நன்றி பிபிஸி
உலக நாடுகள் தயாரித்திருக்கின்ற உலக வெப்ப ஏற்றம் பற்றிய ஆரம்பப்படிவம், உலகம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக வெப்பமாகிக்கொண்டு வருகிறது என்று கூறுகிறது.
தட்பவெப்ப மாறுதல் பற்றிய பல அரசாங்கக்குழு (Intergovernmental Panel on Climate Change(IPCC)) சார்ந்த விஞ்ஞானிகள், முன்பு எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக உலக வெப்பம் ஏறும் என்று கூறுகிறார்கள்.
1990இல் இருந்ததை விட 6 டிகிரி இந்த வருடம் அதிகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். ஐந்து வருடங்களுக்கு முன் இந்தக் குழு 3 டிகிரி மட்டுமே ஏறும் என்று கணக்கிட்டிருந்தது.
தொழிற்சாலைகளிலிருந்து வரும் கரியமிலவாயுவும் கரிப்புகையும் உலக காடுகள் மொத்தமாக அழியவும், கடல் மட்டம் உயரவும், பயிர்கள் விளைச்சலின்றி போவதும், மிகுந்த குளிரும் , மிகுந்த வெப்பமுமாக இனி இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
இந்த படிவம், ஆரம்பப்படிவம். அடுத்த மே மாதம் சற்று மாற்றப்பட்டு இது வெளியிடப்படலாம்.
அடுத்த மாதம் நெதர்லாந்தில் நடைபெறும் மாநாட்டில் இது பேசப்படும். இந்த மாநாட்டில், தட்பவெப்ப மாறுதல்களை தடுக்க உருவான கியோட்டோ வரைமுறைகளை ஒத்துக்கொண்ட நாடுகள் பங்கு பெறும்
இது போன்ற தட்பவெப்பதை பாதிக்கும் வாயுக்களின் வெளிப்பாட்டை கட்டுப்படுத்தி 1990 அளவிலிருந்து, 2008இலிருந்து 2012க்குள், 5.2 சதம் குறைப்பதாக ஒப்புக்கொண்ட நாடுகள் இவை.
கடந்த 50 வருடங்களில், பெட்ரோல் போன்ற எரிபொருட்களை எரிப்பதும் மற்ற உலகத்தை அழுக்குச் செய்யும் செய்கைகளை (pollution) செய்வதும் அதிகரித்ததனால், இந்த வெப்ப அதிகரிப்பு அதிகமாகி விட்டது என்று கூறுகிறது இந்த படிவம்.
கரிப்புகை அதிகமாக வெளியிடப்படுவது, வெப்பம் அதிகமாவதன் முக்கிய காரணம். 2100க்குள் வருடத்துக்கு 35 முதல் 40 கிகா டன் கரிப்புகையை வெளியிட ஆரம்பித்துவிடுவோம் என்று கூறுகிறார்கள். (ஒரு கிகா டன் என்பது 1,00,00,00,000 டன்)
இப்போது கரிப்புகை CO2 வெளியீடு 6.8 கிகாடன் அளவு வருடத்துக்கு.
உலக வெப்பம் ஏறினால், உலகத்தின் அனைத்துக் காடுகளும் அழிந்து போகும். அப்படி அழிவது இன்னும் வெப்பத்தை உருவாக்கும். வெப்பம் ஏறுவதால், உலகத்தின் தெற்கிலும் வடக்கிலும் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் ஏறும். இவ்வாறு ஏறுவது உலகெங்கும் வெள்ளத்தையும், சிறு தீவுகள் கடலுக்குள் சென்று மறைவதும், நிகழும். உதாரணமாக மாலத்தீவுகளும், அந்தமான் நிக்கோபார் தீவுகளும், சென்னை மாநகரமும், பம்பாயும் கல்கத்தாவும் மறைந்து போகும்.
- எனது ஊர்
- பாரதி : காலம் மீறிய கலைஞன்
- மிதிபட….
- எனது ஊர்
- இந்த வாரம் இப்படி
- தானா
- லினக்ஸும் இந்தியாவும்
- சனிக்கிரகத்தைச் சுற்றி மேலும் நான்கு சந்திரன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
- உலக வெப்ப ஏற்றம் (Global warming) ‘பயந்ததைவிட மோசம் ‘
- பெளத்தமும் ஹிந்து இயக்கமும்
- பாரதி : காலம் மீறிய கலைஞன்