ஏ.எம். றியாஸ் அஹமட்
இலங்கை பரம்பரை பரம்பரையாக ஒரு விவசாய நாடு. வடமத்திய மகாணத்தில் காணப்படும் பாரம்பாிய குளங்கள் இதற்குச் சான்று. நம் அரசர்கள் இக் குளங்களைக் கட்டுவித்து நெற்செய்கையை ஊக்குவித்து வந்தனர். நம் மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். நெற்செய்கை அவர்களுக்கு கைவந்த கலையாகும். நமக்கு என்றொரு பயிர்ச்செய்கைக் கலாச்சாரத்தை உள்ளடக்கிய மரபு வழி விவசாய சமூகத்தினர் நாம் என்பதில் பெருமையடைகின்றோம். ஆனால் இன்றைய உலகை ஆட்டிப்படைக்கும் நவீன தொழில்நுட்பம் நம் விவசாய நடவடிக்கைகளிலும் தலையைப் போட்டு குழப்பத் தொடங்கியுள்ளது.
பண்டைய காலம் தொட்டே இலங்கை ஒரு பூர்வீக விவசாய நாடாக இருந்து வந்தள்ளது. இதற்கு இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள குளங்கள் இதற்கு சான்றுகளாகும். உலகிலேயே ஒரு சதுர கிலோமீற்றருக்கு காணப்படும் குளங்களின் அடர்த்தி கூடிய நாடு இலங்கையாகும். இந்தக் குளங்களை பல சிங்கள, தமிழ் அரசர்கள் கட்டுவித்து, விவசாயத்தை அதிலும் குறிப்பாக நெற்செய்கையை ஊக்குவித்தனர். இலங்கையில் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தில் வல்லமையுள்ளவர்களாக இருந்தார்கள். அதிலும் மரபுவழி, கலாச்சார, பாரம்பாிய தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய முறைகளை கையாண்டு வெற்றிகண்டவர்கள். பண்டைய இலங்கையிலுள்ள குளக்கட்டுமான, நீர்ப்பாசன, சேதனப் பசளையை நம்பிய விவசாய முறைகள் இன்றும் மேற்கத்தைய விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தும் ஒன்றாகவே இருக்கின்றது. இருந்தும் இன்றைய நவீன தொழில்நுட்ப எகாதிபத்தியவாதம் நமது பண்டைய விவசாய முறைகளைச் சிதைப்பதில் குறியாயிருக்கின்றது.
நமது முன்னோரான விவசாயிகள் தமக்கு வேண்டிய விதை நெல்லை தமது வயல்களிலிருந்து பெற்ற அறுவடைகளிலிருந்து கணிசமான ஒரு பகுதியைச் சேமித்து விதையாகப் பயன்படுத்தி, நோய், பீடைத் தாக்கங்களிலிருந்து இயற்கையான பாதுகாப்பை பெற்று, நல்ல செழிப்பான அறுவடைகளைப் பெற்றார்கள்.
1950-60 களில் அதிக விளைச்சலைத் தரும் நெல்லினங்கள் என்று கூறிக் கொண்டு வெளிநாடுகளிலிருந்து புது நெல்விதையினங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. கூடவே விளைச்சலை அதகாிப்பதற்கான இரசாயனப் பசளைகளும் அந்நாடுகளிடமிருந்தே வாங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து குறுகிய கால நெல்லினமொன்று அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் இருபோக நெற்செய்கை முப்போகமாக அதிகாித்தது. பல்லினப் பயிர்ச்செய்கை விடுத்து ஓாினப் பயிர்ச் செய்கையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக அதிக விளைச்சல்கள் கிடைத்தாலும், நோய் கிருமிகளினதும், பீடைகளினதும் தாக்கம் அதிகாித்தது. மிகவும் விரைவாகப் பல்கிப் பெருகிய கிருமிகளையும், பீடைகளையும் அழிப்பதற்கு இரசாயனக் கொல்லிகளை வகை தொகையாக இறக்குமதி செய்து கண்-மண் தொியாமல் பிரயோகித்து பீடைகளும், கிருமிகளும் ஒழிந்ததாக சந்தோசம் கொண்டார்கள்.
ழூழூ
ஒரு அங்கியின் விருத்திக்கும், தொழிற்பாட்டுக்கும், கட்டமைப்புக்கும், அதன் கலத்தின், கருவின், நிறமூர்த்தத்தில் காணப்படும் பல்லாயிரக்கணக்கான பரம்பரையலகுகள் காரணமாகும். இந்தப் பரம்பரையலகுகளே ஒரு அங்கியின் தோற்றவமைப்பையும், பரம்பரையமைப்பையும் தீர்மானிக்கின்றன. மேற்கத்தைய நாடுகளின் ஆதரவில், சில விவசாயக் கம்பனிகள் நிறைய விதைகளை உருவாக்கியுள்ளன. அவ்றில் முக்கியமானது, இந்தியத் துணைக் கண்டத்தினதும், தென்கிழக்காசிய, சீன, ஜப்பான் நாடுகளினதும் பிரதான உணவுப் பொருளான நெல்லாகும். ஒழித்துக் கட்டும் முயற்சியில் அணுகுண்டுகளை வைத்துச் சோதனை செய்த ஏகாதிபத்திதயவாதம் இன்று அணுகுண்டுகளை விடுத்து நெல்லில் தனது கவனத்தை செலுத்தத் தொடங்கிவிட்டது.
இன்று மழுங்கடிக்கப்பட்ட பாலுக்குாியதான பரம்பரையலகைக் கொண்டு;ள்ள விதை நெல்லினங்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளன. இந்த விதைகள் முளைத்து பயிராக வளர்ந்து, அறுவடை செய்யும் போது, அந்த விதைகளை உணவிற்காக மாத்திரமே பயன்படுத்த முடியும். அவற்றை விதை நெல்லாகப் பயன்படுத்தி மீண்டும் பயிர்ச் செய்கை மேற் கொள் முடியாது. ஏனெனில் அந்த விதைக்குள் மிகவும் வீாியமான மலட்டுத் தன்மை புகுத்தப்பட்டுள்ளது. இதனால் இலங்கை போன்ற நாடுகளில்; விவசாயிகள் ஒவ்வொரு முறையும் நடுகைக்காக வெளிநாட்டின் புதிய பல வகை நெல் விதையினங்களையே நம்பியிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்படுகின்றனர். இந்த விதைகளை உற்பத்தி செய்யும் நாடுகள். தங்கள் நாடுகளில் இதனை பயன்படுத்த விரும்புவதில்லை. அபிவிருத்தியடைந்த நாடுகளோ இந்த விதைகளைப் பயனபடுத்துவதை புத்திசாதூியமாக தவிர்த்துவிடுகின்றன.
இந்த மலட்டுத் தன்மையான விதைகளை¢ப பாவிக்கும் போது, காலநிலை, நோய், பீடைத் தாக்கம் போன்ற காரணிகளால் அறுவடை பாதிக்கும் நிலைமை ஏற்படலாம். இதனால் விவசாயியின் வருமானம் குறைந்து, கடனாளியாகும் நிலை ஏற்படும். இதனால் அடுத்த போகத்துக்குாிய நெல்லை வாங்குவதற்குதாிய பணத்திற்கு அவன் திண்டாடி, அடுத்த போக நெற்செ;யகையை அவன் கைவிடுவான்.
இந்த மழுங்கடிக்கப்பட்ட விதை நெல்லை பயிாிட ஊக்கப்படுத்தும், ஆய்வாளர்களுக்கும், நிறுவனங்களுக்கும் பின்னால் இலாபத்தை மையம் கொ;ணட பொருளாதார நோக்கு இருக்கிறதே தவிர வேறொன்றுமில்லை. அந்த விதைகளை ஏற்க மறுக்கும் நாடுகளுக்கு அதிக விளைச்சலை கொடுக்கும், வேறு தொழில்நுட்பங்களையும், வேறு உதவிகளையும் வழங்குவதற்கு மேற்கத்தைய நாடுகளும், நிறுவனங்களும் மறுக்கின்றன.
இன்று இலங்கையில் பல்தேசியக் கம்பனிகன் தமது சுயநலத்திற்காக பெருந்தொகையான பணத்தை முதலீடு செய்து இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. வளர்ந்த நாடுகள் வளர்முக நாடுகளில் புகுத்தும் தொழில்நுட்பங்கள் வளர்முக நாட்டின் வளர்ச்சிக்கு எந்தக் காலத்திலும் பொருத்தமற்றது என்று உணரத் தலைப்படத் தொடங்கிவிட்டனர். நமது விவசாயிகள் விளம்பரங்களைக் கண்டு பிறநாட்டு அறிமுகங்களை நாடாமல் நமது பிரதேசத்தில் உள்ள நல்ல உற்பத்தித் திறனுள்ள விதையினங்களைப் பெற்று உற்பத்தி செய்தால்தான், நாம் கூடிய விளைச்சலையும், அத்துடன் அவற்றின் பரம்பரையியலைப் பாதுகாக்கவும் (Genetical Conservation) முடியும். இதன் மூலம் எமது நாட்டடுக்குாிய நெல் இனங்களைப் பேண முடியும். இல்லையேல் வரும் காலங்களில் நமது பாரம்பாிய விவசாய நடவடிக்கைகளே தடங்கல் அடைய நோிடும்.
உயிர்- தொழில்நுட்பவியல் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பியக்கங்களும், அதற்கான வெற்றியும்.
பூமியில் வளங்கள் மனித இனத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் சொந்தமானது என்றால், அதை நீதியாக, சாிநிகராக எல்லோருக்கும் பங்கிட்டுக் கொள்வதற்கு, சர்வதேச சோசலிசம் மலராமல் சாத்தியமில்லை என்கின்றார் கார்ல் மார்க்ஸ்.
இன்று நடைமுறையில் இருக்கும் பொருளாதார அமைப்பு, உறுதியானதாக இருக்கலாம்.ஆனால் அதனை நிர்வாகம் செய்பவர்கள் முட்டாள்களோ அல்லது கற்பனை வளம் இல்லாதவர்களோ அல்ல. அவர்கள் எதிர்ப்புக்களை சமாளிப்பதில் சிறப்பான தோ;ச்சிகளைப் பெற்றுள்ளனர். முற்போக்கான கருத்துக்களை முளையிலேயே கிள்ளியெறிய நன்றாகவே அறிந்துள்ளனர். அவர்கள் எப்போதும் சூழலியல் கோாிக்கைகளை தங்களுக்குச் சாதகமாகவே வளைக்க முற்படுவர்.
எனவே இதற்கெதிராக திரண்டெழக் கூடியவர்கள் மக்களே. இதற்கு முதன் முதலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த விழிப்புணர்வுக் கருத்துக்கள் ஒரு வலுவான எதிர்ப்புக் குரலாக உருவாக வழி வகுக்க வேண்டும். சுற்றுச்சூழற் சங்கங்கள், சூழலுக்கு ஆதரவு தரும் தொழிற் சங்கங்கள், அணுசக்தி எதிர்ப்பு அமைப்புக்கள் போன்ற பலவும் நிறைய உருவாகி தொடர்ந்து போராட வேண்டும். இத்தகைய போராட்டங்கள் பல வெற்றிபெற்றுள்ளன. வெற்றி பெற்றும் வருகின்றன. இவை நமக்கு மிகுந்த தெம்பை அளிக்கின்றன. நம்பிக்கையும் அளிக்கின்றது. இந்த உயிர்-தொழில்நுபட்பவியலிற்கு எதிரான மக்கள் எதிர்ப்பியக்கத்தையம், மக்கள் எதிர்ப்பையும்; நோக்குவோம்.
உணவுற்பத்தியில் பரம்பரையியல் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டதிலிந்தே அதற்கு எதிராக மக்கள் எதிர்ப்புக்களைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வகையில் மழுங்கடிக்கப்பட்ட விதைகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்ததே மிக அண்மைக்கால நிகழ்வாகும். இந்த எதிர்ப்பியக்கம் இயக்கத்திற்குள்ளாகத் தொடங்கியது ஐரோப்பாவிலேதான் (குறிப்பாக அமாிக்காவிற்கெதிராக) உணவுற்பத்தியில் பரம்பரையியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கு ஆதரவாக சட்டங்களை கொண்டு வரும் அரசாங்கங்களுக்கும் மக்கள் நேரடியாக எதிர்ப்பைக் காட்டவும் தொடங்கிவிட்டனர்.
மழுங்கடிக்கப்பட்ட விதைகள் அறிமுகமானதைத் தொடர்ந்து மக்களின் உலகளாவிய எதிர்ப்பும் தொடங்கியது. இந்த எதிர்ப்புச் சக்திக்கு முகம் கொடுக்க முடியாமல் மழுங்கடிக்கப்பட்ட விதைகளை வியாபார நோக்கில் உற்பத்தி செய்வதில்லை என்று சில நிறுவனங்கள்; அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பில் நம்பிக்கை வைக்க முடியாமல் இருக்கின்றது. ஏனெனில் அந்தக் கம்பனிகளின் தகவல்களின்படி வர்த்தக நோக்கைக் கைவிட்டாலும் ஆய்வுகள் தொடரும் என்று கூறப்படுவதே சந்தேகத்திற்கு காரணமாகும். மேலும் இந்த நிறுவனங்களில் பணி செய்யும் விஞ்ஞானிகள் “எதில் ஆபத்தில்லை. வீதியைக் கடப்பதில்கூட ஆபத்திருக்கிறது” என்ற வாதத்தை எழுப்பி புத்திசாலித்தனமாக உயிர்-தொழில்நுட்ப ஏகாதிபத்தியவாதத்திற்கு எதிரான கோசத்தை அடக்கப்பார்க்கிறார்கள். அடிப்படை மனித உாிமைகள், மிருகவதைத் தடுப்பு என்றெல்லாம் மூன்றாம் மண்டல நாடுகளை பூச்சாண்டி காட்டும் ஏகாதிபத்தியவாதிகள், ஸ்கொட்லாந்தின் றொஸ்லின் நிறுவனத்தின் – ஒரு வளர்ந்த ஆட்டின் பால்மடிக் கலத்திலிருந்து ஒரு முழு ஆட்டுக்குட்டியை உருவாக்கிவிட்டோம்- என்று அறிவித்தவுடன், அவர்கள அடைந்த புளகாங்கிதத்திற்கு அளவேது. ஆனால் அந்த ஒரு ஆட்டை உருவாக்குவதற்கு 300 ஆட்டு முதிர்மூலவுருக்கள் அல்லது இளங்குட்டிகள் சிதைக்கப்பட்டன என்பதே அந்தப் புளகாங்கிதத்திற்குப் பின்னால் இருந்த சோகமாகும். இது மிருகவதையின் உச்சக் கட்டம்தான் என்பது வெளிப்படை. இதனை இவர்களால் உருவாக்கப்பட்ட உயிாியல் ஆராய்ச்சிகளின் அறவியலில் எந்த வகுதிக்குள் சேர்ப்பது என்று தொியவில்லை. தற்போது ஏகாதிபத்தியவாதிகளின் நிலக்கீழ் சோதனை அறைகளில் மனிதக் குழந்தையை உருவாக்கும் முயற்சியில் எத்தனை ஆயிரம் இளம் குழந்தைக் குஞ்சுகள் அழிந்தனவோ தொியாது.
பரம்பரை உருமாற்றம் செய்யப்பட்ட உணவுகளை எடுத்துக் கொண்டால், ஐரோப்பாவில் கணிசமான அளவு மக்கள் இந்த உணவுப் பொருட்களை வெறுப்பதாக அண்மைக்கால கணிப்பீடு ஒன்று குறிப்பிடுகிறது. Women ‘s Environmental Network, Friends of the Earth, Green Peace, The Soil Association, Earth First!, Genetic Forum, SAFE Alliance, The Natural Law Party, Genetic Engineering Network, Lobbying for GMO Labeling போன்ற நிறுவனங்களும் , சமூக நலத்தாபனங்களும் பலமாக எதிாப்பியங்களை நடாத்தி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. ஐரோப்பிய அரசுகள்கூட இந்த எதிர்ப்பியங்களுக்கு செவிசாய்த்து, பாராளுமன்றத்தில அதிக வாக்குகள் பெற்று, இந்தப் பரம்பரை உருமாற்றப்பட்ட உணவுகளுக்கொதிதராகவும், மழுங்கடிக்கப்பட்ட விதைகளுக்கு எதிராகவும் சட்டங்களை உருவாக்கியுள்ளன.
பரம்பரையியல் தொழில்நுட்பங்கள் சம்பந்தமாக ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக ஆய்வுகளைச் செய்துவரும்
Dr. Janne Rissler “மக்களின் எதிர்ப்புக்கு அடிபணிந்து கம்பனிகள் பின்வாங்கிய சம்பவமும், இந்த பரம்பரை உருமாற்றப்பட்ட உணவுகளுக்கெதிராக உலகம் பூராகவும் எழுந்துவரும் எதிர்ப்புணர்வுகளும் மக்கள் சக்தியின் மாபெரும் மதிப்பைக் காட்டுகின்றது. இந்தத் தொழில் நுட்பத்தின் போக்கு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியவர்களும் மக்களே, மேலும் அமாிக்க விவசாயத் திணைக்களம் இத்தகைய ஆய்வுகளுக்கு நிதி உதவி செய்வதும் தவறானது” என்றும் கூறுகிறார். Janne Risslerயின் கருத்துப்படி, மழுங்கடிக்கப்பட்ட விதைத் தொழில்நுட்பம் நன்மையிலும் பார்க்க பல மடங்கு தீமைகளையே விளைவிக்கும். இவ்விவகாரத்தில் இறுக்கமான கட்டுப்பாடு அவசியம் என்றும், இதில் மக்களின் கருத்தும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகின்றார்.
ஏகாதிபத்தியத்தின் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வைப்பதற்கோ அல்லது நம்பிக்கை இழப்பதற்கோ இன்று நேரம் இல்லை. நாம் உடனே நடவடிக்கையில் இறங்க வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்துத்தான். அதற்கு முதன் முதலாக மக்களாகிய எம்மீது நாம் ஏற்றிக் கொள்ளும் விழிப்புணர்வுதான், வலுவான எதிர்ப்புசக்தியாக மாறி ஏகாதிபத்தியத்தின் சுரண்டல்களிலிருந்தும், அடிபணிவைத்தல்களிலிருந்தும் எம்மைக் காப்பாற்றும் என்றால் அது மிகையாகாது.
riyas@gecko.biol.ac.za
- கடலின் அகதி
- அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டி
- ஊசிப்போன உப்புமா கிண்டுதல்
- ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
- கானல் காட்டில் கவிதையும் கவிகளும்
- இருளும் சுடரும் – (தமஸ் – மொழிபெயர்ப்பு நாவல் அறிமுகம் )
- இளையராசாவின் இசையில் திருவாசகம் – பழுது ?
- 21 ஆவது நூற்றாண்டின் அணுக்கருப் பிணைவு சக்திக்கு ஆற்றல் மிக்க லேஸர் ஒளிக்கதிர்கள் (High Power Laser For Nuclear Fusion)
- திசை மாறும் திமிங்கலங்கள்
- சொர்க்கத்துக்குச் சென்றது என் சைக்கிள் (ஒரு குழந்தைப்பாட்டு)
- கீதாஞ்சலி (34) – என்னைப் பின்தொடரும் நிழல்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கரை புரண்ட காவிரியே எம் கண்கள் கலங்கியது….
- கோலம்
- மெய்வருகை…
- பெரியபுராணம்- 50 – (திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி)
- செய்தி
- பேய்மழைக் காட்சிகள் – மும்பை
- உயிர்-தொழில்நுட்பவியல் ஏகாதிபத்தியவாதம் – விதைநெல்லில் மழுங்கடிக்கப்பட்ட பரம்பரையலகு.
- sunday ‘ன்னா இரண்டு
- மானுடம் போற்றுவோம்…
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-2)
- கடைசிப் பகுதி – கானல் நதிக்கரை நாகரிகம்
- என் சுவாசக் காற்றே