சார்லஸ் சோய்
தெற்கு ஆப்பிரிக்காவின் தங்கக் கல்களில் இருக்கும் கதிரியக்கம், இந்த உலகத்தின் மிகப்பெரிய தங்கப் புதையலின் ஆரம்பத்தின் காரணத்தை அறிய உதவும் என்று உலக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
வரலாறு பதிவு செய்யப்பட ஆரம்பித்ததிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட தங்கத்தில் (அதாவது சமீபத்திய 120 வருடங்களுக்குள் தோண்டியெடுக்கப்பட்ட தங்கத்தில்) சுமார் 40 சதவீதம் தென்னாப்பிரிக்காவில் இருக்கும் ‘ராண்ட் ‘ என்ற இடத்தில் இருக்கும் சுரங்கத்திலிருந்தே எடுக்கப்பட்டது. இது விட்வாட்டர்ஸ்ராண்ட் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. உலகத்தில் இருக்கும் தங்கத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு தங்கம் தோண்டப்படாமல் இந்த ஒன்பது மில்லியன் ஏக்கர் பரப்பில் இருக்கும் இந்த புராதன ஏரியின் படுகையில்தான் இருக்கிறது என்று அறிவியலாளர்கள் கணக்கிட்டு இருக்கிறார்கள்.
இதுபோல இன்னொன்று கண்டுபிடிக்கப்படுமாயின் இதன் மொத்த தங்கத்தின் மதிப்பு இன்றைய விலையில் அரை டிரில்லியன் அமெரிக்க டாலர் பொறுமதியாக இருக்கும்.
எப்படி இங்கு இவ்வளவு தங்கம் கிடக்கிறது என்பதை ஆராய்ச்சி செய்வது எப்போதுவே விவாதத்துக்குரிய விஷயமாகவே இருக்கிறது. இதனை இரண்டு தேற்றங்கள் விளக்க முற்படுகின்றன. முதலாவது பிளேசர் மாதிரி என்று அழைக்கப்படுகிறது. அருகாமையில் இருக்கும் மலைகளில் இருக்கும் தங்கத்தை ஆறுகள் அடித்து வந்து இங்கு கிடத்தியிருக்கின்றன என்று கூறுகிறது. ஹைப்போதர்மல் மாதிரி என்பது சூடான தண்ணீர் பூமிக்கடியிலிருந்து மேலே வரும்போது தங்கத்தை எடுத்து இங்கு படுகையில் போட்டிருக்கிறது என்று கூறுகிறது.
இந்த விவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரும்பொருட்டு, கிர்க் மற்றும் இவரது தோழர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்தும், பிரிட்டனிலிருந்தும் வந்து இந்த தங்கத்தின் வயதினை கணக்கிட முடிவு செய்தார்கள். அருகாமையில் இருக்கும் பாறைகளின் வயதினை விட தங்கத்தின் வயது கூடவா குறைவா என்பதை ஆராய முடிவு செய்தார்கள். தங்கம் பாறைகளைவிட வயது குறைவாக இருந்தால், அது சுடுநீரின் மூலம் வந்த ஹைப்போதெர்மல் மாதிரியை சரி எனக் கூறும்.
‘தங்கம் எப்போதுமே சுத்தமாக இருக்காது. அதில் ஏதாவது அசுத்தம் இருந்து கொண்டே இருக்கும் ‘ என்று கிர்க் கூறுகிறார். தங்கத்தினுள் இரண்டு தனிமங்கள் பொதுவாகக் காணப்படும். அது ரீனியம் , ஓஸ்மியம் என்ற இரண்டு.rhenium and osmium. இவைகளை கதிரியக்க கடிகாரங்களாகப் பயன்படுத்தலாம். ரேனியம் கதிரியக்கத்தினால் சிதைந்து ஓஸ்மியமாக ஆகிறது. ரீனியத்தில் பாதி சிதைந்து ஓஸ்மியம் ஆவதற்கு சுமார் 42.3 பில்லியன் வருடங்கள் பிடிக்கும். இது பூமியின் வயதில் 10 மடங்கு. தங்கத்தின் துகள்களை அமிலத்தில் கரைத்து அதில் எவ்வளவு ரேனியம், எவ்வளவு ஓஸ்மியம் இருக்கிறது என்ற விகிதத்தைக் கணக்கிடுவதன் மூலம் தங்கத்தின் வயதினை அறியலாம்.
ராண்ட் படுகையில் இருக்கும் தங்கத்தை மூன்று இடங்களில் கணக்கிடுவதன் மூலம், இந்த தங்கத்தின் வயது சுமார் 3 பில்லியன் வருடங்கள் என அறிய முடிகிறது. இது அருகாமையில் இருக்கும் பாறைகளின் வயதினை விட சுமார் கால் பில்லியன் வருடங்கள் பழையது. என்று கிர்க் கூறுகிறார். இது பிளேசர் மாதிரியை சரி என்று கூறுகிறது.
‘இது சுமார் கால் நூற்றாண்டாக விவாதம் செய்யப்பட்டு வரும் இந்த விஷயத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. தங்கத்தின் வயது நேரடியாக கணக்கிடப்பட்டிருக்கிறது. ‘ என்று புவி வேதியியலாளரான ஹார்ட்விக் கூறுகிறார். இவர் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுண் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார்.
மேலும், ரீனியம், ஓஸ்மியம் விகிதம் இந்த தங்கம் பூமியின் விளிம்பிலிருந்து வந்திருக்கிறது என்பதையும், அது பூமியின் மையத்திலிருந்து வரவில்லை என்பதையும் தெளிவு படுத்தியிருக்கிறது. இது எரிமலை இயக்கத்தால் வரும் கோமைட்டுகள் என்ற கற்களின் மூலம் வந்திருக்கிறது என்பதையும், பூமியின் வெளியே இருக்கும் கிரானைட்களிலிருந்து வரவில்லை என்பதையும் தெளிவு படுத்தியிருக்கிறது. இது மறைமுகமாக தங்கம் கண்டுபிடிக்கும் வேலைக்கு உதவலாம்.
கிர்க் குழு உலகத்தின் மற்ற தங்கப் படுகைகளில் இருக்கும் தங்கத்தின் வயதினையும் அளவிட முடிவு செய்துள்ளார்கள். ராண்ட் படுகையில் இருக்கும் தங்கம் ஏன் இவ்வளவு அதிகமாக இருக்கிறது என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
http://news.nationalgeographic.com/news/2002/09/0923_020923_wiregold.html
- சொல்லுவதெல்லாம்
- என் கதை
- அழைப்பிதழ்
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது…(தொடர்கவிதை ெ3)
- யாருக்கும் நான் எதுவுமில்லை
- உதய கீதம்
- புதையல்
- வாழ்வும் கலையும்
- இனிப்பும் ஆபத்தும் (எனக்குப் பிடித்த கதைகள் – 35 -சார்வாகனின் ‘கனவுக்கதை ‘)
- அ.முத்துலிங்கத்தின் படைப்புலகம்
- உலகத்தின் மிகப்பெரிய தங்க புதையலின் ரகசியம்
- பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow1904-1968)
- அறிவியல் மேதைகள் சார்லஸ் டார்வின் (Charles Darwin)
- வளர்சிதை மாற்றம்
- குழந்தைகள் பற்றிய எட்டுக் கவிதைகள்
- விரதம்
- சொல்லியிருந்தால்…
- தீவுகள்
- அன்பைத் தேடி…
- தேடல்
- முதல் சினேகிதி
- தன்னாட்சி.. ?
- மதமாற்றத் தடைச் சட்டமும் தமிழ் நாட்டின் அரசியலும்
- மன அஜீரணத்துக்கு மருந்து.
- வாழ்வும் கலையும்
- வேதத்தின் கால நிர்ணயமும் ஆரிய படையெடுப்புக் கோட்பாடும் : ஒரு மறு பார்வை
- தமிழக ஆறுகளைச் சிதைக்கும் மணற் குவாரிகள்
- கணவன்
- சபா- தீபாவளி ஸ்பெஷல்