள்..
சந்தையில் கரும்பலகை !! அம்மா
வாங்கி வந்தபோது…
பள்ளி காலம்…
சத்து(இல்லை)உணவு மட்டுமே உண்டு
புத்திக்கு அறிவுட்டி கல்லூாிவரை
அழைத்து சென்றது..
அதிகம் படித்ததுனால்
பணத்தையும்.. உறவையும்
தேடித்தந்தது.. இந்த
நகரத்து வாழ்கை..
இயற்கை காற்றை செயற்கையாக
சுவாசிக்க ஆக்சிஜன் நிலையங்களுக்கு
பணம் அழைத்து சென்றது..
பழைய நினைவுகளை
மனதிரையில் காட்சியிட்டு
இரவு வாிசையில் அமர்ந்திருந்தேன்..
காலையில் கொடுக்கும் பள்ளி
சேர்க்கை விண்ணப்பம் வாங்க..
என் மூன்று வயது பையனுக்கு……
பிாியமுடன்,
பிரபு.
********************************************************************